சித்திரைத் தமிழ் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பிறக்கப் போகும் புத்தாண்டு பிலவ வருடம் தொடர்பாக பிறக்கும் நேரம், மருத்து நீர் , ஆடை வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷ நட்சத்திரங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சித்திரைத் தமிழ் புத்தாண்டு 2021 – பிலவ வருடம்
அறுபது வகையான தமிழ் வருடங்களின் சுழற்சியில் 35-ஆவது வருடம் தான் “பிலவ” வருடம்.
13.04.2021 அன்றைய தினம் 48 வினாடி 51 வினாடி நேரப்படி பின்னிரவு 1.39 மணிக்கு பூர்வபக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் மகர லக்கினத்தில் சனி கால வோரையில் பிலவ வருடம் பிறக்கின்றது.
அன்றைய தினம் முன்னிரவு 13.04.2021 (செவ்வாய்க்கிழமை) 9.39 மணிமுதல் 14.04.2021 (புதன்கிழமை) 5.39 வரை விஷுபுண்ணியகாலம் ஆகும்.
பிலவ வருடம் சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்
- அச்சுவினி
- பரணி
- கார்த்திகை 1ம் கால்
- பூரம்
- உத்தரம் 2ம், 3ம், 4ம் கால்கள்
- அத்தம்
- சித்திரை 1ம், 2ம் கால்கள்
- பூராடம்
இந்த நட்சத்திரங்களுக்கு உரியவர்கள் கட்டாயம் மருத்துவ நீர் வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். தான தருமங்கள் செய்வதோடு, தோஷ பரிகாரங்கள் செய்வது அவசியமாகும்.
மருத்து நீர்
மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்படும். வழக்கமாக கோவில்களில் இவற்றைக் காய்ச்சி விற்பனை செய்வர். இந்த ஆண்டுக்கான விசேட இலைகள் இதோ….
பஞ்சாங்கம் : சிரசில் விளா இலையும் காலில் கடப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும்.
ஆடை : நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடைகள் அல்லது சிவப்பு அல்லது நீலத்தை கரையாகக் அணியலாம்.
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்
பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.