நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் கல்யாண கோலத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து பகீர் கிளப்பியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா. ஹீரோயினியாக சில படங்களில் நடித்த அவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார் பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார் இவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்ட வனிதா அவரையும் விவாகரத்து செய்தார்.
சிங்கிள் மதராக வனிதா பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். வனிதா அவரைத் தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என கூறப்பட்ட நிலையில் அவருடனான உறவு முறிந்தது.
அதன் பின்னர் அவரின் யூடியூப் சேனலுக்காக பணியாற்றிய பீட்டர் பாலுடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்தது. அவரை மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா இந்த திருமணம் பெரும் சர்ச்சையான நிலையில் நான்கு மாதங்களுக்குள்ளேயே பீட்டரை பிரிந்தார் வனிதா.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்
இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்ததா அல்லது பட சூட்டிங்கில் எடுத்த போட்டோ வா எனக் கேட்டு வருகின்றனர்? இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நானும் பவர் ஸ்டார் சீனிவாசனும், மணமகன் மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்தான் அது.
நான் நாலு திருமணம் அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் அது எனது தனிப்பட்ட உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என நடிகை வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.