உடலை வலிமையாக வைத்து கொள்ள சில அறிவுரைகள்!!
உடலை வலிமையாகவும் மிகவும் கவர்ச்சிகரமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இளைஞர்களின் பலரின் ஆசை மற்றும் கனவாகவே இருக்கும். இதற்காகவே உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருப்பார்கள்.
சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்வை விறுவிறுக்க கடும் சிரமத்தோடும் உடற்பயிற்சி செய்வார்கள். உடற்பயிற்சி ஒரு பக்கம் இருக்க உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் உடல் தசைகள் மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி உடல் தசைகளை வலுப்படுத்த இயற்கையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் புரோட்டின் பவுடர், எனர்ஜி, பூட் போன்ற செயற்கை ஊட்டச்சத்துக்களை நம்மில் பலரும் சாப்பிடுகின்றனர்.
இப்படி டப்பாக்களில் விற்கப்படும் செயற்கையான உணவுகளை உட்கொள்ளும் போது அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் போய் சேரும். மற்ற சத்துக்கள் முழுமையாக கிடைக்காது. ஆனால் நாம் தசைகளை வலுப்படுத்த நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் தசைகளை வலுப்படுத்த தேவையான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் புரதம் மட்டுமல்ல உடலுக்குத் தேவையான நார்ச்சத்து வைட்டமின்கள் தாதுக்கள் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் போன்ற மற்ற சத்துக்களும் கிடைக்கும் இப்படி இயற்கையாக தசைகளை வலிமைப்படுத்த என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று நாம் இப்பொழுது பார்போம்.
முட்டை
தசைகளை வலிமைப்படுத்தும் உணவுகளில் முதலாவது முட்டை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையில் இருந்து ஆறிலிருந்து எட்டு கிராம் வரையிலான புரதச்சத்து அதாவது புரோட்டின் கிடைக்கிறது. ஒன்பதற்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் இருக்கின்றன. முட்டையில் வைட்டமின்கள் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைவாகவே இருக்கிறது. அனைத்து சத்துக்களும் நம் உடல் வலிமை பெறுவதற்கு மிகவும் உதவக் கூடியது.
இறைச்சி
100 கிராம் கோழி இறைச்சியில் 30 கிராம் புரதச்சத்து உள்ளது இவை செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிக்கிறது இறைச்சி உடல் தசைகளுக்கு நல்ல வலு சேர்க்கக் கூடியது.
தண்ணீர்
நம் உடலில் எழுபது சதவீதம் தண்ணீர் இருக்கிறது. அதே போல தசைத் திசுக்களில் எழுபத்து ஐந்து சதவீதம் தண்ணீரால் ஆனவைகள். தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசைகளின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று. தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால் நீர்வறட்சி ஏற்படும் இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிப்பு ஏற்பட்டு தசை வலிமை குறைய வாய்ப்புள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையை வலிமையாக்கும்.
மீன் எண்ணெய்
மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்கு தேவையான Anti-inflammatory அதிக அளவில் உள்ளது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதாவது மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் கரைவதோடு வலிமையான தசைகளையும் உருவாக்கும்.
ஓட்ஸ்
இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், தாது உப்புகள், மற்றும் வைட்டமின்கள் நிறைவாகவே இருக்கின்றன. தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக் கூடியது உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவு ஓட்ஸ்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் உள்ள பைட்டோ ஸ்டீராய்டுகள் என்ற வேதிப்பொருள் இருபது வீதம் தசை வளர்ச்சிக்கு உதவக் கூடியது என்று அமெரிக்காவில் உள்ள ரக்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். பசலைக் கீரையை அன்றாட உணவுகளில் சேர்த்து வரும் போது தசைகளை வலிமையாக்க முடியும்.
அன்னாசி பழம்
அன்னாசிப் பழத்தில் ப்ரோமெலைன் என்ற என்சைம் இருக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதோடு தசை வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் உடற்பயிற்சிக்குப் பிறகு இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
வாழைப் பழம்
வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது உடலின் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால் அது தசை வளர்ச்சிக்கும் உதவும்.
புரோக்கோலி
புரோக்கோலியில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது இவை தசைகளின் திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து தாதுச் சத்துகளும் இதில் அதிகளவு உள்ளதால் தசைகளின் வளர்ச்சிக்கு உதவக் கூடியது. தசைகளை வலிமையாக்க அவ்வப்போது உணவுககளில் புரோக்கோலி எடுத்து வருவது மிகவும் நல்லது.
பாதாம்
பாதாம் பருப்பில் கொழுப்பு சத்து, புரதம், வைட்டமின் ஈ ,ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இவை தசைகளின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிப்பதோடு உடல் வலிமை பெற பெரிதும் உதவக் கூடியது. தினமும் பாதாமை உணவில் சேர்த்து வருவது தசைகளை வலிமைப்படுத்தும்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எமது உடல் ஆரோக்கியம் பக்கத்தை பார்வையிடுங்கள்.
Wall image source:https://www.coachmag.co.uk/exercises/2017/gym-workouts-what-not-to-do