Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சனி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

  • December 25, 2020
  • 235 views
Total
19
Shares
19
0
0

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது நாளை சனிக்கிழமை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

மேஷம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

Zodiac, Horoscope, Astrology, Astrological, Zodiacal
IMAGE SOURCE

உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.

ஜீவன ஸ்தான அதிபதி ஜீவன ஸ்தானத்தில் பலம் பெறுவதால் தொழில் சார்ந்த முயற்சிகளில் சிறப்படையும். தொழில்களில் தனவரவு மேம்படும்.

  • சகோதர சகோதரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் மாறி புரிதல் ஏற்படும்
  • திருமண ஏற்பாடுகளுக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் சாதகமான முடிவுகள் உண்டாகும்.
  • பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் இழுபறியில் உள்ள காரியங்கள் வெற்றியை ஏற்படுத்தி தரும்.
  • இடம் சார்ந்த விஷயங்களை கவனமாக கையாளுவதன் மூலம் நற்பலன்களை அள்ளித்தரும்.
  • பொதுவாழ்வில் நற்பெயரும், புகழும் மேலோங்கும்.
  • செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்
  • அலைச்சல்கள் அதிகரித்த போதிலும் ஆதாயம் இருக்கும்.
  • தாயாரின் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
  • நண்பர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று அவரவர்களின் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

ரிஷபம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

Taurus | Zodiac Signs | The Old Farmer's Almanac
IMAGE SOURCE

உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார்.

அஷ்டம சனியினால் பிடிபட்டு விடுதலையின்றி தவித்து வந்த காலம் மாறி இப்போது சனிபகவான் அனைத்துவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளிக்கொடுத்து மங்கள சனியாக வருகிறார்.

  • மனதில் புதிய நம்பிக்கையும், தெளிவும் பிறக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.
  • தங்களது சேமிப்பு உருமாறி வீடு மற்றும் மனை நிலங்களாக வாங்கும் யோகம் உண்டாகும்.
  • பொன், பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
  • பயணம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும்.
  • சபை சார்ந்த ஆதரவுகள் சாதகமாக அமையும்.
  • பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான சிக்கல்கள் குறையும்.
  • பொருளாதாரத்தில் இருந்து வந்த முடக்கநிலை சீராகி வரவு செலவுகள் சமநிலைப்படும்.
  • வெளிவட்டார நண்பர்களிடம் வாங்கிய பணத்தை சரியான நேரத்தில் கொடுத்து நற்பெயரை தக்க வைத்துக்கொள்வீர்கள்.

 சனிபகவானை தரிசித்து வருவதன் மூலம் சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்
IMAGE SOURCE

உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்து வாழ்க்கையில் புதிய பரிணாமத்திற்கு அழைத்து செல்வார்.

  • தொழிலில் சற்று அதிக ஈடுபாட்டை செலுத்துவதன் மூலம் தொழில் நல்ல நிலைக்கு உயரும்.
  • குடும்பத்தின் பொருளாதார நிலை மந்தநிலையுடன் காணப்படும்.
  • தந்தையின் ஆரோக்கியம் சீரடையும்.
  • எதிர்பாராத சில வாய்ப்புகள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும்.
  • மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
  • குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

கடகம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்
IMAGE SOURCE

உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ரண ருண ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் உங்களின் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சென்றார். சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

  • அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெறுவீர்கள்.
  • உயர்கல்வி படிப்பவர்களுக்கு படிப்பில் மந்தத்தன்மை உண்டாகும்.
  • மாணவர்கள் தங்களது பாடத்தை ஒருமுறைக்கு பலமுறை படிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
  • போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டவர்கள் வெற்றி பெறுவீர்கள்.
  • உடல் சோர்வினால் திட்டமிட்ட காரியங்களில் காலதாமதம் ஏற்படலாம்.
  • ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் கவனக் குறைவினால் அவப்பெயர்கள் தோன்றி மறையும்.
  • கல்விக்கடன் தொடர்பான அலைச்சல்கள் அதிகரித்தாலும், சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
  • வாகனப் பயணங்களில் சற்று நிதானம் வேண்டும்

அஷ்டமி தோறும் விரதமிருந்து பைரவர் வழிபாடு மேற்கொள்வது குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழலை உண்டாகும்.

சிம்மம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்
IMAGE SOURCE

உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு ரண ருண ஸ்தானமான 6ஆம் இடத்தில் இருக்கிறார்.

  • தாங்கள் தொடங்கும் முயற்சியில் சற்று சோம்பேறித்தனத்தை தவிர்ப்பதன் மூலம் எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.
  • மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும்.
  • பூர்வீக சொத்துக்களில் ஏதேனும் ஒரு பங்கு தங்களுக்கு உதவிகரமாக அமையும்.
  • மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு ஜாமீன் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும்.
  • வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியான உரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதியான போக்கை கடைப்பிடிக்க முடியும்.
  • எதிர்காலம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.
  • வீட்டுக்கடன் வாங்க நினைத்தவர்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு ஆகும்.

சனிபகவானை தரிசித்து வர நன்மைகள் பெருகும்.

கன்னி ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்
image source

உங்கள் ராசிக்கு 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் இருக்கிறார்.

  • குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும்.
  • குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழலும், மாற்றமும் உண்டாகும்.
  • அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும்.
  • மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும்போது கவனம் வேண்டும்.
  • உடைமைகள் கொடுப்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

சனிபகவானை தரிசித்து வர நன்மைகள் பெருகும்.

துலாம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்
image source

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருக்கிறார்.

  • நெருங்கிய உறவினர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும்.
  • எதிர்பார்த்த கடன் உதவி கிடைத்தாலும் அளவுடன் இருப்பது மேன்மையை அளிக்கும்.
  • மனதில் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும்.
  • குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்வதற்கான சூழல் உண்டாகும்.
  • ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.
  • நிலுவையில் இருந்துவந்த வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய தீர்வு கிடைக்கும்.
  • பணி நிமிர்த்தமான வேலைகளில் கவனம் வேண்டு.

ஞாயிற்றுக்கிழமைதோறும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்துவர முயற்சிகள் கைகூடும்.

ஏனைய ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை நாளை பார்ப்போம்….

சபரிமலைநாதரின் தவக்கோல தரிசனம்

Post Views: 235
Total
19
Shares
Share 19
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் : 2020க்கு  சிறந்த திட்டங்கள்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் : 2020க்கு சிறந்த திட்டங்கள்

  • December 25, 2020
View Post
Next Article
சனி

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2

  • December 26, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.