தென் கொரியாவை தளமாகக் கொண்ட இணைய சேவை வழங்குநரான SK பிராட்பேண்ட் (SK Broadband) நிறுவனம் , Netflix க்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.
மேலும் அந்நிறுவனம் வழக்குக்கான காரணமாக தெரிவித்துள்ளது யாதெனில், Netflix இல் சமீபத்தில் வெளியான ‘Squid Game’ TV தொடரின் காரணமாக Netflix இன் சமீபத்திய நெட்வொர்க் ட்ராஃபிக் மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது என்பதால் ஆகும்.
எஸ்கே பிராட்பேண்ட் (SK Broadband) நிறுவனம் நெட்வொர்க் ட்ராஃபிக் (network traffic) அதிகரிப்பால் ஏற்பட்ட அதிகப்படியான செலவை நெட்ஃபிக்ஸ் (Netflix) நிறுவனம் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Squid Game என்பது டிஸ்டோபியன் த்ரில்லர்(dystopian thriller type genre) வகையை அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய Netflix தொடர் ஆகும்.
Netflix செய்தித் தொடர்பாளர் CNBC க்கு Netflix க்கு எதிராக SK பிராட்பேண்ட் தாக்கல் செய்த புகார் குறித்தும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ஸ்ட்ரீமிங் அனுபவத்தை வழங்குவதற்காக SK பிராட்பேண்டுடன் எப்படி திறந்த உரையாடல் நடத்தலாம் என்பது குறித்தும் கவலையடைகிறோம் என்று கூறியுள்ளார்.
நெட்வொர்க் பயன்பாட்டிற்கு SK பிராட்பேண்டிற்கு நியாயமான தொகையை Netflix செலுத்த வேண்டும் என்று தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், Netflix வெளியீட்டாளரால் இந்த அறிக்கையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.