இந்த படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன் பார்த்தீபன்,பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்து உள்ளார்கள்..
கொரோனவை தொடர்ந்து வந்த லாக்டௌன் பிரச்சனைகளால் தியேட்டர்களில் வெளியிடாமல் அமேசன் ப்ரைம் ல் பல எதிர்ப்புகளை தாண்டி வெளிவந்திருக்கும் படம் தான் பொன்மகள் வந்தாள்.
படத்தின் கதை 2004 ம் ஆண்டு ஊட்டி லவ்டேல் என்ற காட்டில் இரண்டு இளைஞர்கள் ஒரு சின்ன வயது பெண்ணை கடத்தி கொலை செய்து உள்ளார்கள். பின் அந்த இரண்டு இளைஞர்கள் ஒரு பெண்ணால் சுட்டு கொள்ளபடுகிறார்கல் இதை தொடர்ந்து பல பரபரப்பான சம்பவங்கள் நடந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு இதே வழக்கு மறு விசாரணைக்கு ஏற்று கொள்ளபடுகிறது இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பது தான் பொன்மகள் வந்தாள் படத்தின் கதை..
வக்கீல் வெண்பா வாக பெரும்பாலான காட்சிகளில் நீதி மன்றத்தில் வருகின்றார் ஜோதிகா வலி ,வேதனை, இழப்புகளை கண்களில் வெளிப்படுத்தி நீதியில் முன்னேற போக முடியாமல் உடைந்து போனாலும் மீண்டு வந்து இறுதி நேரத்தில் நீதிமன்றத்துக்கு வந்து சமூக அவலங்களை தோலுரித்து காட்டி நீதியை நிலை நாட்டும் போராளியாகவே கண் முன்னாடி வந்து நிற்கிறார் ஜோதிகா.
தன் மேல் செருப்பை எறிந்தவருக்கு இன்னொரு செருப்பை எடுத்து கொடுக்கும் காட்சிகளிலும் தியாகராஜனுடைய கர்வத்தை உடைக்க டா போட்டு கூப்பிடும் காட்சிகளிலும் ஜோதிகாவுக்கு நாம் தாராளமாக கை தட்டலாம்.
ஜோதிகாவின் வளர்ப்பு அப்பா வாக வரும் பாக்யராஜ் படம் முழுக்க நல்ல நடித்து இருக்கிறார் என்று சொல்லலாம் பெட்டிசன் பெத்து ராஜா வாக குடிக்கும் தேனீரில் ஈ விழுவது முதல் ,ரேசன் பொருள் கடத்துதல், தூய்மை பாரதம் என்று பேனர் வைப்பது பெட்டிசன் போடுபவராகவும் ஜோதிகாவிற்கு சரியான நீதி கிடைக்க ஆதாரங்கள் தேடி பிடித்து எல்லா விடயங்களையும் பாதிக்கப்பட்ட பார்வையில் இருந்து பார்க்கவும் என்று சொல்லி ஜோதிகாவுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் நடித்து இருக்கிறார் பாக்யராஜ்.
ஜோதிகாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாட வருகிற எதிர்க்கட்சி வக்கீலான பார்த்தீபன் ஜோதிகா கொடுக்கும் ஒவ்வொரு சாட்சியையும் ஒரு விதமான மெல்லிய வில்லத்தனத்தாலும் வாதத் திறமையாலும் உடைக்கும் காட்சிகளில்
எங்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் பார்த்தீபன். சீரியசாக நீதிமன்றத்தில் வழக்கு போய் கொண்டு இருக்கும் நேரத்தில் தனக்கே உரிய பாணியில் நக்கலாக சில இடங்களில் பேசுவது மிகவும் ரசிக்க வைத்து உள்ளது.
பிரதாப் போத்தன் நேர்மையை கடை பிடிக்கணும் என்று ஆசைப்பட்டு கடைசியில் சறுக்கலான நீதிபதியாக மாறி மிகவும் நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அவருடைய உதவியாளராகவும் நண்பராகவும் வருகின்ற பாண்டியராஜன் இறுதியில் பிரதாப் போத்தன்னை விட்டு விலகும் காட்சியில் சபாஷ் போட வைத்துள்ளார்.
சாகும் வரைக்கும் மரியாதையை தான் முக்கியம் என்ற கொள்கையுடன் எல்லா வில்லத்தனத்தையும் ஏழைகளின் தோழன் என்ற போர்வையில் செய்யும் அவர் ஒரு 1980 ஹீரோ என்பதை நன்றாக நிரூபித்துள்ளார்
லவ்டேல் ஏரி, தேயிலைதோட்டம் அடர்த்தியான காடு என்ற ஊட்டியில் மொத்த அழகையும் கண்கள் கொள்ளை போகும் அளவுக்கு படம் பிடித்து உள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. கதையுடன் தன்மைக்கு ஏற்ப படத்தை எடிட் பண்ணி இருக்கிறார் ஆண்டனி ரூபன். கோவிந் வசந்தாவின் இசை மிகவும் அற்புதமாக உள்ளது.
பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியையும் பெற்றோர்களின் வேதனைகளையும் மிகவும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.
அவமானம் என்று நாம் மறைக்கும் சின்ன விடயங்கள் தான் சில கெட்டவர்கள் நல்லவர்களாக உலகில் சுற்றுகிறார்கள்…
தோற்று போறதுக்கு இது கேம் இல்ல Justice என்று சொல்லி படத்தை பல பாலியல் வன்முறை குற்றங்களின் தகவலோடு முடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஆண் குழந்தையை பெற்றவர்களுக்கு ஒரு பாடம். நிச்சயம் பார்க்கலாம்.
மேலும் பல சினிமா தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்