ஓக்ரே (மனிதனை உண்ணும் கற்பனை இராட்சதன்) முகம் கொண்ட சிலந்திகள், அவற்றின் பாரிய கண்களுக்கு பெயர்போனவை. பகலில் ஒளிந்துகொண்டு இரவில் வேட்டையாடுகின்றன. புளோரிடா மாநிலத்தில் பனை முனைகளில் இவற்றை அதிகம் காணலாம். தரையிலும் காற்றிலும் பூச்சிகள் மீது பட்டு வலைகளை இவை வீசுகின்றன.
ஒக்ரே சிலந்திகள் கொண்டுள்ள அதீத திறன்
அவற்றின் ஆச்சரியகரமான இரவு பார்வைக்கு மேலதிகமாக, இந்த எட்டுக் கால் பூச்சிகள் தங்களை வேட்டையாட வரும் விலங்குகளையும் இரையையும் கேட்டல் மூலம் கண்டறியும் என்று ஆராய்ச்சியாளர்கள் அக்டோபர் 29, 2020 அன்று current biology இதழில் தெரிவித்துள்ளனர். காதுகள் இல்லாததால், சிலந்திகள் குறைந்தது 2 மீட்டர் தொலைவில் உருவாகும் அதிர்வுகளைக் கணிக்க கால்களில் முடிகள் மற்றும் கூட்டு ஏற்பிகளைப் பயன்படுத்துகின்றன. சிலந்திகள், பூச்சி போன்ற இரைகளிலிருந்து குறைந்த அதிர்வெண் ஒலிகளையும் பறவை போன்ற வேட்டையாடுபவர்களிடமிருந்து அதிக அதிர்வெண் ஒலிகளையும் கேட்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன.
“பல சிலந்திகள் உண்மையில் கேட்க முடியும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் சிலந்திகள் இரையைப் பிடிக்க தமது ஒட்டும் வலையின் அதிர்வைப் பயன்படுத்துவதாகத்தான் நாம் நினைக்கின்றோம்,ஆனால் அந்த முறையில் நெருக்கமான அதிர்வுகளைக் கண்டறிய மட்டுமே முடியும்” என்று கார்னெல் பல்கலைக்கழக நரம்பியல் மற்றும் நடத்தை பேராசிரியர் மற்றும் மூத்த எழுத்தாளர் ரான் ஹோய் கூறுகிறார். “அதிர்வு கண்டறிதல், வலை அல்லது நிலத்தில் ஏற்படும் உணர்வை உணர உதவி செய்கிறது, ஆனால் இந்த எட்டுக் கால் பூச்சி வான்வழி தொந்தரவுகளை தூரத்தில் கண்டறிய உதவுவுது செவிப்புலன் பிரிவாகும். இந்த செயற்பாட்டை அவை நாம் காதுகளை பயன்படுத்தும் முறையிலேயே செய்கின்றன, ஆனால் அதற்காகவென காதுக்குழாய்கள் அல்லாத விசேட ஏற்பிகளைப் பயன்படுத்துகின்றன”

இரையை வலையில் விழுந்து சிக்கித் தவிக்கும் வரை செயலற்ற முறையில் காத்திருப்பதற்குப் பதிலாக, ஓக்ரே முகம் கொண்ட எட்டுக் கால் பூச்சிகள் தங்கள் வலைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. பகல் நேரத்தை முழுவதுமாக கழித்தபின், அவை இரவில் வெளிப்பட்டு தரைக்கு நெருக்கமாக தொங்கிக் கொண்டு, கவனக்குறைவான பூச்சிகளின் மீது வலையைப் போடுகின்றன. தரையில் இரையைப் பிடிக்க அவை துல்லியமான இரவு பார்வை திறனைப் பயன்படுத்துவதோடு, மீனவர்கள் வலையில் மீனைப் பிடிப்பது போல பூச்சியை பின்புறமிருந்து தங்கள் வலைக்குள் பிடிக்கின்றன.
