நொடி, நம் எண்ணங்களின் வேகம் செயல்களின் வேகத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகம். விளக்க முடியாத சூழலுக்குள் மாட்டிக் கொண்ட ஒருவனின் நொடிக்கு நொடி வாழ்வு இந்தக் கதை.
நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
கடந்த பாகத்தில்,
ஸ்லோ மோஷன் நொடி 29
“ஹே.. என்ன ? என்னையே பாக்குறீங்க ? பதில் சொல்லுங்க…”
இதற்கு மேலும் அவனுடைய நொடிகள் எதுவும் ஸ்லோ மோஷனாக இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஃப்ரீஸ் ஆகி போனது.
நொடி – 4
திடீரென்று இதென்ன வசனம் என்று பார்க்கிறீர்களா ? கடந்த கதையில் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தவன், தன்னுடைய மண்டைக்குள்ளே மந்தப்புத்தி போடும் கூத்துக்களை எல்லாம் சகித்துக் கொண்டு, தன்னுடைய மனதுக்குள்ளே துள்ளிக் கொண்டிருக்கும் பயம் கலந்த குதூகலத்தை அவளிடம் சொல்ல வெறுமனே ஹாய் என்ற ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்தான். யாரோ அவனை அறியாத ஒரு பெண்ணாக இருந்தால், நிச்சயமாக அந்தத் தருணம் மலர்ந்த முகத்தைக் காட்டி தன்னுடைய சகபாடித்தன்மையை காட்டுவதா அல்லது மூக்குடைக்கும் வகையில் கோவமாக திருப்பிக்கொள்வதா என்பதனை முடிவெடுப்பதாக இருந்திருக்கும்.
ஆனால், இவள் அவ்வாறான பெண்ணல்லவே… தன் தோளில் தூங்கி வழிந்தவன், யாரென்றே தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக என்னை தூரத்திலிருந்தே ரசித்து, கண்டு பயந்து கொண்டிருந்தவன். பார்ப்பதற்கும் கொஞ்சம் அழகாய் தனக்குப் பிடித்த மாதிரி இருக்கும் கியூட்டான பயந்தாங்கொள்ளியாக அவனைத் தன் மனதில் பதிய வைத்திருந்தாள். அன்றைய தினம்
“அதாவது ரெண்டாவது ஸ்டோரில……:”
யாரோட வாயிஸ் அது ? எனக்கு ஆச்சரியம். யார் நான் கதை சொல்வதை குழப்புவது ?
“வேற யாரு ஜி.. நான்தான்.. நீ விளக்கம் இல்லாம கதை சொல்ற அதான் வாசிக்கிறவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.“
இந்த மந்தப் புத்தி இப்படித்தான்.. வழக்கமாக கதை சொல்லும்போதுதான் குழப்பும். இன்று ரீவைண்ட் டைம்லயே வந்து தொலைத்துவிட்டது. சரி. அது சொன்னது போலவே,
இரண்டாவது கதையில் அவள் முன் இருக்கையில் இடம் கிடைத்ததற்காக சந்தோஷப்படவில்லை. அவன் தன்னுடைய பயத்தை உடைத்து முன்னால் வந்து இருக்கிறான். அதிலும் அவன் பக்கத்து இருக்கை காலியாக இருக்கிறது என்ற மகிழ்ச்சிதான் அவளுக்கு. அவன் ஹாய் சொன்னபோது அவள் மனதிலும் அதற்கு முன்பிருந்தே பல்லாயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
இன்றைக்கு கதையில் அவனுடைய ஹாய்க்கு அவள் ஏன் இவ்வளவு அதிர்ச்சிகரமாக; வெறுமனே ஹாய் மட்டுமா ? இதற்கு நீ பேசாமலே இருந்திருக்கலாம் என்றது போன்ற ஒரு வெளிப்பாட்டைக் காட்டினாள் என்பதைக் காட்டுவது ஒரு கதை சொல்பவனாக எனது கடமை.
“என்ன சார் நீங்க ஸ்டோரி க்ரியேடர்னு ரெஜிஸ்டர் பண்றீங்களா ?”
பெருத்த அவமானம். வாசகர்களே, உங்கள்ள யாரவது இந்த மந்தப் புத்தியை கண்டீங்கன்னா தயவு செஞ்சு புடிச்சு போலீஸ்ல குடுங்க. சத்தியமா இது தொல்லை தாங்க முடியல.
