இலங்கையில் காணப்படும் மிகப்பெரும் ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசாமி கோவில் வரலாற்றுச் சிறப்பும் ஆன்மீக சிறப்பும் மிகுந்த ஒருஆலயமாகும். இந்த ஆலயம் சம்மந்தமான சில சுவாரஸ்யமான வரலாற்றுத் துளிகள் இதோ…
நல்லூர் கந்தசாமி கோவில் எங்கே உருவானது ?
கிறிஸ்துவுக்கு பின் 944 ஆம் ஆண்டு பராந்தகசோழன் இலங்கைக்கு படையெடுத்து சிங்கள அரசனான நான்காம் உதயனை புறங்கண்டான் என்றும் சிங்கைநகர் அரசனைக் கொன்றான் என்றும் வரலாற்றுக் குறிப்பு உள்ளது. சிங்கைநகர் மன்னனைக் கொன்ற பராந்தக சோழன் தனது பிரதிநிதியை பிரதேசத்தை நிர்வகிக்க நியமித்துள்ளார். இச் சோழ மண்ணில் பிரதிநிதியாக புவனேகபாகு என்பவன் சிங்கை நகரில் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளார். அவர் பூநகரியில் இருந்து குடமுருட்டி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள நல்லூர் என்ற பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும். உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களிலிருந்து பூநகரியில் இருக்கின்ற நல்லூர் என்ற பிரதேசமே தமிழர் அரசின் புராதான நல்லூர் ஆகும்.
எனவே புவனேகபாகு என்ற இந்த முதலாவது அரச பிரதிநிதி கிறிஸ்துவுக்கு பின் 948 நல்லூர் கந்தசாமி கோயிலை முதன் முதல் கட்டினாரா ? அவ்வாறு கட்டி இருந்தால் அது நிச்சயமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நல்லூரை இருக்க வாய்ப்பில்லை. சிங்கைநகர் அமைந்திருந்த பெருநிலப் பரப்பில் உள்ள நல்லூர் ஆகவே இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். கைலாயமலை பாடலின் படி கிறிஸ்துவுக்கு பின் 948இல் முதலாவது நல்லூர் கந்தசாமி கோயில் அமைக்கப்பட்டது என முடிவுசெய்தால் அக்கோயில் பூநகரி நல்லூரில் கட்டப்பட்டிருக்க வேண்டும். உதவி நல்லைக்குமரன் மலர்
இன்னொரு இறை வரலாற்று தகவல் வாசிக்கவேண்டுமா ? இதைப் படியுங்கள்.
image source:https://www.flickr.com/photos/132332048@N02/17821913029