“முந்தைய ஆய்வில், நான் உண்மையில் பல் சிலிகானை அவற்றின் கண்களுக்கு மேல் வைத்தேன், அதனால் அவற்றால் பார்க்க முடியவில்லை” என்று ஹோய் ஆய்வகத்தின் முதுகலை ஆய்வாளர் முதல் எழுத்தாளர் ஜே ஸ்டாஃப்ஸ்ட்ரோம் கூறுகிறார். “நான் அவற்றை மறுபடியும் சூழலுக்கு விட்டபோது, அவற்றால் தரையில் இருந்து இரையைப் பிடிக்க முடியவில்லை, ஆனால் காற்றில் பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க முடியும் என்பதைக் கண்டேன். எனவே இந்த சிலந்திகள் பறக்கும் பூச்சிகளை வேட்டையாட வேறுபட்ட உணர்ச்சி முறையைப் பயன்படுத்துகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன். ”
ஒக்ரே பூச்சிகள் கேட்க முடியும் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருந்தாலும், அவர்கள் அதை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது. வெவ்வேறு சுரங்களுக்கு சிலந்திகளின் எதிர்வினைகளைக் கவனிப்பதன் மூலமும், சிலந்திகளின் மூளை மற்றும் கால்களில் வைக்கப்பட்டுள்ள மின்முனைகளுடன் அவற்றின் நரம்பியல் பதிலை அளவிடுவதன் மூலமும், சிலந்திகள் 10 கிலோஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்ணில் ஒலிகளைக் கேட்க முடியும் என்று குழு தீர்மானித்தது, இது நடக்கும் அல்லது பறக்கும் மற்ற எந்தவொரு பூச்சியையும் விட மிக அதிகம்.
“நான் குறைந்த தொனி அதிர்வெண்களை அனுப்பியபோது, தூரத்திலிருந்தும் கூட, அவை ஒரு பூச்சியை வேட்டையாடுவதைப் போலவே தாக்கின,ஆனால் அதிக அதிர்வெண்களை அனுப்பும்போது அவ்வாறு செய்யவில்லை” என்று ஸ்டாஃப்ஸ்ட்ரோம் கூறுகிறார். இது அவற்றின் கேட்கும் திறனுக்கு முக்கிய ஆதாரமாகும்.
இந்த அதிக அதிர்வெண்களைக் கேட்பது வேட்டையாடுவதற்கு உதவியாக இருக்காது, ஆனால் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து மறையும் போது எச்சரிக்கையாக இருக்க அவற்றுக்கு உதவக்கூடும்.
சிலந்திகள் ஒலிகளை நன்கு கண்டறிய முடியும் என்பதை இந்த முடிவுகள் தெளிவுபடுத்தும் அதே வேளையில், ஆராய்ச்சியாளர்கள் அடுத்ததாக அவற்றின் திசைக் கேட்கலைச் சோதிக்க ஆர்வமாக உள்ளனர் – ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அவற்றால் சொல்ல முடியுமா ? என பார்க்க விரும்புகின்றனர்.அவற்றால் வெவ்வேறு திசைகளிலும் கேட்க முடிந்தால், இது அவற்றின் அக்ரோபாட்டிக் வேட்டை பாணியை மேலும் விளக்க உதவும்.
“நான் மிகவும் ஆச்சரியமாகக் கண்டது என்னவென்றால், பறக்கும் பூச்சிகள் மீது தங்கள் வலையை செலுத்துவதற்கு அவை அரை பேக்ஃப்ளிப் செய்து ஒரே நேரத்தில் தங்கள் வலையை பரப்ப வேண்டும். எனவே அவை அடிப்படையில் புவியீர்ப்பு மையத்துடன் விளையாடுகின்றன,” என்று ஹோய் கூறுகிறார். “எந்தவொரு விலங்குக்கும் திசைகேட்டல் திறன் ஒரு பெரிய விஷயம், ஆனால் இந்த சிலந்தியிடம் அது மேலும் சில சுவாரஸ்யமான ஆச்சரியங்களோடு இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் முடித்தார்.
மூலம் : “Ogre-Faced, Net-Casting Spiders Use Auditory Cues to Detect Airborne Prey”
ஆய்வுக்குழு : ஜெய் ஏ. ஸ்டாஃப்ஸ்ட்ரோம், கில் மெண்டா, ஈயல் ஐ. நிட்ஸானி, எலைன் ஏ. ஹெபெட்ஸ் மற்றும் ரொனால்ட் ஆர்.
முதற்கட்டுரை வெளியீடு : SciTechDaily
இது போன்ற சுவாரசிய விஞ்ஞான தகவல்களுக்கு எமது தொழில்நுட்பம் பக்கத்தை நாடவும்
எம்மை பேஸ்புக் பக்கத்தில் தொடரவும்
முகப்பு உதவி : sciencenews