இந்திய புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து அரக்கர் சம்ஹாரம் செய்வதற்காகவும், போரை நிறுத்தவும், தன் சகோதரனைத் தேடியும் செல்லும் தெய்வங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமி ராஜி, இந்திய புராணம் அறிந்த நமக்கு தேவி துர்க்கையாகவே தோன்றுகிற ஒரு புத்தம் புதிய கணினி கேம் தான் ராஜி: ஒரு பண்டைய காவியம்.
பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் 8 தளராத உள்ளங்களால் 10 மாதத்தில் முடிக்கப்பட்ட, ஆனால் பல வருட முயற்சிக்கு இணையான தரமுடைய கேம் இந்த ராஜி.
ராஜி: ஒரு பண்டைய காவியம், கதை
ராஜியின் கதை: இது ஒரு பண்டைய காவியம். பேய்களுக்கும் கடவுள்களுக்கும் இடையில் ஒரு புதிய போரின் தொடக்கத்துடன் தொடங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கடைசி மாபெரும் போரில் தங்கள் தோல்விக்கு பழிவாங்க முயன்ற பேய்கள், அவர்களை அவமானப்படுத்திய தெய்வங்களுக்கு சவால் விடுத்து, மனித மண்டலத்தை ஆக்கிரமித்து, அழிந்துபோகும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த பெரிய யுத்தத்தில் தங்கள் எதிரிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டதாக நினைத்து, அமைதியை அனுபவித்த காலத்தில், ரசவாதத்தின் வழிகளை மறந்து, மனிதர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக தவறாக நினைக்கின்றனர். இதனால் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாமல், நகரங்களும் கோட்டைகளும் இராச்சியங்களும்வீழ்ந்தன, மனிதர்களை பேய்களின் தயவில் விட்டுவிட்டன.
இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், நகரங்களும் கோட்டைகளும் விழுந்ததாலும், சிறு குழந்தைகள் தங்கள் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டதாலும், ராஜி என்ற இளம்பெண் கடவுளர்களால் மனித இனத்தின் ஒரே பாதுகாவலளாக தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.
உடன்பிறப்புகளின் கதை
இவ்விளையாட்டில் உடன்பிறப்புகளின் கதையை நீங்கள் அனுபவிப்பீர்கள். ராஜியும் கோலுவும் சகோதரி மற்றும் சகோதரன், அவர்கள் தாக்கும் அரக்கக் குழுக்களால் பிரிந்து இப்போது பெரும் போரின் நடுவில் தாங்கள் இருப்பதை உணர்கின்றனர். ராஜி தனது சகோதரனைக் கண்டுபிடிக்கவும் இந்த பொறுப்பற்ற போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தனக்குத்தானே சபதம் எடுத்துக் கொள்கிறாள். இருப்பினும், மகாபலசுரர் என்ற அரக்கர்களின் மாபெரும் தலைவரால், வகுக்கப்பட்ட வலிமையையும் தந்திரத்தையும் தகர்க்க அவளால் முடியுமாக இருந்தால் மட்டுமே இது நிகழும்.
பிரமிக்க வைக்கும் கலைப்படைப்பு
ராஜி: ஒரு பண்டைய காவியம் அதிரடி-சாகச கேமிற்கு, மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்டு உருவான, ராஜஸ்தானின் இடைக்கால கட்டிடக்கலை, புத்துணர்ச்சியூட்டும் புதிய பாணியைக் கொண்டுவருகிறது! விளையாட்டின் சூழலின் ஒவ்வொரு மூலையும் பஹாரி கலை பாணியில் வரையப்பட்டு கையால் வரையப்பட்ட இழைமங்கள் 3 டி யில் ரெண்டரிங் செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது ராஜி: ஒரு பண்டைய காவியம் கேம். ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான காட்சி தரம் விளையாட்டுகளில் அரிதாகவே காணப்படுகிற இடத்தில் இது வேறெங்கும் கிடைக்காத புத்துணர்வை நமக்கு அளிக்கிறது.
