நாசாவின் துணிவான படைப்பான பார்க்கர் சூரியன் ஆய்வு இந்த வார இறுதியில் சூரியனுக்கு அண்மையில் ஐந்தாவது முறையாக துணிகரமாக பறத்தலை மேற்கொண்டது. துணிவான பயணம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. இவ்வளவு தூரத்தில் இருக்கும் நம்மையே எரித்துவிடும் வல்லமை கொண்ட சூரியனுக்கு அண்மையில் பறப்பது என்பது மனித குலம் மேற்கொண்ட முயற்சிகளிலேயே மிகவும் துணிகரமான ஒன்றாகும்
மே 9 ஆம் தேதி முதல் விண்கலம் சூரிய கண்காணிப்பு மாரத்தான் (நீள்தொடர்) ஒன்றை நடத்தி வருகிறது. அவதானிப்புகள் ஜூன் 28 வரை தொடரும், இது சூரியனை கடந்த ஐந்தாவது முறையாக சுழன்று கடந்த போது, ஏழு வாரங்களுக்கும் மேலான அளவீடுகளைக் கொண்டிருந்தது.
இந்த சுற்றுப்பாதையின் மிக நெருக்கமான பெரிஹெலியன் என அழைக்கப்படும் அணுகல், ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:23 மணிக்கு கீழைத்தேய பகல் நேரம் (0823 கிறீன்விச் சராசரி நேரம்) நிகழ்ந்தது. அந்த நேரத்தில், ஆய்வு விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 11.6 மில்லியன் மைல்கள் (18.7 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருந்தது. அது சூரியனுடன் ஒப்பிடும்போது 244,000 மைல் (393,000 கிலோமீட்டர்கள்/மணித்தியாலம்) வேகத்தில் பயணிக்கிறது.
நாசாவின் பார்க்கர் சூரியன் ஆய்வு
நாசாவின் பார்க்கர் சோலார் ஆய்வு என்பது சூரியனைப் பற்றி ஆராய்வதற்கான 1.5 பில்லியன் டாலர் பணியாகும். ஆகஸ்ட் 2018 இல் தொடங்கப்பட்ட இந்த பணி, நட்சத்திரத்தின் அதிவெப்ப வெளிப்புற வளிமண்டலமான கொரோனா வழியாக பறப்பதன் மூலம் சூரியனை “தொடுவதற்கு” ஒரு கடினமான விண்கலத்தை அனுப்பியது.
பார்க்கர் சூரிய ஆய்வு அதன் வெற்றிகரமான ஏவுதலுடன் ஆகஸ்ட் 12, 2018 அன்று 7 ஆண்டு பயணத்தைத் தொடங்கியது. இது வெள்ளியின் அருகாமையில் பல பறத்தல்களை செய்வதைத் தொடர்ந்து 2018 நவம்பரில் சூரியனை எட்டியது. இதில் முதலாவது அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றது.
கொரோனா (கொரோனா நோயல்ல. இது நட்சத்திரங்களின் வெளிப்புற வட்டத்தைக் குறிக்கும்) எனப்படும் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் நோக்கில் பார்க்கர் சூரிய ஆய்வுக்கலம் ஆகஸ்ட் 2018 இல் தொடங்கப்பட்டது. எங்கள் நட்சத்திரத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள விரும்பும் விஞ்ஞானிகளுக்கும் அது போன்ற மற்றவர்களுக்கும் கொரோனா முன்வைக்கும் இரண்டு முக்கிய மர்மங்களைத் தீர்க்க முயற்சிக்க பார்க்கர் சோலார் சூரியக்கலம் நான்கு வெவ்வேறு கருவித் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.
அந்த இரண்டு மர்மங்களில் முதலாவதாக, கொரோனா நம்பமுடியாத வெப்பம், மில்லியன் கணக்கான டிகிரி நீங்கள் எந்த அளவைப் பயன்படுத்தினாலும் சூரியனின் புலப்படும் மேற்பரப்பை விட மிகவும் வெப்பமானது. இத்தகைய கண்கலங்கும் வெப்பநிலைகளை இந்த பகுதி எவ்வாறு அடைகிறது என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இரண்டாவதாக, கொரோனா சூரியக் காற்றிற்கான (சூரியனிலிருந்து சூரியனின் மேற்பரப்பு மற்றும் சூரிய மண்டலத்தின் குறுக்கே பாயும் ஏற்றம் செய்யப்பட்ட துகள்களின் ஓடை) ஒரு ஏவுதளமாக செயல்படுகிறது.இந்த சூரியக் காற்று கொரோனாவில் நம்பமுடியாத வேகத்தை அடைகிறது. விஞ்ஞானிகள் அந்த செயல்முறை எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
இந்த வார இறுதியில் நிகழும் ஐந்தாவது பெரிஹேலியன் மற்றொரு புதிரான நிகழ்வுக்கு முன்னோடியாகும். ஜூலை 10 ஆம் தேதி (ஜூலை 11 ஜிஎம்டி), பார்க்கர் சூரிய ஆய்வு வெள்ளிக் கிரகத்துக்கு அண்மையாக பறக்கும் பயணத்தை நடத்தும். இந்த யுக்தி அது செயற்படுத்தப்போகும் தொடரில் ஒன்றாகும். இது விண்கலத்தை சூரியன் நோக்கி தொடர்ந்து ஊர்ந்து செல்வதற்கு போதுமானதாக இருப்பதன் மூலமாக, பெரிஹேலியன் கடத்தல்களின் போது சூரியன் நட்சத்திரத்தின் மிக நெருக்கமான காட்சிகளை அளிக்கும்
நாம் விடிவெள்ளி என அழைப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். வெள்ளிக் கிரகத்தின் பின்னால் ஒரு சிறிய வால் போல இருக்கும். ஜூலை பறக்கும் ஆய்வுக்கலம் பூமியின் அண்டை வீட்டைப் படிப்பதற்கான ஒரு பிரதான வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் விண்கலம் வெள்ளிக்கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 517 மைல் (832 கி.மீ) மேலே செல்லும். குறிப்பாக, இந்த பறக்கும் ஆய்வுக்கலம் விஞ்ஞானிகள், வெள்ளிக்கிரகத்தின் வளிமண்டலம் அதன் வால் என்று நாம் அழைக்கும் பகுதி மூலம் எவ்வாறு விலகிச் செல்கிறது என்பது பற்றிய முக்கிய தகவல்களை விஞ்ஞானிகளுக்கு வழங்க வேண்டும். இது ஒரு வகையான போனஸ் அறிவியல்.
பறக்கும் ஆய்வு வாகனமான பார்க்கர், சூரியன் ஆய்வை அடுத்தடுத்த பெரிஹேலியன் பயண யுக்திச்செயற்பாடுகளின் போது அதன் முக்கிய இலக்கை நெருங்கச் செய்யும். பயணத்தின் முடிவில், 2025 இன் பிற்பகுதியில், விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 4 மில்லியன் மைல் (6 மில்லியன் கி.மீ) தொலைவில் பறக்கும்.
சூரியப்புயல் பற்றி படிக்க இந்த பக்கத்துக்கு செல்லவும்.