அதிரடி முடிவுகளுக்கும் சர்ச்சையான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில் வடகொரியாவில் மட்டும் யாருக்குமே தொற்று இல்லை என குண்டை தூக்கிப் போட்டு ஆச்சரிய மூட்டியவர் கிம் ஜாங் உன்
அவர் தற்போது எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பு ஊசி போதாமல் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் தனது நாட்டுக்கு கிடைத்த 30 லட்சம் தடுப்பூசியைப் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் ஐ.நா அமைப்பு கோவெக்ஸ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத் திட்டத்தின் மூலம் சீன நிறுவனத்தின் 30 லட்சம் தடுப்பூசிகளை வடகொரிய ஏற்க மறுத்து உள்ளது.
கொரோனாவை எங்க ஸ்டைலில் விரட்ட எங்களால் முடியும் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமுள்ள நாடுகளுக்கு அந்த தடுப்பூசிகளை கொடுத்து விடுங்கள் என கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.