தமிழ்த் திரை உலகில் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் கலை சேவையாற்ற வரும் நடிகைகளின் பட்டியலில் ஜோதிகா, சிம்ரன், மீனா ஆகியோரைத் தொடர்ந்து தல அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் திருமதி ஷாலினி அஜித் சிறிய வேடத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகை ஷாலினி திருமணத்திற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.