இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
ஐயப்பனின் வேறு பெயர்கள்
சாமியே சரணம்! ஐயப்ப சரணம்! என்று சரண கோஷமிட்டு சபரிமலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா? என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.
18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
- மணிகண்டன்.
- பூதநாதன்.
- பூலோகநாதன்.
- தர்மசாஸ்தா
- எருமேலிவாசன்.
- ஹரிஹரசுதன்.
- ஹரிஹரன்.
- கலியுகவரதன்.
- கருணாசாகர்.
- லக்ஷ்மண பிராணதத்தா.
- பந்தளவாசன்.
- பம்பாவாசன்.
- ராஜசேகரன். சபரி.
- சபரீஷ்.
- சபரீஷ்வரன்.
- சபரி கிரீஷ்.
- சாஸ்தா.
- வீரமணி.
இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும்.
சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள்?
கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ‘சுவாமி சரணம்” என்று அடிக்கடி கூறுவார்கள். அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம்.
சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பை சொல்லி படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
ச என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்ஹாரம் என்று பொருள்
ர என்ற எழுத்திற்கு ஞானத்தை தர வல்லது என்று பொருள்.
ண என்ற எழுத்திற்கு சாந்தத்தை தரவல்லது என்று பொருள்.
ம் முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களை போக்க வல்லது என்று பொருள். சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.
ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா” என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :
- அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
- நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்
- சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத
- ரஞ்ச தக்ஷிணேவிலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்
- வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
- வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
- கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
- கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
- பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
- மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.
கூப்பிட குரலுக்கு ஓடி வரும் சபரி கிரி நாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.