பொறுப்புத் துறப்பு : இந்த உலகின் மிகப்பயங்கரமான 10 இடங்களும் உங்களை மரணத்தின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும்.நீங்கள் உயரம், ஆழம் முதலானவற்றைக் கண்டு பயப்படும் நெஞ்சுடையவர்களாயின் இந்த இடங்கள் உங்களுக்கானது அல்ல. சாகசத்தை விரும்பக் கூடிய மற்றும் எந்த வகையான பயங்கரங்களையும் கண்டு அஞ்சாதவரா நீங்கள் ? எனில் இந்தக் கட்டுரை உங்களை முழுமையாக ஆச்சரியப்படுத்தும்.
இப்பொழுது மிகப் பயங்கரமான இடங்கள் பற்றிப் பார்ப்போம்.
உலகின் மிகப் பயங்கரமான 10 இடங்கள்
மரணப் பாதை – மிகப் பயங்கரமான பாதை
வடக்கு யுங்காஸ் பாதையானது நீங்கள் அதனை மரணப் பாதை என அழைப்பதற்கான சகல காரணங்களையும் கொண்டுள்ளது. இந்த 69 கிலோமீட்டர் பாதையில் மேல் நோக்கியோ, கீழ்நோக்கியோ பயணிக்கும் பயணம் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான பயங்கரமான வளைவுகளை கொண்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு வளைவிலும் உங்களை 2000 அடி பள்ளத்தில் தள்ளிவிடக்கூடிய பனிப்புகார், நிலச்சரிவு, நீர்வீழ்ச்சி மற்றும் செங்குத்துப் பாறைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்கும்.
இந்தப் பாதை அமேசானின் மழைக் காடுகள் மற்றும் தலை நகரத்தைப் பிரிக்கும் மலைப் பகுதியை சூழ அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையானது வழக்கமாக மரக்கட்டைகள் மற்றும் பலகைகளை கொண்டு செல்லும் லொறி சாரதிகளாலும், பேருந்து சாரதிகளாலுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது தான் பயங்கரமான செய்தி. இருப்பினும் தமது வாழ்வாதாரத்துக்காக இந்த பாதையில் தினமும் செல்கிறார்கள்.
பாம்புத்தீவு – உலகின் மிகக்கொடிய இடம்
பிரேசிலின் கடற்கரையிலிருந்து 25 மைல்கள் அப்பால் உள்ள தீவொன்றில் அந்த நாட்டு சுதேசிகள் கூட பயணிக்கப் பயப்படுவார்கள். தனது கரைக்கு அண்மையில் இருக்கத் தவறிய ஒரு மீனவர் சில நாட்கள் கடந்து தனது படகில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக வதந்திகள் உள்ளன. Ilha da Queimada Grande என அழைக்கப்படும் இந்தத் தீவுக்குள் பிரவேசிப்பது மிகவும் பயங்கரமானதும் சட்டத்துக்கு புறம்பானதுமென பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்குள்ள அச்சுறுத்தலானது golden lance head snakes எனப்படும் குழி வைப்பர் இனப் பாம்புகள் என சொல்லப்படுகிறது. இவை மிகவும் கொலைகாரத்தனமான பாம்பினம் ஆகும்.
நட்ரோன் ஏரி – உலகின் மிகவும் வாழத்தகாத இடம்
நாம் நட்ரோன் ஏரியின் உப்பு சதுப்பு நில வளையங்கள் நம்மை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்வோம். இது உலகின் மிகவும் வாழத்தகாத இடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. வட தான்சானியாவின் இந்த ஏரி பெரும்பாலும் நெருப்பின் ஏரி போலவே நடந்து கொள்கின்றது. ஏனெனில் இதில் உள்ள அதிகளவு நட்ரோன் (சோடியம் காபனேற்று தச ஐதறேற்று) மனித கண்களையும் தோலையும் அறிக்கை வல்ல அமிலத்தன்மையை உடையதாக, சிலவேளைகளில் pH 12 ஐ அடையக்கூடியதாக உள்ளது.
இந்த அருவி சிவப்பு நிற பாக்டீரியாக்களையும் கொண்டிருப்பதால் இளஞ்சிவப்பு நிற சாயலைக் கொண்டுள்ளது. பல உயிரினங்களால் 120 டிகிரி வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாவிட்டாலும் சையனோ பாக்டீரியாக்கள் அந்த இடத்தை தமது வீடாக்கி அதனை வெளிப்படுத்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களை வெளிப்படுத்துகிறது. அதிசயமாக 2.5 மில்லியன் லெசர் பிளமிங்கோ பறவைகள் இந்த ஆற்றின் தரைகளை தங்கள் கூடலுக்காக பயன்படுத்துகின்றன.
Oymyakon – உலகின் அதிதீவிர காலநிலைகள்
ரஷ்யாவில் உள்ள Oymyakon எனும் கிராமம் அதன் அதிதீவிர காலநிலை மாற்றங்களுக்காக உலகின் பயங்கரமான இடமாக கருதப்படுகின்றது. இங்கு காணப்படும் மோசமான வெப்பநிலைகள் வாழ்க்கையை கஷ்டமாக்குகின்றன. சில சமயங்களில் வெப்பநிலையானது – 40 பாகை செல்சியஸுக்கும் வீழ வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் எந்த வகையான காய்கறிகளையும் விளைவிக்க முடியாததால் உணவுத்தட்டுப்பாடு அடுத்த பிரச்சனை. எவ்வாறாயினும் 500 பேர் இந்த கிராமத்தில் வாழ்கின்றனர்.
