சாம்சங் தனது புதிய வகைக் கைத்தொலைபேசிகளுக்கு அதிலும் குறிப்பாக காலக்சி நோட் தொடருக்கு ஒரு புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளது. தன்னுடைய முதன்மையான காலக்சி எஸ் அப்டேட்டுகளில் இருந்து சில பகுதிகளை பயன்படுத்தி அவற்றில் சிறிய அளவிலான முன்னேற்றங்களை செய்துவிட்டு நன்கு ஸ்டைலான வடிவமைப்பை கொடுத்து வெளியிடுகிறார்கள். இந்த சாம்சங் காலக்சி நோட் 20 அல்டரா கூட அந்த வகையான ஒரு தொலைபேசியாகத்தான் வெளிவந்திருக்கிறது.
சாம்சுங்கிடம் இருந்து புதிதாக என்ன வருகிறது என்று பார்த்தோமானால், அதன் வழமையான முதன்மைத் தர செல்லிடத்தொலைபேசி அம்சங்களோடு புதிய வடிவமுடைய அல்ட்ரா என்ற பெயர் மட்டும்தான். இந்த பெயரின் மூலமாக அவர்கள் சொல்ல வருவது, ஒவ்வொரு அம்சத்திலும் உச்ச அளவு மற்றும் சற்று பொருமிக் கொண்டு இருக்கும் கேமெரா வடிவமைப்பு என்பதுதான் போலும்.
அதுமட்டுமல்லாமல் அல்டரா என்பதன் மூலம் அல்டரா விலையையும் குறிக்கிறார்கள் போலும். சாம்சங் காலக்சி நோட் 20 அல்டராவினுடைய விலை,
- 128 GB – $1299.99( 95,648.65 இந்திய ரூபாய்கள்)
- 512 GB – $1449.99( 106685.12 இந்திய ரூபாய்கள்)
சாம்சங்கின் நடைமுறைகளை இலகுவாக்க புரியலாம்: அவை யூகிக்கக்கூடியவை, அவை திறன்களை வளர்க்க உங்களை அனுமதிக்கின்றன, அவை வசதியாகவும் பழக்கமாகவும் இருக்கின்றன. ஆனால் இது உங்களை ஒரு சிறிய வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளச் செய்யும். ஆனால், 20 அல்ட்ரா அந்த வலையைத் தவிர்க்கிறது, அதிர்ஷ்டவசமாக – இது புதிய யோசனைகளைக் கொண்டிருப்பதால் அல்ல, ஆனால் அதே பழைய விடயங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்துபவற்றை ஒழுங்காகச் செய்வதனால்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அம்சங்கள்
- காட்சித்திரை : 6.9-இன்ச், 3088 x 1440 AMOLED, HDR10 + சான்றளிக்கப்பட்ட, 120Hz மாறி புதுப்பிப்பு வீதம்
- பரிமாணங்கள்: 164.8 x 77.2 x 8.1 மிமீ, 208 கிராம்
- முன் கேமரா: 10 மெகாபிக்சல், எஃப் / 2.2, 1.22μ மீ
- பின்புற அல்ட்ராவைடு கேமரா: 12 மெகாபிக்சல், எஃப் / 2.2, 120 டிகிரி எஃப்ஒவி, 1.4μ மீ
- பின்புற டெலிஃபோட்டோ கேமரா: 12 மெகாபிக்சல், எஃப் / 3.0, 20 டிகிரி எஃப்ஒவி, 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 50 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 1.0μ மீ
- பின்புற பிரதான கேமரா: 108-மெகாபிக்சல் (12 க்கு பின்), OIS, f / 1.8, 1.33-இன்ச் சென்சார் அளவு, 79 டிகிரி FOV, 0.8μm (12 மெகாபிக்சல்களில்), லேசர் ஆட்டோஃபோகஸ்
- செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+
- ரேம்: 12 ஜிபி
- சேமிப்பு: 128 ஜிபி / 512 ஜிபி, மைக்ரோ எஸ்டி வழியாக விரிவாக்கக்கூடியது
- பேட்டரி: 4,500 எம்ஏஎச்
- பிற விவரக்குறிப்புகள்: வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், ஃபாஸ்ட் சார்ஜிங், என்எப்சி, எம்எஸ்டி, இன்-ஸ்கிரீன் மீயொலி கைரேகை சென்சார்,டொல்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் , யுடபிள்யூபி, ஐபி 68 நீர் எதிர்ப்பு
திரை வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
சாம்சங் திரை மிகச் சிறந்ததாக இருப்பதற்கான காரணம் ரிசல்யூஷன் அல்லது கண்ணாடி அல்ல; புதுப்பிப்பு வீதமாகும். அது 120 ஹெர்ட்ஸ் வரை செல்கிறது, சாம்சங்கிற்கு இதுவே முதலாவது மாறி புதுப்பிப்பு வீதமாகும். காண்பிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு திரை மாறும் வகையில் சரிசெய்கிறது, அதுவே, எதுவும் நகரவில்லை என்றால் 10 ஹெர்ட்ஸ் வரை குறைக்க முடிகிறது.
நோட் 20 அல்ட்ராவில் பேட்டரி ஆயுள் சிறந்தது.
