ஒரு இரக்கமற்ற கொடூர கொலைகாரனிடமிருந்து தன் தந்தையை காப்பாற்றும் தமன்னா.
- நடிகர்கள்: தமன்னா, பசுபதி, அருள்தாஸ், ஜீ.எம்.குமார், விவேக் பிரசன்னா மற்றும் பலர்.
- இசை: சரண் ராகவன்
- ஒளிப்பதிவு: விது அய்யன்னா
- எடிட்டிங்: ஷரன் கோவிந்த்சாமி
- தயாரிப்பு: விகடன் & டிஸ்னி ஹாட்ஸ்டார்
துப்பறியும் கதைகளை எழுதும் ஜி.எம். குமார் அல்ஸைமர்ஸ் நோய் வந்து நினைவுகளை இழந்துகொண்டிருப்பவர். அவருக்கு சிகிச்சை செய்ய தங்களிடம் உள்ள ஒரு பழைய வீட்டை விற்க ஏற்பாடு செய்கிறார் தமன்னா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் ஜி.எம். குமார்.
ஒரு நாள் நவம்பர் 16-ஆம் தேதி அந்த வீட்டில் ஒரு பெண்ணின் சடலம் இருக்கிறது அந்த நேரம் பார்த்து அதற்கு அருகில் ஜி.எம். குமார் அமர்ந்திருக்கிறார். அதிர்ந்து போகும் தமன்னா இந்த பிரச்னையில் இருந்து எப்படியாவது தன் தந்தையை காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார் தமன்னா
சாட்சி எல்லாம் ஜி.எம். குமார் எதிராக இருக்கின்றன. உண்மையிலேயே தந்தை தான் அந்தக் கொலையைச் செய்தாரா, என்று யோசித்து கொண்டு இருக்கிறார் தமன்னா.
இந்தத் தொடரின் சுவாரஸ்யம் என்பது, யார் கொலை செய்தார்கள் என்பதைச் சொல்வதில் இல்லை. மாறாக, ஏன் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.
படத்தின் பிரதான பாத்திரமாக தமன்னாவின் பாத்திரம் இருந்தாலும் ஜி.எம். குமாரின் பாத்திரம் தான் பேசப்படுகிறது.பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவராக வரும் பசுபதிக்கும் பெயர் சொல்லக்கூடிய தொடர் இது.
இந்தத் தொடரின் பிரச்சனை பல காட்சிகள் தேவையில்லாத நீளத்துடன் பொறுமையை சோதிக்கின்றன. திகைப்பூட்ட வேண்டும் என்பதற்காக காட்சிகளை வெகு நீளமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
நிச்சயமாக ரசிக்கக்கூடிய த்ரில்லர் இந்த நவம்பர் ஸ்டோரி. ஆனால், அதேபோல் இரத்தம் தெறிக்கும் காட்சிகள், போஸ்ட்மார்டம் தத்ரூப காட்சிகள் என சில காட்சிகளும் இதில் உண்டு குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கலாம்
இறுதியாக கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து இந்த நவம்பர் ஸ்டோரி.
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.