இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
உங்களுடைய கடன் நீங்க, 8 விளக்குகளை ஏற்றுங்கள்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை எப்பொழுது கடன் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வழிபாடு சிறந்த பலனை கொடுக்கும்.
ஒரு மனிதனுக்கு எட்டு திசைகளில் இருந்தும் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து ஒன்று போய் இன்னொன்று என்று வந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு மகாலட்சுமியின் அனுகிரகம் தேவை.
லட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு எத்தகைய துன்பமும் நெருங்குவதில்லை, வந்த துன்பங்களும் தலைதெறிக்க ஓடி விடும்.
கடன்கள் நீங்கி, செல்வம் செழிப்பு பெற இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து வீட்டில் மகாலட்சுமிக்கு செய்து வாருங்கள். மேலும் எத்தகைய துன்பம் தரும் கடனும் காணாமல் போக, கோவிலுக்கு இந்த இரண்டு பொருட்களை தானம் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
வீட்டில் மகாலட்சுமி படம் வைத்திருப்பவர்கள் அதற்கு சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்து லட்சுமி தேவிக்கு முன்பு ஐந்து முக குத்து விளக்கு ஒன்றை வைத்து ஐந்து திரிகள் போட்டு தீபம் ஏற்றுங்கள்.
அதனை சுற்றிலும் எட்டு திசைகளில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய வகையில், எட்டு அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.
தொடர்ந்து இதுபோல் ஒன்பது வாரங்கள் செய்து வர எந்தவிதமான பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலும் அவைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
பன்னீர் மற்றும் சந்தனம் இரண்டுமே லட்சுமி தேவிக்கு உரிய அம்சங்களாக விளங்குகின்றன. சுவாமி படங்களுக்கு வீட்டில் பன்னீர் மற்றும் சந்தனம் கலந்து பொட்டு வைத்தால் வீடு கோவிலாக மாறிவிடும். அந்த அளவிற்கு சுபிட்சத்தையும், வாசத்தையும் கொடுக்கும் பன்னீர் மற்றும் சந்தன தானம் செய்பவர்களுக்கு எத்தகைய கடன் பிரச்சனைகள் இருந்தாலும் எளிதில் தீரும் என்று நம்பப்படுகிறது.
அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று அங்குள்ள அர்ச்சகரிடம் பன்னீர் அல்லது சந்தனம் வாங்கி தானம் செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும் பன்னீர் மற்றும் சந்தனத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது உங்களை பிடித்த தரித்திரம் எல்லாம் நீங்கி, எல்லா தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும்.
லட்சுமி நாராயணர் வழிபாடு செய்வது, குபேர வழிபாடு செய்வது, மகாலட்சுமிக்கு நெல்லிக்கனி, தாமரையை படைத்து வழிபாடு செய்வது போன்ற வழிபாடுகள் நம்முடைய செல்வ செழிப்பை மேலும் அதிகரிக்க செய்யும்.