மரணப் பள்ளத்தாக்கு – உலகின் மிகத் தீவிரமான இடம்
மரணப் பள்ளத்தாக்கு என்பது கலிபோர்னியா மற்றும் நெவேடா எல்லையில் உள்ள அதிக வெப்பம் வாய்ந்த பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். இது உலகின் மிக சூடான இடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள பாலைவனங்கள் கூட குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இந்த பள்ளத்தாக்குக்கு இணையான வெப்பத்தை சில வேளைகளில் பெறும்.
குடியேறிகள் கூட்டமொன்று 1849-1850 காலப்பகுதியில் இங்கு தொலைந்து போனது. அதில் ஒருவர் மட்டுமே இறக்க மற்றவர்கள் அனைவரும் சாரணர் பயிற்சி பெற்ற வில்லியம் லெவிஸ் மற்றும் ஜோன் ரோஜர்ஸ் ஆகிய இருவராலும் காப்பாற்றப்படதாகவும், அவர்கள் வெளியேறும் போது “சென்று வருகிறோம், மரணப் பள்ளத்தாக்கே “ என சொன்னதால் அந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
எலும்புக்கூட்டு கடற்கரை – மோசமான காலநிலை
அங்கோலாவுக்கும் வடக்கு நமிபியாவுக்கும் பரந்திருக்கிறது எலும்புக்கூட்டு கடற்கரை. அதன் மோசமான காலநிலையும், தப்பிப்பதற்கு 0 வீதமான சாத்தியக்கூறுகளே காணப்படுவதுமே இந்த பட்டியலில் இடம்பெறக் காரணம். காலநிலை, சூடான காற்று, குறைவான உணவு மற்றும் நீர் என்பன இங்கு பயணிகள் சுற்றித்திரிய பெரும் சவாலாக உள்ளன.
இதனைத் தவிர இங்கு யானைகள், ஆமைகள், திமிங்கிலங்கள், கடற்சிங்கங்கள் மற்றும் இன்னும் பல விலங்குகளின் எலும்புகள் நிறைந்து பார்க்கவே பயங்கரமாக இருக்கின்றன. அது போதாதென கும்பல் சண்டைகள் மற்றும் கொள்ளையடிப்புகள் இந்த இடத்தை இன்னும் பயங்கரமாக்குகின்றன.
டனகில் பாலைவனம் – எரிமலை செயற்பாடு இயக்கத்தில் உள்ள பிரதேசம்
வழக்கமாக டனகில் பாலைவனம் 50 பாகை செல்சியஸ் காற்று, எரிமலைகள் மற்றும் விஷப்புகைகளை கக்கும் வெந்நீர் விசிறிகளுடன் வாழ்க்கைக்கு உதவாத இடமாக உள்ளது. நீங்கள் இங்கு மிகக் குறுகிய காலமே இருந்தால் கூட உங்கள் உடல் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
நரக வாசல் – நரகத்துக்கான கதவுகள் இவைதான்
டர்க்மெனிஸ்டன் நாட்டின் டராவா வாயுக் குழிகள் நரக வாசல் என அழைக்கப்படுகின்றன. இது உயிர்வாயுவை இயற்கையாக வெளிவிடும் குகைக்குள் இருக்கும் பிரதேசமாகும், மெதேன் வாயு சூழலில் கலக்காமல் இருக்க இந்த பிரதேசத்தை 1971இல் எரியூட்டியதில் இருந்து இன்று வரை எரிந்துகொண்டே இருக்கின்றன. இந்த இடத்தில் 230 அடி விட்டமுடைய பெரிய குழியொன்றில் வெடிப்புகள், கொதிக்கும் சேறு, செம்மஞ்சள் தீப்பிழம்புகள் என பயமுறுத்தும் இந்த இடத்தை நரகவாசல் என பெயரிட்டதில் தவறில்லை தான்.
வடக்கு காவற்தீவு – தடைசெய்யப்பட்ட மர்மப் பிரதேசம்
அந்தமான் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு காவற்தீவு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பூர்வீக மக்கள் தமது வாழ்வை பாரம்பரிய முறையில் வாழ்ந்து வருவதோடு அவர்கள் வெளியுலக தொடர்பை மறுத்தவர்கள். அவர்கள் வெளியுலகலத்துக்கு பழக்கப்படாத காரணத்தால் அங்கு வரும் மக்களை தமக்கு அச்சுறுத்தலாக நினைக்கின்றனர். அத்தோடு அங்கு வாழும் மக்களின் பாதுகாப்புக்காகவும் அந்த இடத்துக்கு யாரும் செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மடிடி தேசியப் பூங்கா – காட்டு சுவர்க்கம்
மடிடி தேசியப் பூங்காவானது பொலிவியா அமேசான் நதியினை சூழ 19,௦௦௦ சதுர கிலோ மீற்றர்கள் பரந்துள்ளது. இது மிகவும் செறிந்த காட்டுப் பிரதேசம் என்பதோடு இங்கு பல வகையான விலங்குகள், பூச்சிகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் என்பனவும் நிறைந்துள்ளன. இந்தக் காடு உலகின் மிகவும் கொடிய கொன்றுண்ணிகளை கொண்டுள்ளதால் மிகவும் பாதுகாக்கப்படுவதோடு பயணிகள் தனியாக செல்வதை வரவேற்கவில்லை.
இந்தத் தகவல்களால் உங்கள் சுவைக்குப் பொருந்துகிறதா ? இதோ உங்களுக்காக உலகின் மிகப் பயங்கரமான விலங்குகள் பற்றிய பட்டியல்
Image Source : https://hipwallpaper.com/hell-wallpapers/