இன்ஸ்டாகிராம்
சமூக வலைத்தளங்களில் ஒன்றும் அறியாச் சிறுவர்கள் சிக்கி வாழ்க்கையை இழப்பது மிக அதிகமாகிவிட்டது.
ஃபேஸ்புக்கில் இணைவதற்கு வயது 18, டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் 13 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவை வெறும் ஆவண விதிமுறைகளாகவே தொடர்கின்றன.
நடைமுறையில் எந்த வயது சிறு பிள்ளையும் தனது வயதைத் தவறாக குறிப்பிட்டு கணக்கைத் தொடர முடிகிறது.
இது போன்ற சிறுவர்களின் கணக்குகளை குறிப்பிட்டு பெற்றோர் புகார் அளித்தால் மட்டுமே அந்த கணக்கை அகற்ற வழி உள்ளது.
ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் சிறுவர்களுக்கு சமூக வலைத்தளக் கணக்கு இருப்பதே தெரிவதில்லை.
சிலரோ சிறுவர்களின் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர சமூக வலைத்தள கணக்குகள் யூடியூப் சேனல்களை தொடங்கி தருகிறார்கள்.
சிறுவர்களின் கணக்குகளை பெரியவர்கள் கையாளவும் வழி உள்ளதால் இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்கட்ட முயற்சியை இன்ஸ்டாகிராம் தொடங்கியுள்ளது.
அதன்படி பயன்பாட்டாளர்கள் தங்களின் வயதைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கி உள்ளது. வயதைக் குறிப்பிடவில்லை என்றால் ஒவ்வொரு முறை உள்ளே நுழையும் போது வயதைக் குறிப்பிடும் தகவல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அனைத்து பயன்பாட்டாளர்களும் தங்களின் வயதை பதிய வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம் 13 வயதுக்கு குறைவானவர்கள் இதில் வரும் தகவல்களை பார்க்க இயலாத படி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
பலர் தவறான வயதை குறிப்பிடலாம் என்பதால் வரும் நாட்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்களின் பிறந்தநாள், புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உண்மையான பிறந்த திகதியைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தையும் இன்ஸ்டாகிராம் ஆய்வு செய்து வருகிறதாம்.
வைபர் என்ற ரோவரை நிலவில் பனிக்கட்டிகளைத் தேடி நாசா 2023 ஆம் ஆண்டு அனுப்பவுள்ளது