இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
வாசலில் உள்ள நிலைப்படியில் ஏன் மஞ்சள் தடவ வேண்டும்?
வெளியில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளை தவிர்க்க வழிவகுக்கும்.
ஆரத்தி எடுப்பது ஏன்?
மஞ்சள் ஓர் சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான். சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிராயணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிகள் அதிகம் இருக்கும். இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். அதனால் தான் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து வருகிறார்கள்.
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவது ஏன்?
வீட்டில் இருக்கும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
உச்சிவெயிலில் கிணற்றை எட்டி பார்க்கக்கூடாது என்பது ஏன்?
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம், கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டுவது ஏன்?
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.