இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
மனதை கட்டுப்படுத்துவது நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அத்தியாவசியமான ஒரு விடயமாகும். மனக்கட்டுப்பாடு பற்றி இலகுவாக புரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். சுற்றி ஆறு பேர் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு இடத்திலே தூரத்தில் கேட்கின்ற ஏதாவது ஒரு சிறிய சத்தம் ஒரு பறவையின் ஒலியை அல்லது ஒரு மனிதனுடைய சத்தமும் ஏதேனும் ஒன்றை செவிமடுக்க முயற்சி செய்யுங்கள்.
அவ்வாறு முயற்சி செய்யும் பொழுது உங்களுக்கு சிறிது கஷ்டமாக இருக்கும். தற்பொழுது உங்களுடைய கண்களை மூடிக் கொள்ளுங்கள் இலகுவான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள் வரி எந்த செயற்பாடுகளும் இல்லாமல் அந்த சத்தத்தை அவதானிக்கும் செயற்பாட்டை மட்டும் மேற்கொண்டு பாருங்கள். நீங்கள் அந்த சத்தத்தைக் கேட்பதற்கான வாய்ப்புக்கு அதிகரித்திருப்பது தற்பொழுது உங்களுக்கு அது இலகுவாக இருக்கும்.
இதுதான் மனக்கட்டுப்பாடு அடிப்படை. நம்முடைய புலன்களால் நாம் உள்வாங்கிக் கொள்ளும் விடயங்களால் தான் நம்முடைய மனம் அடிக்கடி சிதறுகிறது. இவ்வாறான கவனச் சிதறலை நான் குறைக்க வேண்டுமானால் முதலில் நம்முடைய புலன்களை கட்டுப்படுத்த நாம் அறிந்திருக்க வேண்டும். திடீரென்று ஒரு சத்தம் கேட்டவுடன் என்ன நடந்தது எதற்காக நடந்தது என்று திரும்பிப் பார்க்கின்றன அப்படியே அந்த விடயம் பற்றி பேசுவதில்லை நேரத்தை கழித்து விடுவோம்.
நம்முடைய வேலைக்கு திரும்புவதை மறந்து விடுவோம். இவர் செய்வதை தவிர்க்க வேண்டும் ஒரு சத்தம் கேட்டால் உங்களுக்கு நேரடியாக தற்பொழுது பாதிப்பு ஏற்படாத காரணத்தால் அதனை பற்றி அதிகம் சட்டை செய்யாமல் உங்களுடைய செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு பின்பு பொறுமையாக அதனை பார்த்துக்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் சிறிது நேரம் ஒரு படத்தை பார்த்து விட்டு கண்களை மூடி அந்த படத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கலாம் கண்களை மூடி கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் படத்தினுடைய ஓரங்கள் அதிலிருந்து நிறங்கள் என்று ஒவ்வொன்றாக நீங்கள் பூர்த்தி செய்து கொண்டு வரும் பொழுது சிறிது நேரத்திலேயே உங்களுடைய மனமார்ந்த சிதறுவதை நீங்கள் அவதானிக்கலாம்.
உங்களுடைய எண்ணம் வேறு பக்கம் திரும்பும். அந்த வேளைகளில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் தான் அந்த எண்ணங்களை அவதானியுங்கள். அது ஏன் வருகிறது என்கின்ற ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவை இல்லை. வந்த இந்த வசனத்தை தானாக போக விட்டுவிட்டு வேண்டும் உங்களுடைய கற்பனையிலே அந்தப் படத்தை வரைகின்ற செயல்பாட்டை மேற்கொள்ளுங்கள். இப்படி இன்னும் பல பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகள் இருக்கின்றன. ஏதேனும் இலகுவான ஒன்றை தெரிவு செய்து முதலில் ஆரம்பித்து உங்களுடைய மனக் கட்டுப்பாட்டை வளர்க்க ஆரம்பியுங்கள்.
image source:https://www.additudemag.com/brain-stimulation-and-adhd-cravings-addiction-and-regulation/