இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் தடைகள் விலகி திருமணம் கைகூட கண்ணனை வழிபடுங்கள்.
சத்தியத்தை காப்பதற்காகவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமே கிருஷ்ணாவதாரம். அன்றை தினமே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) ஆவணி மாதம் 14ஆம் தேதி திங்கட்கிழமை (30.08.2021) இன்று கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிக பிடித்த சீடை அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணெய் பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதா கோவிந்தம் ஸ்ரீமந் நாராயணீயம் கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜையால் உண்டாகும் பலன்கள்
கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர்-சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு புத்திசாலித்தனம் கூடும். புரிந்து கொள்ளும் ஆற்றல் திறமை அதிகரிக்கும்.
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.
தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத்தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வை படும்.