“லைப் இஸ் வெரி ஷோர்ட் ரைட்டர். ஆல்வேஸ் பீ ஹாப்பி”
ஆஆஆஆஆ……………………………
அதை விடுங்க. எங்க விட்டேன் ? லைப் இஸ் வெறி ஷோர்ட்…சி, சி அந்த பொண்ணோட மைன்ட் செட் அங்க போவோம் நாங்க.
நொடி கதையில இது வரைக்கும் பாஸ்ட்போவர்ட், ஸ்லோமோஷன் எல்லாம் பாத்திருப்பீங்க. இப்போ முதல் முறையா வீ ஆர் இன்றோடியூசிங் ஆண் அண்ட் பெண் ஸ்டோரிஸ்..
அந்த வகையில நாம ஹீரோ மண்டைக்குள்ள மந்தப் புத்தி இருக்குற மாதிரியே நம்ம ஹீரோயின் மண்டைக்குள்ளயும் ஒருத்தி இருக்கா.. உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். மூனாவது கதையில நான் சொன்னப்படி அவளுடைய எண்ணங்களை உங்கள்ட பகிர எனக்கு ஹெல்ப் பண்றது அவள்தான்.
ஆனா ஒரு சின்ன டெக்னிகல் பிரச்சனையால அது கனெக்ட் பண்ண நெறைய டைம் எடுத்துக்கிச்ச்சு.. அதனால நம்ம கதையோட பாதிக்கப்பறம் இருந்து கண்டின்யு பண்ணப் போறோம். இந்த நொடியில தான் பையன் மனசுல நெஞ்சுக்குள் பெய்திடும் சூர்யா ரேன்ஜ்ல கற்பனை பண்ணிகிட்டிருந்தாரு.
“ஆமா.. ஒரு எழுத்தாளர் ஒரு பொண்ணோட மண்டைக்குள்ள இருக்க குரங்கு கூட பேசப் போகிறார். எல்லாரும் அந்த அபூர்வக் காட்சியை கை தட்டி ரசியுங்கோ….”
மந்தப் புத்தி என்னதான் இருந்தாலும் அவசரப்புத்தியும் ஒரு பொண்ணுதான்.. ஐ மீன் ஒரு பொண்ணோட புத்திதான். அதை குரங்கு அது இதுனா அப்பறம் பெண்ணியவாதிகள் என்னை செருப்பால அடிப்பாங்க பாத்துக்க.
“அவசரப்புத்தி…”
‘மந்தப்புத்தி… அவசரப்புத்தி… என்னவொரு பொருத்தம். ஆஹா. உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்….(செந்தில் பாட்டு) ம்ஹ்ம்ம்ஹ்ஹ்ஹம்ம்ம்ஹ்ஹம்ம் – அடைக்கப்பட்ட வாயிலிருந்து வரும் சத்தம்”
ஹப்பாடா… அது வாயில டேப் போட்டு ஒட்டியாச்சு… வாங்க இப்போ இந்த மந்தப் புத்தியோட தொல்லைல இருந்து தப்பிச்சு கொஞ்ச நேரம் அந்தப் பொண்ணோட அவசர புத்தி கூட ட்ராவல் பண்ணாலாம்.
நொடி 23 – ஃபீமேல் வெர்ஷன்
“பையன் டம்மி தான் போல.. உக்காந்து எவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் எதுவுமே பேச மாட்டீங்கரானே… முன்னாடி எழும்பி வந்ததும் நான் கூட ஏதோ பெருசா எல்லாம் கிழிக்கிரானு நினைச்சேன்.. இவன் என்னடான்னா பேசாம உட்கார்ந்துட்டு வாரான்.. நாம நினைக்கிற அளவுக்கு அவனுக்கு நம்மாள தெரியாதோ.. நாமதான் இவ கிட்ட பேசுவானுன்னு நினைச்சிட்டு இருக்குமோ.. ஒருவேளை அவனுக்கு இவள யாருனே மறந்து போயிருக்குமா.. நான்தான் தேவையில்லாம அவனைப் பத்தி நினைச்சுட்டு இருக்கேனோ.. ஐயையோ இவ்வளவு நாளா சிங்கிளா இருந்தேனே… இந்த லூசு பயலோட சின்ன புள்ள தனத்தை பார்த்து தேவையில்லாம ஆசைப்பட்டேன்.. கடவுளே தெரியாம உனக்கு துரோகம் பண்ணிட்டேன் கடவுளே.. இதுக்கப்புறம் இந்தமாதிரி துரோகம் பண்ண மாட்டேன்.. அப்பா என்ன மன்னிச்சிடுங்க.. இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர வேறு எந்த ஆம்பளையும் பாத்ததில்ல பா… ஓ….. மே பீ….. விஜய் தேவரகொண்டா தவிர, அதர்வா தவிரவும், கண்டிப்பா புதுசா ஒருத்தர் வந்தாரே,,, அர்ஜுன் தாஸ் அவரும்தான், கண்டிப்பா நம்ம செல்லம் ஹரிஷ் கல்யாண் இல்லாம இருக்குமா ?”