தந்திரோபாய போர்
தெய்வங்களால் ராஜிக்கு பரிசளிக்கப்பட்ட பல்வேறு ஆயுதங்களும் சக்திகளும் உங்கள் வசம் உள்ளன. அவை அனைத்திலும் திறம் பெறுவது உங்கள் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கும், ஏனெனில் பேய் கும்பல்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் திறமையாக மாறும்; திரிசூலம் ஒரு போருக்கு சரியானதாக இருக்கும்போது, வலிமைமிக்க ஷரங்கா வில் வேறொரு போருக்கு தேவைப்படலாம்.
பண்டைய இந்தியாவில் ஒரு உலகளாவிய அனுபவம்
முதன்முறையாக, பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்ட ஒரு விளையாட்டை அனுபவிக்கலாம், இந்து மற்றும் பாலினீஸ் புராணங்களில் அறிவையும் அனுபவத்தையும் பெறலாம். ஒவ்வொரு மூலையும் ஆராயப்பட வேண்டும் என்று தவியாய் தவிக்க வைக்கும் பண்டைய இந்தியாவில் நீங்கள் மூழ்கி இருப்பதைக் காண்பீர்கள். விளையாட்டின் கதையிலிருந்து மிருகத்தனமான பேய்கள் மற்றும் அரக்கத் தலைவர்கள், பண்டைய புதிர்கள், பிரமாண்டமான கோட்டைகள் மற்றும் அரண்மனைகளுக்கு எதிரான இறுக்கங்கள் நிறைந்த போர்கள் வரை, இரு உடன்பிறப்புகளுக்கிடையான கதையை அனுபவிக்கும் ஒரு தெய்வீக போரின் மையத்தில் நீங்கள் இருப்பீர்கள்.
அமைப்புத் தேவைகள்
குறைந்தபட்சம்:
- ஓஎஸ்: விண்டோஸ் 7 64-பிட்
- செயலி: இன்டெல் கோர் i5-4400 (3.1 ஜிகாஹெர்ட்ஸ்) / ஏஎம்டி எஃப்எக்ஸ் -6300 (3.5 ஜிகாஹெர்ட்ஸ்)
- நினைவகம்: 8 ஜிபி ரேம்
- கிராபிக்ஸ்: ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 760 / ஏ.எம்.டி ரேடியான் ஆர் 9 270
- டைரக்ட்எக்ஸ்: பதிப்பு 11
- சேமிப்பு: 3 ஜிபி பயன்படுத்தக்கூடிய இடம்
- ஒலி அட்டை: ஒன் போர்ட்
பரிந்துரைக்கப்பட்டவை:
- ஓஎஸ்: விண்டோஸ் 10 64-பிட்
- செயலி: இன்டெல் கோர் i5-7400 (3.50 ஜிகாஹெர்ட்ஸ்) / ஏஎம்டி எஃப்எக்ஸ் -8100 (2.8 ஜிகாஹெர்ட்ஸ்)
- நினைவகம்: 16 ஜிபி ரேம்
- கிராபிக்ஸ்: ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1060 / ஏ.எம்.டி ஆர்.எக்ஸ் 480
- டைரக்ட்எக்ஸ்: பதிப்பு 11
- சேமிப்பு: 3 ஜிபி பயன்படுத்தக்கூடிய இடம்
- ஒலி அட்டை: ஒன் போர்ட்
ராஜி: ஒரு பண்டைய காவியம் கேம் பற்றி கருத்துக்கள்
யூரோகேமர்
“சூரியப்பின்னணியில் குவிமாடங்கள் மற்றும் அதன் மூடுபனி வான்வெளியில் மறைந்துபோகும் கோபுரங்கள் முதல், சிவப்பு நிறத்தில் ஒரு பூங்கொடிபோன்ற ஆனால் உறுதியான உருவம் ராஜி, ஓடும்போது அவளது கூந்தல் முன்னும் பின்னுமாக அசைவதும், அரக்கக் கூட்டங்களை அழிக்க அவள் திரிசூலமேந்தி பாயும்பொழுது அவளது அசைவுகளும் கலந்து இது ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கிறது.”
பீசி கேமர்
ராஜி: பண்டைய காவியம், இந்தியாவின் 2017 நாஸ்காம் கேம் டெவலப்பர் மாநாட்டில் நாங்கள் பார்த்த மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டுகளில் ஒன்று, இப்போது அதை நீங்களே அதன் மாதிரியை அனுபவிக்கலாம். டெவலப்பர் நோடிங் ஹெட்ஸ் கேம்ஸ் சமீபத்தில் ஸ்ட்ரீமில் ஒரு இலவச டெமோவைப் பதிவேற்றியது, இதில் நல்ல போர் உணர்வையும் அதன் ஆடம்பரமான இசை மற்றும் சூழலுக்கான சிறந்த உணர்வையும் தருகிறது.
