புதியதொரு ஆராய்ச்சியின் படி, விண்வெளி வானிலை டைட்டானிக் பேரழிவில் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் வானிலை ஆய்வு சங்கத்தின் வானிலை இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், மிலா ஜிங்கோவா, “விண்வெளி வானிலை பேரழிவு இடம்பெற முன்னர் டைட்டானிக்கின் வழிசெலுத்தல் மற்றும் தகவல்தொடர்புகளை பாதித்திருக்கலாம், அத்துடன் மீட்பு நடவடிக்கைகளையும் பாதித்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான விண்வெளி வானிலை நிகழ்வு ?
“அன்றைய தினத்தில் குறிப்பிடத்தக்க விண்வெளி வானிலை நிகழ்வு ஒரு மிதமான மற்றும் வலுவான புவி காந்த புயலின் வடிவத்தில் இருந்தது, இது இடம்பெற்ற சோக நிகழ்வின் போது வடக்கு அட்லாண்டிக்கில்இடம்பெற்றுக் கொண்டிருந்தது என்று அவதானிப்பு சான்றுகள் தெரிவிக்கின்றன” என்று ஜின்கோவா ஆய்வின் சுருக்கத்தில் எழுதியுள்ளார்.
டைட்டானிக் ஏப்ரல் 14, 1912 அன்று, சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தின் போது வடக்கு அட்லாண்டிக்கில் கப்பலின் நேரம் இரவு 11:40 மணிக்கு ஒரு பனிப்பாறையைத் தாக்கியது. 1,500 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு லைனர் (கப்பல்) மூழ்கியது.
சயின்ஸ் டைம்ஸ் பத்திரிகையால் ஒரு சுயாதீனமான வானிலை ஆராய்ச்சியாளர் மற்றும் ஓய்வுபெற்ற கணினி புரோகிராமர் என்று வர்ணிக்கப்படும் ஜிங்கோவா, டைட்டானிக் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
பூமியில் விண்வெளி வானிலை பாதிக்கும் அமைப்புகளுக்கு வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. செப்டம்பர் 2, 1859 இல், விண்வெளி வானிலை தந்தி சேவையை சீர்குலைத்தது, நாசாவின் கூற்றுப்படி, இது “தி கேரிங்டன் நிகழ்வு” என்று அழைக்கப்படுகிறது.
மார்ச் 13, 1989 இல், புவியியல் ரீதியாக தூண்டப்பட்ட அலையோட்டங்கள் (ஜி.ஐ.சி) கனடாவில் உள்ள ஹைட்ரோ-கியூபெக் மின் வலையமைப்பை பாதித்தன. இதனால் ஒரு மின்மாற்றி செயலற்றுப் போய் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்த மாபெரும் இருட்டடிப்பு (மின் துண்டிப்பு) ஏற்பட்டது என்று விண்வெளி நிறுவனம் தனது இணையதளத்தில் விளக்குகிறது.
“இந்த நிகழ்வை ஏற்படுத்தும் புவிக் காந்த புயல், மார்ச் 9, 1989 அன்று சூரியனில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சூரிய வட்டப் பெரு வெளியேற்றத்தின் [கொரோனல் மாஸ் எஜெக்ஷன்] விளைவாகும்” என்று அக்கூட்டுரை கூறுகிறது.
“சிறிய துகள்கள்-எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகள்-சூரிய செயல்பாடுகளால் துரிதப்படுத்தப்பட்டு, ஆற்றல்மிக்க துகள்களின் புயல்களை உருவாக்குகின்றன. சூரியனில் இடம்பெறும் பௌதீக நிகழ்வுகள் இந்த துகள்களை சூரிய ஒளியில், ஒளியின் வேகத்தில் அனுப்ப முடியும். அதாவது அவை அரை மணி நேரத்திற்குள் இவை பூமியை அடைகின்றன, அதேபோல் மற்ற உலகங்களையும் இதேபோன்ற குறுகிய கால அளவுகளில் பாதிக்கலாம். இந்த துகள்கள் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன, எனவே அவை விண்கல மின்னணுவியலை சேதமாக்கக் கூடும் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தாகலாம். குறிப்பாக ஆழமான விண்வெளியில், பூமியின் காந்தப்புலத்தின் பாதுகாப்பிற்கு வெளியே கூட ஆபத்தை விளைவிக்கக்கூடும். மேலும் இதுபோன்ற துகள்களுக்கான குறுகிய எச்சரிக்கை நேரம் (வேகமான பயண நேரம்) அவற்றைத் தவிர்ப்பதனை கடினமாக்கி விடும்.”
-எமது முன்னைய சூரிய வட்டப் பெரு வெளியீடு குறித்த கட்டுரையில் இருந்து உங்கள் விளக்கத்துக்காக சிறிய பகுதி.
சூரிய புயல் பற்றி முழுமையாக வாசிக்க கீழுள்ள கட்டுரையை அழுத்தவும்
பார்க்கர் சூரியக் கலம் : பகுதி 1 : மாறும் சூரியக் காற்று
டைட்டானிக்கின் புதுமைகள்
டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்தப் பேரழிவு தொடர்ந்து தீராத தேடல்களைத் தருகிறது. கடந்த ஆண்டு, EYOS எக்ஸ்பெடிஷன்ஸ் தலைமையிலான டைட்டானிக் மூழ்கிய இடத்துக்கான பயணம் ஒன்று வட அட்லாண்டிக் கடற்பரப்பில் சீரழிந்து கிடக்கும் டைட்டானிக்கின் நிலையை வெளிப்படுத்தியது.
பிபிசியால் பெறப்பட்ட டைவ் பற்றிய காட்சிகள் டைட்டானிக்கின் துருப்பிடித்த வளைவு மற்றும் கப்பலின் சிதைந்த மேலோட்டத்தின் சில பகுதிகளைக் காட்டின. சிதைவுகள் விரைவாக மோசமடைந்து வருகின்ற போதிலும், டைட்டானிக்கின் சில ஜன்னல் பாகங்களில் கண்ணாடிகளைக் காணலாம்.
மீட்புக் கப்பலின் கேப்டன் பயன்படுத்திய கோணமானி 2016 ஆம் ஆண்டில் வெறும் 97,000 டாலருக்கு விற்கப்பட்டது. டைட்டானிக்கில் உயிர் பிழைத்தவரான மோலி பிரவுன் கார்பதியா கேப்டனுக்கு வழங்கிய ஒரு கோப்பை 2015 இல் 200,000 டாலருக்கு விற்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், டைட்டானிக்கால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து மீட்கப்பட்ட கடல் கறை பட்ட கடிதம் ஏலத்தில் 166,000 டாலருக்கு விற்கப்பட்டது.
கடலுக்கடியில் தொலைந்து போன நகரங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
முகப்பு பட உதவி : wikimedia