“ஹேய் ஹேய் அவசர புத்தி என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ… இத்தனை நாளா பாய்ஸ் பக்கமா போயிட்டு இருந்த ஸ்டோரில இன்னைக்கு தான் நமக்கு இன்டராடக்சன் வருது.. இப்படியா என் மானத்தை வாங்குவா ? என்ன பாக்குறவங்க எல்லாம் என்ன நினைக்க போறாங்க… கொஞ்சமாவது அதெல்லாம் நீ யோசிச்சு பாக்க மாட்டியா.. எந்த பையனை கண்டாலும் வாய பொளந்து விட்டுவிட்டு வழிய வேண்டியது…”
ஏன்மா தாயே பசங்க சண்டை தாங்க முடியாம தான் நான் இங்கே வந்தேன்.. இங்கேயும் சண்டையா.. ? இந்த இன்றோடக்சன் கொஞ்சம் ஒழுங்கா அமையல தான் ஆனாலும் இப்ப நான் சொல்லுறேன் . இதுதான் அவளோட அவசரப் புத்தி.. நாம் வாயை திறந்து ஒரு வார்த்தை சொன்னாலே அதிலிருந்து 10,000 12,000 விஷயத்தை யோசிச்சு ஊதிப் பெரிதாக்கி கதையே முடிக்கிற அளவுக்கு கொண்டு போய்விடும்.. உதாரணமா சொல்லனும்னா ஒரு நாள் இவளுக்கு டீ குடிக்க ஆசையா இருந்தது. டீ குடிப்போம் அப்படின்னு ஒரு வார்த்தை மட்டும் தான் சொன்னா.. அப்போ இவளோட அவசர புத்தி திடீர்னு,
“டீ, டீனா சூடா இருக்கும், டீல தேயிலை சீனி எல்லாம் இருக்கு, சீனி குடிச்சா சீனி நோய் வரும், சூடா ஏதாவது குடிச்சா நாக்கு சுட்டுரும், நாக்கு சுட்டிடா அந்த நேரம் வேறு எந்த டேஸ்ட்டுமே தெரியாது, சீனி நோய் வந்தா உனக்கு உடம்பெல்லாம் குண்டாகிவிடும், குண்டான நீ பார்க்க அசிங்கமா இருப்ப, அசிங்கமா இருந்தா உன்னை யாருமே கணக்கெடுக்க மாட்டாங்க, யாருமே கணக்கு எடுக்கலைன்னா உனக்கு கல்யாணம் ஆகாது, கல்யாணம் ஆகலைன்னா நீ அம்மா அப்பாக்கு பெரிய பாரம் ஆகிடுவ, அம்மா அப்பாக்கு பாரமா இருக்கிறது மட்டுமில்லாம உடம்பு போட்டு உலகத்துக்கும் பாரம் ஆகிடுவ, அதனால நீ ஔவையார் மாதிரி கூட வாழ முடியாது, ஏன்னா ஒரு குச்சியை ஊன்றினா 3 துண்டா உடைந்து போய்டும்… கடைசி வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்கையை பிரயோசனம் இல்லாமல் வாழ்ந்து செத்து போயிடுவ…”
“அடியாத்தி.. ஒரு டீக்காகவா என் வாழ்க்கையாகவே பாழாக்குன… உன்ன மாதிரி ஒரு அவசரம் புடிச்ச புத்தியை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியலையே…”
என்ன வாசகர்களே, இதுவரைக்கும் மந்த புத்தியோடு அரசல் புரசலான பேச்சால அதிர்ந்துபோன நீங்க இத பார்த்துட்டு என்ன நினைக்கிறீங்க.. பாவம் இல்ல இந்த பொண்ணு.. இந்த அவசர புத்திதான் கடைசி கதையில நடந்த எல்லா பேச்சு வார்த்தைகளுக்கும் காரணம்.
கதைக்குள் வருவோம். அவன் தன்னிடம் பேச மாட்டானா என்ற ஏக்கத்தில் இருந்து அவன் பேசினால் என்ன பேசுவான் என்பது தொடர்பாக அவளுடைய எண்ணம் மாறி இருந்தது.