ஸ்டுமாக்ஸ்
ராஜி: ஒரு பண்டைய காவியம் என்பது நாம் பார்த்த முதல் முழு இந்திய அனுபவம் நிறைந்த ஒரு விளையாட்டு. எம்மால் இந்த விளையாட்டு வெளியாகும் வரை காத்திருக்க முடியவில்லை.
அனிமேஷன் எக்ஸ்பரஸ்
நோடிங் ஹெட்ஸ் கேம்ஸ் உருவாக்கியுள்ள ‘ராஜி: ஒரு பண்டைய காவியம்’ புதிய கேமிங் அனுபவத்தையும், இந்திய சுவைகளையும் வெளிப்படுத்த உள்ளது.
பீசி கேமர்
ராஜி: ஒரு பண்டைய காவியம், 10 மாத காலப்பகுதியில் வெறும் எட்டு பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அதனை விளையாடும் போதோ பார்க்கும் போது நம்மால் நம்பவே முடியாமல் இருக்கின்றது. கேமிங் மாநாட்டில் மிகச் சிறந்த மற்றும் மிகவும் மெருகூட்டப்பட்ட விளையாட்டு இதுதான். இது ஒரு அதிரடி விளையாட்டு, இது காட் ஆஃப் வார் போன்ற விளையாட்டு முறைமையைக் கொண்டுள்ளது, ஆனால் தனித்துவமான இந்திய சுவை கொண்டது.
டிஸ்ட்ராக்டொயிட்
“விளையாட்டின் ஒவ்வொரு பகுதியும் பண்டைய இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய வரலாற்றின் கூறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பேய் உருவமுடைய சிலைகளை பார்த்து அதிலிருந்து கேமுக்கான வரைதல்களை உருவாக்க டெவலப்பர்கள் உண்மையில் பாலிக்கு பயணம் செய்துள்ளனர். சுற்றுச்சூழல் கதைசொல்லலில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றும் சவாலான போர் சண்டைகளுக்கு இடையில் சற்று நேரம் மூச்சு விட இடம்கொடுக்கும் வகையில் கைவினைப்பொருள் மண்டல புதிர்களையும் அவர்கள் இணைத்துள்ளனர்.
சிளிகொனேரா
இந்திய புராணங்களுக்கு தனித்துவமான பேய்கள் மற்றும் உயிரினங்களை எதிர்கொள்ளும் வகையில் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட எதிரிகளை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.
ஸ்பீல்டைம்ஸ்
விரைவான வருவாயின் பொருட்டு டெவலப்பர்கள் மொபைல் விளையாட்டுகளை உருவாக்குவதில் இன்னும் கவனம் செலுத்துகிற இந்தியா போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற ஒரு விளையாட்டு உருவாக்கப்படுவதைக் காணும்போது இது இதயத்தை மகிழ்ச்சியில் நிரப்புகிறது,
ஓர்க்ஸ் மற்றும் கோப்ளின் மற்றும் மாவீரர்கள் முற்றிலும் இல்லாத ஒரு கற்பனை அமைப்பைப் பார்ப்பது அருமை. இந்திய புராணங்களிலும் புராணக்கதைகளிலும் உள்ள நிறைய சுவாரஸ்யமான, வேறு விளையாட்டுக்களால் உண்மையில் தொடப்படாத புதிய பாணிகளை இந்த விளையாட்டு தொட்டுள்ளது.
இந்திய துணைக்கண்டத்தில் இப்படி ஒரு முயற்சி என்றுமே வரவேற்கப்பட வேண்டும். இந்த கேம் வெளியாகும்போது நாம் அனைவரும் அதற்கான தொகையை செலுத்தி வாங்கி விளையாடுவது இது போன்ற முயற்சியாளர்களை ஊக்குவிப்பதாக அமையும்.
இது போன்ற சுவாரசியாமான தகவல்களுக்கு எமது கேமிங் பக்கத்தை பார்வையிடவும்.