ரஷ்ய யுவதியொருவர் பாரிய கரடியுடன் மிகவும் நட்பாக பழகி வருகிறார்.வெரோனிகா டிச்கா எனும் இந்த யுவதி வழக்கத்திற்கு மாறாக, ஒரு காட்டு கரடியுடன் நட்பு வைத்துள்ளார்.
கரடிகள் பொதுவாக ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகின்றன. ஆனால் வெரோனிகா தனது நண்பனை மிகவும் நேசிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் எங்கு சென்றாலும் தனது நண்பனான கரடியை ஒருபோதும் தனியாக விட்டு செல்ல மாட்டாராம். இருவரும் ஒன்றாகவே சாப்பிடுவது ரஷ்யாவின் நோவோ சிபிர்ஸ்க் ஏரியில் மீன்பிடிக்க படகில் செல்வது அருகருகே உறங்குவது என தனது நண்பனை விட்டு வெரோனிகா ஒருபோதும் பிரிந்ததில்லை,
இந்த ராட்சத கரடிக்கு ஆர்ச்சி என்றும் அவர் பெயர் வைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் ஒரு சஃபாரி பூங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வெரோனிக்கா இக் கரடியை முதன் முதலில் சந்தித்தார்.
அப்போது ஆபத்தில் இருந்த ஆர்ச்சியின் உயிரை காப்பாற்றியுள்ளார் ராட்சத கரடியுடன் சிறிது நேரம் செலவிட்ட பிறகு அவர்களுக்கு இடையே ஒரு நட்பு ஏற்பட்டது பின்னர் வெரோனிகா ஆர்ச்சியை மீன்பிடிக்க ஏரிக்கு அழைத்துச் செல்ல தொடங்கினார்.
படிப்படியாக அவர்கள் இருவருக்கு இடையே ஒரு அழகான நட்பு வளர்ந்தது இப்போது இந்த நண்பர்கள் இருவரும் நடைமுறையில் பிரிக்கமுடியாத நட்பை பகிர்ந்து வருகின்றனர்.
வெரோனிகா பொறுத்தவரை அவர் ஆர்ச்சியுடன் ஒரு நல்ல பிணைப்பை வளர்த்துக் கொண்டிருப்பதாக இருப்பதாக கூறியுள்ளார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
சில கரடிகள் மாமிச உணவுகளை சாப்பிடும் என்ற கூற்றுக்கு ஏற்ப கரடிகள் மனிதர்களை தாக்கும் பல நிகழ்வுகள் முன்னதாக நடந்து உள்ளன. ஆனால் தங்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததில்லை இனியும் நடக்காது என உறுதியாக கூறுகிறார்.
என்னை ஒரு தாய் உருவமாகப் பார்க்கிறது அது பயப்படும் போதெல்லாம் எனக்கு பின்னால் கூட சில சமயம் ஒளிந்து கொள்ளும் எனவும் வெரோனிகா டிச்கா கூறியுள்ளார்.