நொடி 24 – ஃபீமேல் வெர்ஷன்
“அன்னிக்கி எனக்கு பக்கத்துல பஸ்ல வந்தது நீங்கதானே அப்படினு கேப்பான்.. நீ ஆமான்னு சொல்லுவ.. “நான் தூங்கி விழுந்தப்ப என்னை புடிச்சிகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அப்படின்னு சொல்லுவான். நீ நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு அப்படி நீ கேட்ப..”
“எது நமக்குள்ளயா.. ஏய்.. இப்ப தான் முதல் தடவை பேச போறோம் அப்படி எல்லாம் பேசி வச்சு தொலைத்து விடாதே..”
“சரி சரி.. நோ மென்ஷன்.. அப்படின்னு நீ சொல்லுவ.. அதுக்கு அப்புறம் அவன் நீங்க எங்க போறீங்க அப்படின்னு கேட்பான், அதுக்கு ஏன் இத்தனை நாளா பின்னாடி வாறீங்களே உங்களுக்கு தெரியாதா அப்படின்னு நீ சொல்லுவ..”
“ஏய் இல்ல இல்ல நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன் நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கவே கூடாதுன்னு இருக்கேன்.”
“அப்போ ஓகே… அது தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க ?”
“நோ.. அப்படி எல்லாம் பேசாதே அதெல்லாம் ரொம்ப ரூடா இருக்கும்.. “
“அதுவும் நியாயம்தான்.. அன்னைக்கு நீங்க தூங்கி விழுந்தப்போ எந்த வேலைக்கு போயிட்டு இருந்தேனோ அதே வேலைக்கு தான் இன்னைக்கும் போயிட்டு இருக்கேன்னு சொல்லு.. இப்பிடி பேசுனா பழைய கதையை நீ ஞாபகம் வச்சிருக்க என்றதாலே நீ பழசை மறக்காத பொண்ணுன்னு இமேஜ் வரும். அதுமட்டும் இல்லாம நீ ஜாலியான டைப் பொண்ணு அப்படினும் இமேஜும் வரும்..”
“இது நல்லா இருக்கே… ஸ்கிரிப்ட் படி அவன் பேசினால் நானும் பேசுறேன்..”
“அவன் உனக்கு கை காட்டுறான் நினைக்கிறேன் எனக்கு ஏதோ தெரியுது கொஞ்சம் இந்த பக்கம் பாரு.. “
நொடி 25 – ஃபீமேல் வெர்ஷன்
“ஹாய்… “
அவளுடைய கவனத்தை ஈர்க்கும் படியாக அவன் கைகளை மேலும் கீழுமாக அசைத்து தருணம்தான் மேலே சொல்லப்பட்டது. அவள் என்ன என்று திரும்பிப் பார்க்கும் பொழுது, ஹாய் என்று அவன் சொன்னதும், இவ்வளவு நேரமும் தன்னுடன் இவன் பேசுவானா மாட்டானா என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தவளுக்கு பேரதிர்ச்சியாகவே முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போனாள். அவளுடைய ஸ்தம்பிப்பு ஒரு நொடி என்றால் அவளுடைய அவசர புத்தியின் ஸ்தம்பிப்பு வெறும் 2 மில்லி செகண்டுகள் தான். உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “நாங்கள் இவ்வளவு பெரிய ஸ்கிரிப்ட் போட்டு வைக்கிறோம் வெறுமனே ஹாய் சொல்கிறானே” என்கின்ற கோபத்தில் ஒரு பதிலை அவளுடைய வாய்க்கு அனுப்பி வைத்துவிட்டது.
நொடி 26 – ஃபீமேல் வெர்ஷன்
“ஹாயா ???”
வழக்கமாக, அவர்களுக்குள்ளே தயாராகல், வெளிப்படுத்தல் என 2 கட்டங்கள் இருக்கும். அதில் முதலாவது கட்டத்திலேயே அவசர புத்தி யோசிக்கின்ற எல்லா விடயங்களும் இருக்கும். அவள் அதில் எதனை பேச வேண்டும் என்று நினைக்கிறாளோ அது மட்டுமே வெளியீட்டு கட்டத்திற்குப் போகும். ஆனால் முற்று முழுதாக அதிர்ச்சியில் உறைந்திருந்தவளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கவில்லை. அதனை உணராத அவசர புத்தியும் கொஞ்சம் அவசர பட்டு விட்டது. மைண்ட் வாய்ஸ் என சத்தமாக அனுப்பிவிட்டது.
