WSL, அல்லது Linux க்கான Windows Subsystem, Windows இயங்குதளத்தில்
லினக்ஸ் இயங்குதளத்தை இயக்குவதற்கு வசதியாக மைக்ரோசாப்ட்
உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.
இதன் மூலம் லினக்ஸில் இயங்கும் graphical user interface மற்றும் விண்டோஸில் உள்ள Linux Terminal மென்பொருளை எளிதாக இயக்க முடியும். இதை உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் பாராட்டியுள்ளனர்.
ஆனாலும் இதில் காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்று, installation சற்று
கடினமானது மற்றும் இது சராசரி பயனருக்கு சற்று சிக்கலானது. இதற்கு
தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனம் WSL windows செயலியை Microsoft
Storeக்கு வெளியிட்டுள்ளது.
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மைக்ரோசாப்டின் project WSL இன்
programme manager கிரேக் லோவன்(Craig Loewen) தனது யூடியூப் சேனல்
வழியாக விளக்கியுள்ளார்.
அத்துடன் The Verge இணையதளத்தின்படி, இந்த Microsoft Store இல் சேர்க்கப்படும் திட்டமானது Microsoft Windows 11 பயனர்களுக்கு மாத்திரமே என அறிவித்துள்ளது.