நாளை ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரிய கிரகணம்..!!
நாளை ஜூன் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரிய கிரகணம்..!!
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது அதன் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வு சூரிய கிரகணமாகும். சூரியன் முழுவதும் நிலவால் மறைக்கப்படுவது முழு சூரிய கிரகணம்.
வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.
சூரிய கிரகணம் நிகழும் நேரம் :
காலை 10.22 மணிக்கு தொடங்குகிறது.
மதியம் 11.59 மணிக்கு உச்சத்தை அடைகிறது.
பிற்பகல் 01.41 மணிக்கு முடிவடைகிறது.
எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்?
ரோகிணி,மிருகசீரிஷம்,திருவாதிரை,சித்திரை,அவிட்டம்,ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?
வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது.தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் பார்ப்பது பாதுகாப்பானது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும் போது நிரந்தர கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சூரிய கிரகணம் :
அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ராகு மறைக்கும்போது ராகு கிரகஸ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது கிரகஸ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களை தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
குறிப்பாக கிரகண நாளில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கதிர் வீச்சுக்களால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே தான் கர்ப்பிணிகளை வெளியே விட மாட்டார்கள். கிரகண கதிர் வீச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இந்த கிரகணத்தில் நாம் செய்ய வேண்டியது கிரகண நேரத்தில் வெளியே வர கூடாது. தர்ப்பை புல்லை வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களிலும் மேலே போட்டு வைப்பது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் சாப்பாட்டின் மேல் போட்டு வைக்கவும் கிரகணம் முடியும் வரை.
இந்த தர்ப்பை புல்லிற்கு எல்லா விதமான தீய சக்தியில் இருந்து நம்மை காக்க கூடிய தன்மை உள்ளது. தர்ப்பை சாதாரண புல் அல்ல தர்ப்பை காட்டில் விஷ பாம்புகள் நுழையாது. இப்படி எல்லாம் கிராமத்தில் சொல்லுவார்கள். அதனால் இந்த கிரகண காலத்தில் இந்த தர்ப்பை புல்லை பயன்படுத்துங்கள் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சூரிய கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
கிரகணம் முடிந்த பிறகு வீட்டை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இது போன்ற மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.
Wall image source:https://www.cuinsight.com/solar-eclipse-sun-eating-dragons-service.html