தமிழ்த் திரையுலகின் மறுக்க மற்றும் மறக்க முடியாத குரலான S.P. பாலசுப்ரமணியம் அவர்கள் (SPB) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உடல் நிலை சரியில்லாமல் காலமானார். அவருடைய இந்தத் திடீர் மறைவு ஒட்டுமொத்த உலகையும் கவலையில் ஆழத்தியுள்ளது.
ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த SPB அவர்கள் இடையில் சற்று குணமாகி செப்டெம்பர் 7 அன்று மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் அவருடைய உடல் நிலை மோசமாகி உள்ளதாக தகவல் வெளியிட்டது அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை. இந்த நிலையில் தற்போது, அவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது மகன் எஸ்.பி.சரண் உறுதி செய்துள்ளார்.
இனி அவரைப் போன்றவொரு பாடகரை நாம் காண வாய்ப்ப்பில்லை. கண்டாலும் அவருக்கு இணையாகப்போவதில்லை. அவருடைய குரலையும் பாடலையும் மனதில் ஆறாத சோகத்துடன் சுமந்து கொண்டு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மரணத்துக்காக அவரது குடும்பம், ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.