இன்றிரவு வானில் அபூர்வம்.. பெனும்ப்ரல் சந்திர கிரகணம்..
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இன்றிரவு வானில் அபூர்வம்..
2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி நிகழ்ந்தது. இந்நிலையில் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்த மாதம் ஜூன் 5ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது.
இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திர கிரகணம் ‘ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ்” Strawberry Moon Eclipse எனப்படும். ஜூன் மாதத்தின் முழு நிலவு ஸ்ட்ராபெர்ரி மூன் என்று அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் நிகழும் நேரம்:
சந்திர கிரகணம் ஜூன் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று இரவு 11:15 மணிக்கு தொடங்கி ஜூன் 6ஆம் தேதி (நாளை) சனிக்கிழமை அதிகாலை 2:34 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இது ஆகும்.
வெள்ளிக்கிழமையான இன்று முழு நிலவு நாளில் வானத்தில் ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் நிகழப்போகிறது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி அறுவடைக் காலமாகும். அதனால் தான் இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்ப்ரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் என பெயர் வைத்துள்ளனர்.
மொத்தத்தில் மூன்று விதமான சந்திர கிரகணங்கள் உள்ளன. லூனார் எக்லிப்ஸ், பார்ஷியல் லூனார் எக்லிப்ஸ் மற்றும் பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ். தற்போது நிகழ இருப்பது பெனும்ப்ரல் லூனார் எக்லிப்ஸ் ஆகும்.
பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்றால் என்ன?
இந்த நிகழ்வின் போது ஜொலித்துக் கொண்டிருக்கும் சந்திரனை ஒரு புகை அடித்தது போல மங்கலானதாக மாறுவதை பார்க்க முடியும். அதாவது பூமியின் வெளிப்புற நிழல் மட்டும் சந்திரனின் மீது விழும் என்று கூறப்படுகிறது. இதனையே பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இதன் காரணமாக முழுமையான சந்திர கிரகணத்தைப் பார்க்கும் அனுபவத்தை பெற முடியாது.
சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது?
சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரிய கிரகணமும் நிகழ்கிறது.சந்திர கிரகணம் என்பது சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவது ஆகும்.
ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸானது நிகழும்போது சந்திரனின் 57 சதவிகிதம் பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும். இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரம், பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது.
எங்கெங்கு தெரியும்… யாரால் பார்க்க முடியும்…?
இன்றைய தினம் நிகழும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் மாத்திரமல்ல ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பெரும்பாலான பகுதிகளில் தெரியும். மேலும், தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் தென்படும். என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தென் இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது. என்பதால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே கூறலாம்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.