SUPER SINGER, YOUTUBE மற்றும் JOSHUA AARON பிரபலங்கள் இணைந்து வழங்கும் QUARANTINE MASHUP
உங்களுக்கு பிடித்த பாடல்களும் இந்த முடக்கல் காலத்தில் சலித்து விட்டதா.. உங்கள் ஆழ் மனதில் பதிந்த ஆனால் நினைவில் வராத சில அழகிய பாடல்களை கோர்வையாக்கி உங்களை உற்சாகபடுத்த Quarantine Mashup முயற்சி செய்கிறார்கள் Joshua Aaron மற்றும் குழுவினர்.
Joshua Aaron சமகால இளம் சமுதாயத்தில் தனது Mashup வகைப் பாடல்களுக்காக (பாடல்களின் புகழ்பெற்ற வரிகளின் கோர்வை) விரும்பப்படும் Youtube பிரபலம். இவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் பழைய தொடர்களில் புகழ்பெற்ற நித்யஸ்ரீ, ஸ்ரீநிஷா மற்றும் ஆஜீத் உடன் Youtube புகழ் அஹ்மத் மீரான் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய 6 பேரும் இணைந்து இந்த Mashup பாடலைப் பாடியுள்ளனர்.
எவ்வாறு இருக்கிறது Mashup ?
இந்தப் பாடல்களை அந்தாக்ஷரி அதாவது ஒருவர் பாடி முடியும் எழுத்தின் வரிசையில் அடுத்தவர் பாட ஆரம்பிப்பது போன்ற முறையில் பாடியுள்ளனர். கிட்டத்தட்ட 20 பாடல்களை இவ்வாறு கலந்து 5 நிமிட இசை விருந்தொன்றை தயார் செய்திருக்கிறார்கள். கேட்கும் ஒவ்வொருவரியும் நிச்சயமாக மகிழ்ச்சிபடுத்தக்கூடிய இந்த பாடல்தொகுப்பின் 6 பாடகர்களும் தொழில்முறை பாடகர்கள் போல பாடியிருப்பது அருமை.
தற்போது இந்தப் பாடல் தொகுதி வெளிநாட்டவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு பலராலும் பாராட்டப்பட்டும் வருகிறது. தற்போது வரை 2.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்லும் இந்த காணொளி ஒரு லட்சத்து எழுபதாயிரம் விருப்புகளையும் பெற்றுள்ளது.
உருவாக்கியவரின் கருத்து
இந்த பாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் Joshua Aaron இது இவ்வாறான சவாலான தருணங்களில் சிறிதளவு நேர்மறையான எண்ணங்களை பரப்புவதற்கான நேர்மையான முயற்சி எனக் குறிப்பிட்டுளார்.
உண்மையாகவே இன்றைய இளம் சமுதாயத்தின் இந்த அழகிய பக்கம் நம் சமூகத்தை ஒரு படி மேலே நகர்த்துகின்றது என்பதில் ஐயமில்லை.
இதனைப் போலவே தன்னலமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் மற்றுமொரு இளைஞனை சந்திக்க வேண்டுமா ? இதைப் படியுங்கள்.