சிவபெருமான்
சிவபெருமான் ஒவ்வொரு கடவுளின் உருவத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் சிவபெருமானின் உருவம் என்பதும் மிகவும் தனித்துவமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். விபூதி பூசிய நெற்றி அதில் நெற்றிக்கண் தலையில் கங்கை ருத்ராட்ச மாலை கழுத்தில் பாம்பு என சிவபெருமானின் உருவமே நம்மை வியப்படைய வைக்கும்.
சிவபெருமானின் கம்பீரத்தை அதிகரிக்கும் ஒரு விஷயம் அவரின் கழுத்தில் இருக்கும் பாம்பு தான் சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருக்க பல கதைகளும் காரணங்களும் இருக்கிறது. சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருக்க என்ன காரணம் அது உணர்த்தும் குறிப்பீடுகள் என்ன என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகின்றோம்.
பாம்பு அல்லது நாகங்கள் என்பது ஆரம்பம் முதலே இந்து மதத்தில் போற்றுதலுக்கு உரிய ஒன்றாக கருதப்படுகிறது. பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கை என்னவென்றால் சிவபெருமான் பாற்கடலை கடைந்த விஷத்தை குடித்ததில் இருந்து தான் பாம்பு அவரின் கழுத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தொண்டைப் பகுதியில் நீலம் பாய்ந்த சிவபெருமான் அந்தத் தருணத்திலிருந்து நீலகண்டன் என்ற பெயர் பெற்றார்.
குறிப்பீடு ஒன்று : சிவபெருமானின் கழுத்தில் பாம்பு இருப்பது பிறப்பு மற்றும் முடிவில்லா வாழ்க்கை சக்கரத்தை குறிக்கிறது. மேலும் கழுத்தில் அணியும் பாம்பானது நமக்குள் இருக்கும் ஈகோவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிக்கிறது.
குறிப்பீடு இரண்டு : சில குறிப்புகள் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது தான் பாம்பு அவரின் கழுதிற்கு வந்ததாக கூறப்படுகிறது. திருமணத்தின் போது சிவன் பாம்பை பார்வதி தேவிக்கு அன்பளிப்பாக அளித்தார். பாம்புகள் அவற்றின் தலையில் விலை மதிப்பில்லாத மணிகளை சுமந்து கொண்டு அவற்றை அன்பளிப்பாக பார்வதிக்கு கொண்டு சென்றனவாம்.
குறிப்பீடு மூன்று : சிவபெருமானுக்கு பசுபதிநாத் என்னும் பெயரும் உள்ளது. அதன் பொருள் அனைத்து உயிர்களுக்கும் ஆன கடவுளாகும் மற்றும் அனைத்து விலங்குகளையும் கட்டுப்படுத்துபவர் என்றும் பொருளாகும். பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்பு என்றாலே பயம் அதனால்தான் சிவன் பாம்பை தன் கழுத்தில் அணிந்து உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பீடு நான்கு : சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதற்கு பல கதைகள் உள்ளது சிவன் பாம்பைக் கழுத்தில் அணிகலனாக அணிந்துள்ளார். பாம்பு பயம் மற்றும் மரணத்தை வழங்கக் கூடியது இதன் மூலம் சிவன் பயம் மற்றும் மரணத்தை அடக்கி தன் கழுத்தில் அணிந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பீடு ஐந்து : சிவன் கழுத்தில் பாம்பு மொத்தம் மூன்று சுற்றுகள் உள்ளது இந்த மூன்று சுற்றுகளும் நிகழ்காலம் ,கடந்தகாலம், மற்றும் எதிர்காலத்தைப் உணர்த்துகிறது இது சிவபெருமான் முக்காலத்தையும் உணர்ந்து அதனை கட்டுப்படுத்துபவர் என்று கூறப்படுகிறது.
குறிப்பீடு ஆறு : ஒரு முறை பாம்புகள் ஆபத்தில் இருந்த போது அவை பாதுகாப்பிற்காக சிவபெருமானை அணுகினர் சிவபெருமானும் அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கைலாயத்தில் தங்க அனுமதித்தார். இருப்பினும் அதிக குளிர் காரணமாக அவை சிவபெருமானின் உடலில் சுற்றிக் கொண்டன சிவபெருமானும் அவற்றின் உயிரை காப்பாற்ற அதற்கு அனுமதித்தார் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பீடு எழு : உலகின் தீய சக்திகளின் உருவமாக பாம்பு கருதப்படுகிறது. பாம்பை தன் கழுத்தில் சுற்றி வைத்திருப்பதன் மூலம் சிவன் நமக்குக் கூறும் செய்தி என்ன வென்றால் தன்னைச் சரணடைய வந்தவர்களை எவ்வித தீய சக்திகளும் நெருங்காது என்று கூறுகிறார்.
குறிப்பீடு எட்டு : பாம்புகள் பேராசை மற்றும் பொறாமையின் பிரதிபலிப்பாகும். பாம்பை தன் கழுத்தில் அணிந்ததன் மூலமாக தன் ஆசை மற்றும் பொறாமை அடக்கி ஆள்வதே சிவன் தன் குறிப்பால் உணர்த்துகிறார்.
குறிப்பீடு ஒன்பது : சிவபெருமானிடம் சரணடைந்ததன் மூலமாக வாசுகி பாம்பு தன் விஷத்தை மாணிக்க கல்லாக மாற்றக்கூடிய திறனை பெற்றது இதன் காரணமாகவே ஏனைய பாம்புகளும் சிவனின் கைகளில் ஆபரணங்களாக மாறின. இது உணர்த்துவது யாதெனில் தன்னை சரண் அடைய வந்தவர்களின் கடந்த காலத்தில் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களின் மனது எப்பொழுதும் தூய்மையாக இருந்தால் சிவபெருமான் விலைமதிப்பில்லாத நற்குணத்தை வழங்குவார்.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..