Mothers Day / அன்னையர் தினம்
கண் திறந்து நாம் முதலில் பார்க்கும் உருவமவள், அன்பென்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியாப் பேதை நெஞ்சது. தியாகமும், உண்மையான அன்பும், பரிபூரண அர்ப்பணிப்பும் காட்டும் அளவின்றி காட்டும் ஒவ்வொரு அன்னையும், எல்லைகளில் போராடும் 1000 இராணுவ வீரர்களை விடவும் சக்தி வாய்ந்தவள்.
கண் திறந்து நாம் முதலில் பார்க்கும் உருவமவள், அன்பென்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியாப் பேதை நெஞ்சது. தியாகமும், உண்மையான அன்பும், பரிபூரண அர்ப்பணிப்பும் காட்டும் அளவின்றி காட்டும் ஒவ்வொரு அன்னையும், எல்லைகளில் போராடும் 1000 இராணுவ வீரர்களை விடவும் சக்தி வாய்ந்தவள்.
Mothers Day / அன்னையர் தினம் வரலாறு
நவீன அன்னையர் தினமானது இருபதாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் Anna Jarvis என்பவரால் முன் மொழியப்பட்டதாகும். அதற்கு முந்திய காலங்களில் கிரேக்க ரோம நாகரிகங்களில் கடவுள்களின் அன்னை என குறிக்கப்பட்ட தேவதைக்காக அன்னையர் தினமானது கொண்டாடப்பட்டு வந்துள்ளது.இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் முன் மொழியப்பட்ட அன்னையர் தினமே இன்று 10.05.2020 கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னையர் தினத்துக்கான நாளானது ஒவ்வொரு வருடமும் வரும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் இது ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை.உதாரணமாக நோர்வேயில் மாசி மாதத்தின் இரண்டாவது ஞாயிறும், ஆப்கானிஸ்தான் உட்பட்ட 25 நாடுகளில் மகளிர் தினத்தன்றும், வேறு வேறு நாடுகளில் மே மாதத்தின் முதல் ஞாயிறு, கடைசி ஞாயிறு மற்றும்
குறிக்கப்பட்ட நிலையான திகதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பமும் வெற்றிகரமாக வாழ குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரதும் உடல்,உள சார்பான ஆரோக்கியங்கள் நல்லமுறையில் பேணப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் ஒரு அன்னைக்கு நிச்சயமாக மாற்றீடானது இல்லை.எப்பொழுதும் நமது நன்மையை மட்டுமே விரும்பி தனது சுய விருப்பங்களை தியாகம் செய்யும் அன்னைக்கு, இந்த ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் அவருடைய விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவேற்றுவது நமது கடமையாகும்.
பத்து மாதம் சுமந்து,பல இன்னல்களைத் தாண்டி நம்மை ஈன்றவள்! தன் ஆசாபாசங்களைத் துறந்து, தன் குழந்தை வளர அயராது பாடுபட்டவள்!பூலோகத்தில் நம்மை அவதரிக்க வைத்து, பூ போல் மென்மையாய் நம்மை பாதுகாத்தவள்! எந்தவொரு எதிர்பார்ப்பும் பிள்ளைகளிடமில்லாமல், எந்நேரமும் தன் பிள்ளையை நினைப்பவள்!அன்பு,காதல்,பொறுமை,போன்ற,அனைத்து நல் இயல்பலுக்கும் இலக்கணமானவள்! நான் படித்தாலும்,படிக்கவில்லை எனிலும் நான் ஈன்றவன்/ள் படித்து நல்நிலைக்கு வரமுன்னோடியாய் இருப்பவள்! ஒவ்வொரு இன்ப,துன்பங்களிலும் நம்முடனேயே,ஒட்டிக்கொண்டு ஆறுதலாய் இருப்பவள்! நமக்கு ஓர் வலி என்றால், நம்மை விட பன்மடங்கு வலியை நம்மால் சுமப்பவள்! எந்த மடியில் சாய்ந்தாலும் அந்த சுகம் வராது என் அன்னையின் மடியே சுவர்க்கம்! அன்னையே இந்த வர்ணனைகள் எவ்வளவும் போதாதம்மா!
தாயை மதிப்போம் தாய்மையை போற்றுவோம் உலக தாய்மார்கள் அனைவருக்கும் Cheல்லா வின் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
இதேபோல மனித உறவுகள் பற்றி மேலும் வாசிக்க இங்கே செல்லவும்,
image source :https://best-wallpaper.net/Mother-and-baby-love_wallpapers.html