அமெரிக்கா எவ்வளவு தான் வளர்ச்சி பெற்ற நாடாக இருந்தாலும் அங்கு இன்னமும் நிற அடிப்படையிடலான இனவாதம் ஓய்ந்தபாடில்லை. அதன் நீண்ட கால பதுங்கல்கள் தற்போது விகாரமாக வெடித்துள்ளன. நீண்டகாலமாக இனவாதத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த Minneapolis பொலீஸ் துறையானது காயப்பட்ட நகரத்தின் கோபத்தை எதிர்கொள்கிறது. தனது கட்டுப்பாட்டில் கைது செய்து வைத்திருந்த ஒரு கைதியை ஒழுங்காக நடத்த தவறியது மட்டுமல்லாமல் அவரது மரணத்துக்கும் காரணமாக அமைந்த மினியாபொலிஸ் போலிஸ் துறையானது இன்று அமெரிக்க மக்களிடையே பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடைபெற்றது Minneapolis இல் ?
Minneapolis என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது அந்த மாநிலத்தின் தலைநகரமான சென்.போல்ஸ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்குள்ள போலிஸ் துறையானது இதற்கு முன்பிருந்தே பல காலமாக இனவாதத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த George Floyd என்ற கறுப்பின நபரின் கழுத்தில் வெள்ளையின போலிஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து அழுத்தி அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததோடு, அதனை ஏனைய போலீசார் தடுக்காமல் இருந்ததுள்ளனர். இது தெரிய வந்த மக்கள் இந்த இனவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டங்களில் இறங்கி அவை தற்போது வன்முறைகளாக வளர்ந்துள்ளன.
எப்போதிருந்து இது நடக்கிறது ?
ஆபிரிக்க – அமெரிக்க பிறப்பினை உடைய Minneapolis பொலீஸ் நிலைய தலைவர் முன்னமே தன்னுடைய திணைக்களத்திலே கருப்பின மக்களுக்கு எதிரான இனவாதத்தை சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருப்பதாக வழக்கு போட்டிருந்தார். அவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதும் அந்த நகரத்தில் இருக்கின்ற கருப்பின மக்களோடு நல் உறவை மேம்படுத்துவதற்காக சபதம் பூண்டார்.
ஆனால் நீண்டகாலமாக துஷ்பிரயோகத்துக்கு என குற்றம்சாட்டப்பட்ட வந்த இந்த Minneapolis போலீஸ் துறை, இவ்வாறு கறுப்பின கைதி ஒரு வெள்ளையின போலீஸ் அதிகாரியின் முழங்கால்களால் நெருக்கப்பட்டு மூச்சுத்திணறி கொண்டிருப்பதனையும், மூன்று அதிகாரிகளும் தலையிடாமல் இருப்பதனையும் வெளிக்காட்டும் காணொளி வெளியானதால் சர்ச்சைக்கு உள்ளானது.
வழக்கறிஞர்கள் இதுதொடர்பாக தொடர்புபட்டுள்ள அதிகாரிகளை கைது செய்வதா இல்லையா என்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என கூறினர்.
எட்டு நிமிடங்களாக Floyd அவர்களின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்துக்கொண்டிருந்த அந்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா ? இல்லையா ? என தாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என அறிவித்ததன் காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் மீது வெடிகளையும் ஏனைய பொருட்களையும் கொளுத்தி வீசினர். பதிலுக்கு போலீஸும் சுடு தாக்குதல்களை மேற்கொண்டது.
உடனடியாக புதன்கிழமை இரவு முழுவதும் Minneapolis நகரமே போராட்ட களமானது. இந்தப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் மீது போலீஸ் இரப்பர் சன்னங்களாலும், புகை குண்டுகளாலும் அவர்களை தாக்கியதனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகளையும் விற்பனை நிலையங்களையும் கொளுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளாகக் நியூயோர்க், டென்வர், பீனிக்ஸ் மற்றும் கொலம்பஸ், ஓஹியோ ஆகிய இடங்களில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அளவுக்கு மாறிப்போய் Minneapolis போலீஸ் நிலையத்தினை கொளுத்தியுள்ளனர்.
சில நாட்களாக நடைபெற்று வந்த George Floyd மரணத்துக்கான நியாய ஆர்ப்பாட்டத்தில் நடக்கப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து போலீஸ்காரர்கள் பின்வாங்கியதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த புதன்கிழமை ஜன்னல்களை உடைத்து அதோடு வேலிகளைத் தாண்டி உள்ளே பாய்ந்து அந்தப் பொலிஸ் நிலையத்தை தீக்கிரையாக்கினர்.