இரண்டு நாட்கள் பயன்பாட்டை தவறாமல் பெறலாம். 8K வீடியோவைப் படம் பிடிப்பதன் மூலமும், ஸ்ட்ரீமிங் கேம்களை விளையாடுவதன் மூலமும் இந்த எல்லையை மிகவும் கடினமாகத் தள்ளினாலும், அது அப்போதும் ஆறு மணிநேர திரை நேரத்தைக்வழங்கக் கூடியதாக இருக்கிறது.உங்கள் நாளை முடித்து தூங்கும் வரை சார்ஜில் செருக வேண்டிய அவசியமில்லை.
அந்த 4,500 எம்ஏஎச் கலத்தின் பேட்டரி ஆயுள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏனெனில் இது அதிக சக்தியை அளிக்கிறது. நோட் 20 அல்ட்ராவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ செயலி உள்ளது. இது 5 ஜிக்கு தனி மொடம் (கூடுதல் சக்தி சேமிப்பு ) கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் உள்ளது – பல பணிகளுக்கு அது போதுமானது – மற்றும் பிற சாம்சங் அம்சங்களின் வழக்கமான வகைப்படுத்தல்: திரையில் மீயொலி கைரேகை சென்சார், வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், விரிவாக்கக்கூடிய சேமிப்பு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், புளூடூத் 5, என்எப்சி, எம்எஸ்டி, ஐபி 68 நீர் எதிர்ப்பு, வயர்லெஸ் டெக்ஸ் ஓவர் மிராக்காஸ்ட்.
ஐபோனைப் போலவே சாம்சங் ஒரு யு.டபிள்யூ.பி வானொலியைக் கூட இணைத்துள்ளது. இது உண்மையில் பயனுள்ள அம்சமாக இருப்பதை விட இது ஒரு தற்பெருமை காத்துக்கொள்ள புகுத்தப்பட்ட அம்சமாகவே உள்ளது.
கேமரா அம்சங்கள்
இத்தனை பெரிய கேமரா மேடு உள்ளதால், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஒரு சுவாரஸ்யமான கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
நோட் 20 அல்ட்ராவில் சந்தையில் உள்ள சிறந்த தொலைபேசிகளுக்கு இணையாக உள்ள ஒரு கேமரா அமைப்பு உள்ளது. ஆனால் , அது ஒரு பகுதியைத் தவிர்த்து : சாம்சங் செல்பி கேமரா
செல்பி கேமராவில் ஒவ்வொரு முகத்தை மென்மையாக்குதல் மற்றும் பில்டர் விருப்பத்தை நீங்கள் நிறுத்தினாலும் , சாம்சங்கின் செல்பி கேமரா முகங்களை சுத்தம் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறது. அது உங்கள் முகங்களை வெளு வெளு என்று வெளுத்து ஏதோ இறைச்சித் தசை போல ஆக்கி விடுகிறது.
மீதமுள்ள கேமராக்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. நீங்கள் மூன்று கேமராக்களைப் பெறுகிறீர்கள்: 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு, பெரிஸ்கோப் அசெம்பிளி கொண்ட 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ மற்றும் 108 மெகாபிக்சல் பிரதான வைட் ஆங்கிள் . இவை மிகச்சிறப்பான முறையில் உங்களுக்கு ஸூமிங் வசதிகள் மற்றும் பரந்த காட்சியினை வழங்குகின்றன.
எஸ் பென் மற்றும் மென்பொருள்
இங்கே உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய ஒருஅம்சம் உள்ளது: எஸ் பென் ஸ்டைலஸின் தாமதத்தை சாம்சங் குறைத்துள்ளது. வேகமான செயலாக்கம், அதிக புதுப்பிப்பு வீதத் திரை மற்றும் சில முன்கணிப்பு இயந்திர கற்றல் ஆகியவற்றின் கலவையின் மூலம் இது 9ms (நோட் 10 ஐ விட 80 சதவீதம் வேகமாக) குறைகிறது.
இது உணரக்கூடியதாக இருப்பதால் சுவாரஸ்யமாக இருக்கிறது: எஸ் பென்னைக் கொண்டு எழுதும் போது ஏற்படும் தாமத அளவீடு இதற்கு முன்னெப்போதும் தொலைபேசியில் பார்த்திராத சிறந்தது. மெய்நிகர் மை, ஸ்டைலஸ் முனையிலிருந்து ஒரு இடைவெளியுடன் வெளியேறுகிறது.
பொதுவாக,நோட் என்று வரும்போதுசிறந்த ஆலோசனை இதுதான்: நீங்கள் நிச்சயமாக ஒரு ஸ்டைலஸை விரும்பினால், உங்கள் ஒரே தேர்வு ஒரு நோட். உங்களுக்கு ஒரு ஸ்டைலஸ் வேண்டுமா என்று உங்களுக்கு சரியாகத் தெரியாவிட்டால், இது அவ்வளவு தேவை என்றில்லை. இது நீங்கள் ஆரம்பத்தில் சில முறை பயன்படுத்தும்போது ஒரு பெரிய விஷயமாக இருக்கும், பின்னர் அதை மறந்து விடுவீர்கள் .
உங்களுக்கு இது போன்ற தொழில்நுட்ப தகவல்களில் ஆர்வமுள்ளதெனின் நீங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப தகவல்களை பெற்றுக் கொள்ள எமது தொழில்நுட்பத் தகவல்கள் / மதிப்பாய்வு பகுதியை நாடுங்கள்.
தகவல் உதவி : TheVerge
Wall Image source : Gizmochina