நான் என்ன பேசினேன் என்று அவள் உணர்வதற்குள்ளேயே அவசரப் புத்தி மீண்டும் டக்கென்று சுதாகரித்துக் கொண்டு விட்டது. ஐயையோ உளறி விட்டோமே… டக்கென்று இதே ஆட்டிடியூட்டை கொண்டு செல்ல வேண்டும் இல்லாவிட்டால் இவள் என்னை துவைத்து எடுத்து விடுவாள்…
அடுத்த அட்டாக்…
நொடி 27 – ஃபீமேல் வெர்ஷன்
“ஜஸ்ட் ஹாய் மட்டும் சொல்றதா இருந்தா வழக்கம்போல பின் ஜன்னல் சீட்டில் போய் உக்காந்துக்கிட்டு இருந்து நான் இறங்கினதுக்கப்புறம் எட்டிப்பார்த்து சொல்லி இருக்கலாமே ? கஷ்டப்பட்டு முன்னால வந்து பக்கத்துல உட்கார தேவலையே ?”
மறுபடியும் போட்டுத்தாக்கியாயிற்று… பையன் கொஞ்சம் பயந்து போய் தான் இருக்கிறான் போலிருக்கிறது இவள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள்ளாகவே சீக்கிரமாக அவனை நோக் அவுட் செய்து விடுவோம்.
நொடி 29 – ஃபீமேல் வெர்ஷன்
“ஹே.. என்ன ? என்னையே பாக்குறீங்க ? பதில் சொல்லுங்க…”
இப்பொழுது அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடப்பது எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. தன்னுடைய அவசர புத்தி தன் சுயநினைவுக்கு முன்பதாகவே பேசிவிட்ட வார்த்தைகளை ஒவ்வொன்றாக கிரகித்து என்ன நடந்திருக்கின்றது என்று அவள் புரிந்து கொள்கிறாள்.
நொடி 30 – ஃபீமேல் வெர்ஷன்
“கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ”
ஆம்.. கதையின் ஆரம்பத்தில் நீங்கள் வாசித்து இந்த டயலாக்கை சொன்னது நம்முடைய அவசர புத்திதான். நான் என்ன செய்துவிட்டேன்.. என சுத்தமாக புரியாமல் பயந்து போய் இருக்கிறாள். தன்னுடைய வாயிலிருந்து கட்டுப்பாடில்லாமல் வந்துவிட்டு இந்த வார்த்தைகளில் தானும் அவனை இத்தனை நாளாக கவனித்துக்கொண்டே வந்திருக்கின்றாள் என்பது அவனுக்குத் தெரிந்து விட்டது என்பதனை உணர்ந்து கொண்டாள்.
நொடி 31 – ஃபீமேல் வெர்ஷன்
“இதற்கு மேலும் மறைப்பதற்கும் மௌனம் சாதிப்பதற்கும் எதுவுமில்லை. அவன் தன்னை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றான் எனவும் தெரியவில்லை.
அவசர புத்தி… தனியா என் கைல மாட்டுனா நீ செத்த…”
தன்னுடைய அவசரத்தால் ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையை கிரகித்துக் கொண்ட அவசரப் புத்தி கொஞ்ச நேரத்திற்கு அமைதியானது.
“இப்பொழுது அவனுடைய முகம் எவ்வாறு இருக்கின்றது என்பதனை நான் பார்த்தே ஆகவேண்டும். அவனுடைய உணர்ச்சிகள் என்னவாக மாறி இருக்கின்றது என்பதனை பார்த்தே ஆக வேண்டும்.”
தனது கழுத்தை அசையாமல் வைத்துக்கொண்டு தன்னுடைய தலையை 90 பாகை ஆக அவள் புறமாய் திருப்பினாள். திருப்பிக் கொண்டு இருக்கும் பொழுது தன்னுடைய முகம் எவ்வாறு மாறி இருக்கின்றது என்பதனை பார்ப்பதற்காக அவனும் திரும்புகின்றான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். செய்கின்ற தப்பையெல்லாம் செய்துவிட்டு கள்ளப் பார்வை பார்க்கும் இரண்டு பேருடைய முகங்களும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நகைச்சுவையாக தோன்றின.
நொடி 32
ஹாஹா ஹாஹா….
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்கள் போல வாய்விட்டு சிரித்துக் கொண்டார்கள்…
இதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் முகத்திலும் வந்திருக்கின்ற இந்த சிரிப்பு அப்படியே சிரிப்பாக இருக்கட்டும். கூடிய சீக்கிரத்தில் நம்முடைய ஹீரோ, ஹீரோயின், மந்தபுத்தி மற்றும் அவசர புத்தியோடு விரைவில் சந்திக்கிறேன்…
பாய்… பாய்…
இது போன்ற வேறு கதைகளை வாசிக்க கதைகள் பகுதிக்கு செல்லுங்கள்
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்