Minneapolis பகுதியில் இரவு 10 மணி அளவில் போலீசார் அனைவரும் தங்களுடைய வாகனங்களில் ஏறி இந்த மோதலில் இருந்து பின்வாங்கியதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டடத்தை உடைத்து அதற்குள் இருந்த பொருட்களையெல்லாம் சிதற வைத்து அதற்குள் நெருப்பை கொளுத்தி , அதோடு பட்டாசு போன்ற பொருட்களையும் வீசியுள்ளனர் என அங்கிருந்த வெளியான காணொளிகள் மூலமாக தெரிகிறது.
நாம் இங்கு நெருப்பை கொளுத்த உள்ளோம் ஆகவே ஆயத்தமாக இருங்கள் என ஒரு மனிதன் கட்டடத்துக்கு உள்ளே சென்ற போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கின்றார். அதற்குப் பின்பு அந்தக் கட்டிடத்தில் இருந்து நெருப்பு எழ ஆரம்பித்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அதன் கூரைகள் வழியாக புகைக்க ஆரம்பிக்கின்றது.
Minneapolis நகரமானது இந்த ஆர்ப்பாட்க்காரர்களிடமிருந்து விலகி இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டது. டுவிட்டரில் சொல்லப்பட்ட தன் படி உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் , அந்த கட்டிடத்தின் உள்ளே எரிவாயு தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஜான் எல்டர் எனப்படும் மினியாப்பொலிஸ் போலீஸ் பேச்சாளர் அந்த கட்டிடத்தை விட்டு அனைத்து போலீசாரும் வெளியேறி இருந்தனர் என்பதனை உறுதிபடுத்தினார்.
துரதிஷ்டவசமாக சில தனிப்பட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பானதும் பயங்கரமானதுமான நடவடிக்கைகளாக, வேண்டுமென்றே தீ வைத்தல், கலகத்தில் ஈடுபடுதல், பொதுவுடைமை சேதம் ஆக்குதல், கொள்ளையடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
டுவிட்டரை பகைத்துக்கொண்ட அதிபர் டிரம்ப்
இந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்தி கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டது மூலமாக டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரின் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை தகர்த்து உள்ளதாக டுவிட்டர் குற்றம் சாட்டியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் குண்டர் படை என்று கூறியுள்ள தோடு அவர்களை சுடுமாறு அவருடைய இரண்டு குறித்த பதிவுகளில் பதிவிட்டது டுவிட்டர் விதிமுறைகளுக்கு எதிரானது என அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஜனாதிபதி கூறுகையில், அமெரிக்காவின் ஒரு நகரத்தில் இவ்வாறு நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, இந்த நடவடிக்கைகளை உடனடியாக உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் அல்லது நான் தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி இதனை முடிக்க வேண்டியதாக இருக்கும் என மேயர் ஜக்கப் ஃப்ரே அவர்களுக்கு அறிவித்துள்ளார். மேயர் ஜக்கப் ஃப்ரே தான் Minneapolis நகரின் மேயர்.
டிரம்ப் கூறுவதன் படி அவர், கவர்னர். டிம் வால்ஸ் க்கு வன்முறையை கட்டுப்படுத்த ராணுவ உதவியை அளித்துள்ளார்.
அந்த ட்விட்டரில், எந்த வகையான சிக்கலையும் நாங்கள் கட்டுப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் கொள்ளையடித்தல் இடம்பெற்றால் உடனடியாக துப்பாக்கிச்சூடு இடம்பெறும் என எழுதியுள்ளார்.
மேலதிகமாக சில தகவல்கள்
நியூயார்க்கின் யூனியன் சதுக்கத்தில் எக்கச்சக்கமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மாநில தலைமை இடங்களான கொலராடோ மற்றும் ஓஹியோவில் இடம்பெறும் போராட்டங்கள் பயங்கரமானதாக மாறிவருகின்றன.
திரு. Floyd அவர்களுடைய மரணத்துக்காக நியாயத்துக்கு முழுமையான அளவில் விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது.
ஜனநாயகவாதிகள் பக்கமானது மூன்று கறுப்பினத்தவர்களின் கொலைக்காக விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
எது எவ்வாறாயினும் இனக்கலவரங்கள் அமைதியான சூழலுக்கு ஏற்றவையல்ல. வெகு விரைவில் இவையெல்லாம் முடிவடைய எதிர்பார்ப்போம்.
இதுபோன்ற மேல சமூகம்சார் தகவல்களுக்கு எமது சமூகவியல் பக்கத்தை பார்வையிடுங்கள்.
News & Wall Image Source : The New York TImes