இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! 1990ஆம் ஆண்டு மான்செச்டர் இல் இருந்து லண்டன் நோக்கி ரயிலில் பயணம் செய்யும் பொழுது j.k.Rowling அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு எண்ணமே ஹரி பொட்டர் கதையின் அடிப்படை. 47 வயதான அவர் 2007 ஆம் ஆண்டு ஆறாவது பாகத்தை எழுதி தனது கதையை முழுதாக முடித்தார்.
இந்த நூலுக்கு இடம்பெற்ற விற்பனையும் காரணமாக இந்த உலகத்திலேயே மிகப்பெரிய செல்வந்தர்கள் ஒருவராக இவர் இணைந்து கொண்டார். இக்கதை எழுதியதன் மூலம் உலகத்தின் மிகப் பெரும் செல்வந்தராக அவர் காரணம் அதனுடைய விற்பனையே. ஆம் ஒவ்வொரு பாகமும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டது. ஹரிபொட்டர் நூலின் 7 வது பாகமானது வெளியிடப்பட்டு 12 மணி நேரத்திலேயே ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் பிரதிகள் விற்கப்பட்டு சாதனை படைத்தது.
சிறியவர் பெரியவர்கள் என்கின்ற இந்த ஒரு வேறுபாடுமின்றி மாயாஜாலகதைகளுக்கு அனைவரையும் அடிபணியச் செய்தது இந்த ஹரி பொட்டர் தொடர். இந்த ஹரி பொட்டர் இன் 7 பாகங்களும் வெற்றி திரைப்படங்களாக வெளிவந்தன.அந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றிருந்ததோடு அவை அனைத்தும் வசூலிலும் எக்கச்சக்கமாக சாதித்து இருந்தன. என்னதான் திரைப்படம் வெளி வந்தாலும் கூட திரைப்படத்தில் கதையில் எழுதப்பட்ட அனைத்து விடயங்களும் இல்லை என்பதனால் இன்னமும் கூட ஹரி பொட்டர் கதைகளை தேடி வாங்கி வாசிப்பவர்கள் எக்கச்சக்கமாக உள்ளனர்.