இந்த முடக்கள் காலத்தில் நாம் எல்லோரும் பெரும்பாலும் இணைய வங்கி
மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த இணைய கொடுக்கல் வாங்கல்களில் வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்.
என்னுடைய தந்தைக்கு சில கொடுக்கல் வாங்கல்கள் இருந்ததினால் அவரோடு
ஒரு மணி நேரத்தை வங்கியில் செலவழிக்க வேண்டி ஆகிவிட்டது. என்னால்
என்னையே தடுக்க முடியவில்லை…கேட்டுவிட்டேன்.
அப்பா, நீங்கள் ஏன் இணைய வங்கி சேவையை பயன்படுத்தக்கூடாது?
நான் ஏன் அதனைச் செய்ய வேண்டும் என அவர் கேட்டார்
ஏனென்றால் நீங்கள் கொடுக்கல் வாங்கல் போன்ற விடயங்களுக்கு இதுபோல
ஒரு மணி நேரத்தை செலவழிக்க வேண்டி இருக்காது.நீங்கள் இணையத்தில் பொருட்கள் கூட வாங்கலாம். அனைத்தும் மிக இலகுவாக இருக்கும்.அவரை இணைய வங்கி செய்முறைக்கு பழக்கப் படுத்துவது தொடர்பாக நான் மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.
அவ்வாறு செய்தால் நான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டி இருக்காதா ? என
அவர் கேட்டார்.ஆமாம் என்றேன் நான். மளிகைப் பொருட்களைக் கூட வீட்டு வாசலிலேயே தற்பொழுது பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமேசன் எல்லாவற்றையும் டெலிவரி செய்கின்றது என்றும் கூறினேன்.
அவரது பதில் என்னை வாயடைக்கச் செய்தது.
நான் இன்று வங்கிக்குள் வந்ததிலிருந்து என்னுடைய நான்கு நண்பர்களை
சந்தித்து விட்டேன் அவர்களோடு சிறிதளவு கலந்துரையாடிய தோடு இங்கு
இருக்கின்ற பணியாளர்களுக்கும் என்னை நன்றாக தெரிந்திருக்கும்.
உனக்கு தெரியும் நான் தனியாக இருக்கிறேன்…எனக்குத் தேவையான துணை
இதுதான். நான் எழுந்து தயாராகி வருவதை விரும்புகிறேன். எனக்கு நான்
விரும்பும் ஸ்தூலமான தொடுகை உணர்வை பெற போதிய அளவு நேரம் உள்ளது.
2 ஆண்டுகள் முன்பு நான் நோயுற்று இருந்தேன். நான் பழங்கள் வாங்கும் கடை
முதலாளி வீட்டுக்கு வந்து என்னை பார்த்ததோடு என் அருகில் இருந்து
அழுதுவிட்டார்.
சில நாட்கள் முன்பு உன்னுடைய அம்மா காலையில் நடக்கும் பொழுது மயங்கி
விழுந்த நேரம், அருகில் இருந்த மளிகை கடைக்காரர் தான் அவரைப் பார்த்து
உடனே தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு எங்களுடைய வீடு தெரியும்
என்பதனால் விரைவாக வந்து சேர்ந்தார்.
இணையத்தில் எல்லாவற்றையும் செய்வதினால் எனக்கு இந்த மனிதத்துவ
தொடுகை உணர்வு கிடைக்குமா ?
நான் ஏன் எல்லாவற்றையும் வீட்டுக்கு கொண்டு வர வைத்து விட்டு தனியாக
கணினியோடு மட்டும் உறவாடிக் கொண்டிருக்க வேண்டும் ?
எனக்கு நான் கொடுக்கல் வாங்கல் செய்யும் நபரை தெரிந்துகொள்வது விருப்பம்.
வெறுமனே யாரோ ஒரு வியாபாரி என்று இல்லாமல் அவரோடு நல்ல
உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.அமேசன் இவற்றையும் கூட டெலிவரி செய்கிறதா? தொழில்நுட்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல…
மக்களோடு சிறிது நேரம் செலவழியுங்கள்….கருவிகளோடு அல்ல..
image source:https://www.freepik.com/free-vector/man-with-supermarket-groceries-shopping-bag_4872010.htm