Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உடலில் பல்லி விழுந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்!!

  • June 7, 2020
  • 1.1K views
Total
7
Shares
7
0
0

பல்லி சாஸ்திரம்!!

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம். இந்திய புராணத்தின் படி மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அது நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும் அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும்போது அருவருப்பாக உணர்வது அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருக்கும் ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கெனவே ஒரு படிப்பு இருந்தது அது தான் பல்லி சாஸ்திரம்.

உடலில் பல்லி விழுந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்!!
image source:https://www.rentokil.com.sg/blog/attracts-lizards-home/

பல்லி என்பது கேதுவை குறிக்கிறது கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும் அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவான் ஆகும். பல்லி கத்துவது முதல் அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியதுவத்தை கொண்டுள்ளது ஒவ்வொன்றும் ஓர் அர்த்தத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது.

உடலில் பல்லி விழுந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்!!
image source :https://astrotalk.com/astrology-blog/effects-of-ketu-in-different-houses/

பல்லி தலையில் விழுவதன் அர்த்தம் பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால் வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு அலைக்கழிக்கப்பட்ட மன நிலை அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம். ஆனால் தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.

முக பகுதியில் புருவம் கன்னத்தில் பல்லி விழுந்தால்

ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால் சீக்கிரமே உறவினர் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது விழுந்தால் ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால் ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

பல்லி மேல் உதட்டின் மீது விழும்போது : செல்வ இழப்பு ஏற்படும் அதுவே கீழ் உதடு என்றால் சொத்து பெருகும் என அர்த்தமாகும்.

உங்கள் மூக்கின் மீது பல்லி விழுந்தால் : நீங்கள் நோய்வாய் படலாம்.

வலது காதின் மீது பல்லி விழுந்தால் : நீங்கள் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை வாழ்வீர்கள் என அர்த்தம்.

உங்கள் வாயின் மீது பல்லி விழுந்தால் : ஏதோ ஒன்றை கண்டு நீங்கள் பயப்பட போகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கழுத்தின் மீது பல்லி விழுந்தால் : உங்கள் விரோதிகள் அழிக்கப்படுவார்கள்.

இடது கையின் மீது பல்லி விழுந்தால் :உங்களுக்கு பாலியல் ரீதியான சந்தோஷங்கள் கிடைக்கும்.

வலது கையின் மீது பல்லி விழுந்தால் : உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.

வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் : ஏதோ ஒரு வகையில் பிரச்சனை எழலாம்.

பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் : உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும் ரத்தினங்களும் கிடைக்கும்

உங்கள் தொடையில் பல்லி விழுந்தால் :உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்த போகிறீர்கள்.

முட்டி கணுக்கால் மற்றும் பிட்டத்தின் மீது பல்லி விழுந்தால் :பொதுவான நன்மை ஏற்படும்.

பாதத்தில் பல்லி விழுந்தால் : வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள்.

பிறப்புறுப்பின் மீது பல்லி விழுந்தால் : கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.

மேற்கூறிய பட்டியல் ஒரு சாராம்சம் மட்டுமே காரணம் பல்லி விழுந்தால் ஏதோ பலன் உண்டு என்பதை குறிக்கும் வகையில் நம் உடலில் 65 ற்கும் அதிகமான உறுப்புக்கள் உள்ளது. அதேபோல் ஒருவரின் பாலினத்தை பொருத்தும் இது மாறுபடும் பல்லி கத்துவதையும் கூட இந்த வகையில் கூறலாம்.

எந்த திசையில் இருந்து உங்களுக்கு சத்தம் கேட்கிறது அந்த நாளின் நேரம் அந்த வாரத்தின் நாள் போன்ற சில விஷயங்களையும் நீங்கள் கருத வேண்டும் அப்போது தான் அதன் சரியான அர்த்தம் புரியும் பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என ஏடுகள் கூறுகிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உடனே குளித்துவிட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம். மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபிக்கலாம் பஞ்சகவ்யா உண்ணலாம் தங்கத்தை தானமாக அளிக்கலாம் விளக்கெண்ணெய் கொண்டு மண் விளக்குகள் ஏற்றலாம்.

சில கோவில்களில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பல்லி உள்ளது அதனுடன் சூரியன் மற்றும் சந்திரனின் சிலைகளையும் காணலாம். அந்த பல்லிகளை தொடுவதால் நம்மீது உள்ள தீய தாக்கங்கள் மற்றும் முன்னாள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் நீங்கும்.

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

image source:https://www.skillshare.com/classes/Art-for-Kids-Learn-How-to-Draw-and-Watercolor-Paint-a-Sneaky-Lizard/623464016

Post Views: 1,130
Total
7
Shares
Share 7
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பண்டைய மக்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள்!!

பண்டைய மக்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள்!!

  • June 6, 2020
View Post
Next Article
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம்!!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைவிமர்சனம்!!

  • June 7, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.