வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகையான இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது தீய சக்திகளை விலக்கும். வீட்டில் மகாலட்சுமி குடி கொள்வாள்.
தீபம் ஏற்ற உகந்த நேரம்
பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும்,
கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.
விளக்கு தானாக அணையலாமா?
தீபம் ஏற்றிய பின் விளக்கு தானாக அணையக்கூடாது. விளக்கு ஏற்றிய பின் அது தானாக கருகி அணைந்து விடும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும்.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக்கூடிய மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம்.
திருக்கார்த்திகை நாளை தான் நாம் கார்த்திகை தீபமாக காலங்காலமாக கொண்டாடுகிறோம். இந்த திருக்கார்த்திகை என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.
அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள்.
அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,
சமையல் கூடத்தில் 1 விளக்கு,
நடையில் 2 விளக்கு,
வீட்டின் பின்புறம் 4 விளக்கு,
திண்ணையில் 4 விளக்கு,
மாட குழியில் 2 விளக்கு,
நிலைப்படிக்கு 2 விளக்கு,
சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு,
வெளியே யம தீபம் ஒன்று,
திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.
27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களை குறிக்கும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள்.
முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கேற்றும் நேரம்
தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.
மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
வாழை இலை
தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.