Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
புரட்டாசி

இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சகல வளமும் பெற்று நலம் பெற பெருமாளை வழிபடுங்கள்..!

  • September 18, 2021
  • 192 views
Total
2
Shares
2
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

twistequill: 75+ Good Morning Venkateswara Swamy Images Gif | Good morning  gif animation, Good morning gif images, Good morning picture
image source

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு..!!

புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.

புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தான, தர்மம் நிறைய செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும், வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

பெருமாள் வழிபாடு

திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியத்தை அள்ளித்தரும்.

திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். அல்லது வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவ படத்தை வைத்தும் வழிபடலாம்.

வீட்டில் வெங்கடாசலபதி படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். வழிபாட்டில் வெங்கடாசலபதிக்கு உகந்த நைவேத்தியங்களை வைத்தும் வழிபடலாம்.

ஆஞ்சநேயர் வழிபாடு

Lord Hanuman - For Success in Life - Mantras, Significance, Life Lessons
image source

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.

அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

சனிக்கிழமை விரதத்தின் பலன்கள்

சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்கலாம்.

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பிவிடும்.புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படுவதால் செரிமான குறைவும், வயிறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதனால் தான் நம் முன்னோர்கள் பெருமாளை வழிபட்டு துளசி நீரை பருகச் சொன்னார்கள்.

புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாமா? புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாம்.

புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா? புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாம்.

புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா? புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போவதை தவிர்க்கவும்.

புரட்டாசி மாதத்தில் இருசக்கர வாகனம் வாங்கலாமா? புரட்டாசி மாதத்தில் இருசக்கர வாகனம் வாங்கலாம்.

புரட்டாசியில் பெண் குழந்தை பிறக்கலாமா? புரட்டாசியில் பெண் குழந்தை பிறக்கலாம்.

புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாமா? புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்ப்பதை தவிர்த்து மற்ற சுப மாதங்களில் செய்யவும்.

பணக்கஷ்டத்தை தீர்த்து.. செல்வ செழிப்பை தரும் காமதேனு

wall image

Post Views: 192
Total
2
Shares
Share 2
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஸ்பேஸ்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் தனியாருக்கான முதலாவது விண்வெளி சுற்றுப்பயணம்

  • September 18, 2021
View Post
Next Article
பொறாமை

என்னை பொறாமைப் படவைக்கும் என் மகனே மாதவன் போட்ட பதிவு..!

  • September 18, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.