பண்டைய மக்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஒரு கண்ணோட்டம்!!
பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் பல வகையான அறிவியல் நுணுக்கங்களுடன் செயல்பட்டு இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம் குறிப்பாக கட்டிடக்கலைகளும் மற்றும் சிற்பம் செய்யும் கலைகளும் கைதேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து இருப்போம்.
இதை தவிர்த்து பண்டைய மக்களின் அறிவியல் அறிவை கண்டு வியக்கும் அளவிற்கு பண்டைய மக்களின் கண்டுபிடிப்புகள் இருந்திருக்கின்றன. ஆம் நாம் இன்றைய வாழ்வில் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களால் ஒரு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளாகும்.
இப்படி பண்டைய மக்கள் கண்டு பிடித்து இன்றும் நம் பயன்பாட்டில் இருக்கும் அசத்தலான நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றிதான் இதில் காண இருக்கிறோம்.
Automatic Doors
தானியங்கி கதவுகள் பழங்காலத்தில் வாழ்ந்த கிரேக்க மக்கள் தங்களது கோவில்களில் உள்ள கதவுகளை தானாக திறக்கும் தானியங்கி கதவுகளாக அமைத்துள்ளனர் நீராவி இயந்திரத்தின் மூலம் இந்த கதவுகளை இயக்கியுள்ளனர்.
இதை அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் பார்ப்பதற்கு கண் கட்டி வித்தை செய்வது போல காட்சி தருவதாக கருதியுள்ளனர். பழங்கால இந்த தொழில்நுட்பத்தையே நவீன மயமாக்கி இருபதாம் நூற்றாண்டில் நாம் தற்போது பெரிய பெரிய மால்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் தானியங்கி கதவுகளை பயன்படுத்தி வருகின்றோம்.
Vending Machine
இந்த இயந்திரமானது முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களால் கோவில்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் ஜாடி போன்ற வடிவம் கொண்ட இந்த இயந்திரத்தில் ஒரு நாணயத்தை ஒரு சிறு உண்டியல் போன்ற அமைப்பில் போடும்போது புனிதநீர் இயந்திரத்தில் இருந்து வெளியே வருவது போன்ற அமைப்பை வடிவமைத்து பயன்படுத்தியுள்ளனர். பின்னர் பண்டைய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு 1880 ஆம் நூற்றாண்டில் நவீன வென்டிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு மக்களால் பல உணவுகங்களிலும் மால்களிலும் உணவுப் பொருட்களை பெற பயன்படுத்த தொடங்கினர். பின்னர் இந்த இயந்திரத்தை புத்தக கடையிலும் தபால் நிலையங்களிலும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளனர்.
Odometer
முதலாம் நூற்றாண்டில் ஆர்க்கிமிடீஸ் என்பவரால் ஓடோமீட்டர் எனும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது இந்த கருவியானது பயணிக்கும் தூரத்தையும் வேகத்தையும் கணக்கிடும் கருவி ஆகும்.
இவரை தொடர்ந்து சீனாவை சேர்ந்த ஜாங்ஹெங் என்பவரால் இரு சக்கரங்களை வைத்து நாம் பயணிக்கும் தூரத்தைக் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 1925 ஆம் ஆண்டில் நவீன முறையில் அனைத்து வாகனத்திலும் சிறிய அளவில் ஓடோமீட்டர் கருவி பொருத்தப்பட்டு நான் பயணிக்கும் தூரத்தையும் வேகத்தையும் கண்டுபிடிக்கும் கருவியாக நாம் பயன்படுத்தி வருகிறோம்.
Seismoscope
இந்த கருவியானது 132 ஏடியில் சீனாவை சேர்ந்த ஜாங்ஹெங் என்பவரால் கண்டுபிடிக்கபட்டு உள்ளது இந்த கருவியானது நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கும் கருவியாகும். இதில் அமைந்துள்ள டிராகனின் வாயில் வெண்கல உருண்டை அமைக்கப்பட்டுள்ளது நிலநடுக்கம் வருவதற்கு முன்னர் நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகள் இனால் டிராகன் வாயில் உள்ள உருண்டை நழுவிக் கீழே அமைந்துள்ள தவளையின் வாய்க்குள் சென்றால் நிலநடுக்கம் ஏற்படும் என்பதை உறுதி செய்ய இந்த கருவி பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருவியானது எவ்வளவு வலிமை மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை கணக்கிடாது.
இந்த கருவியை அடிப்படையாகக் கொண்டே 1935 ஆம் ஆண்டு சார்ள்ஸ் ரிச்டர் என்பவரால் நவீன நிலநடுக்கம் மற்றும் புயல் ஆகியவற்றை குறியீட்டின் மூலம் கணக்கிடக்கூடிய கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SunGlass
பழங்காலத்தில் பனியில் வாழும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தங்களது கண்களை அடர்ந்த பனியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல வருடங்களுக்கு முன்பே பனிப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் கண்ணாடியை கண்டுபிடித்துள்ளனர். இதையே பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சீனர்கள் சூரிய வெப்பத்திலிருந்து தங்கள் கண்களை பாதுகாக்க தங்கள் முக அளவிற்கு ஏற்றாற் போல் நவீன கண்ணாடிகளை கண்டுபிடித்துள்ளனர். இதுவே பிறகு பல சினிமா பிரபலங்களால் பயன்படுத்தப்பட்டு பிரபலமடைந்தது ஆனால் பெரும்பாலும் சன்க்ளாஸ் ஆனது சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1921 ஆம் ஆண்டு சாம் ஃபாஸ்டர் என்பவரால் கடற்கரையில் அணியக்கூடிய சன்கிளாஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு சிறப்புகள் உள்ளன அதுவும் இப்போது பார்க்கலாம்!!
Mr.Pynchon and the settling of springfield
1933 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியர் பெர்டோ ரோமானோ என்பவரால் வரையப்பட்ட ஓவியத்தில் தற்போது நாம் பயன்படுத்தும் மொபைல் போன் போன்ற அமைப்பை கையில் வைத்தவாறு ஒருவர் அமர்ந்திருப்பது போன்று ஓவியத்தில் வரையப்பட்டுள்ளது. ஆனால் இது பார்ப்பதற்கு மொபைல் போன்று தோன்றினாலும் பலர் இதை முகம் பார்க்கும் கண்ணாடியாக கூட இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த ஓவியத்தை வைத்து பண்டைய காலத்தில் மொபைல் போன்ற தொழில் நுட்பத்தை பண்டைய மக்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான விடையை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Cathedral of Salamanca
ஸ்பெயின் நாட்டில் 300 வருடங்களுக்கு முன்னர் எழுப்பப்பட்ட cathedral of Salamanca கோபுரத்தில் உள்ள சிற்பத்தில் விண்வெளி வீரர்கள் அணியக்கூடிய உடை அணிந்தவாறு சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இது 300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் விண்வெளிக்குச் சென்றார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதற்கான பதிலை ஆராயும்போது 1992 ஆம் ஆண்டில் இந்த கட்டிடமானது மறுசீரைமப்பு செய்யப்பட்டுள்ளது அப்பொழுது இந்த விண்வெளி வீரர்களின் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூ.றப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
image source:https://247wallst.com/special-report/2019/04/25/ancient-inventions-we-still-use-today/