ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை ஏவி. பக்கத்து
நாடுகளின் இராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதில் கில்லாடிகள். சீனர்கள்.
ஆகாய மார்க்கமாக செய்யும் இந்த சேட்டையை, இனி நீர் மார்க்கமாகவும்
செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக குட்டி விமானத்துக்கு பதிலாக, மீன்
வடிவிலான ட்ரோனை தயார் செய்துள்ளனர்.
இந்த மீனின் கண் மற்றும் வாய் இருக்கும் இடங்களில் சக்திவாய்ந்த
கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மீன் போல வளைந்து நெளிந்து.அண்டை நாடுகளின் கடல், நதி உள்ளிட்ட நீர்பரப்புக்குள் சென்று. இந்த கருவி.துல்லியமாக படம் பிடித்து, தங்கள் எஜமானர்களுக்கு அனுப்பும்.
இந்த செயற்கை மீன் வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள பெட்டரி, தொடர்ச்சியாக
எட்டு மணிநேரம் வரை செயல்படுமாம்.