ஜாக்மா கடின உழைப்பும் விடாமுயற்சியும்!!
ஜாக்மா மிக மிக ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து கல்வியில் படும் முட்டாளாக காண்பவர்களால் கண்களில் கேலிப் பொருளாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். தனது இளமைக்காலம் முழுவதும் பெரும் தோல்விகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டு என்றாவது ஒருநாள் தனக்கும் ஒரு இயல்பான வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான வாய்ப்பை தேடி வீதி வீதியாக அலைந்து திரிந்தவர்.
உங்கள் மனதில் ஒரு கனவு இருந்து அதை அடைந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்காமல் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் உங்களது திறமைகள் எங்கும் அங்கீகரிக்கப்படாமல் வாழ்நாள் முழுவதையும் புறக்கணிப்புக்களிளும் அவமானங்களிலும் நீங்கள் கழித்து இருந்தால் இந்த கதையை படிக்கும் பொழுது உங்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கும் வலிகளுக்குமான பதிலை முழுமையாக உணர்ந்து கொள்வீர்கள்.
ஜாக் மா 1964 இல் சைனாவில் வறுமையின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஏழையின் கனவு எல்லையற்றது ஏனெனில் அவனிடம் மீதம் இருப்பது அது மட்டுமே அவ்வாறு ஜாக்மாவும் தனது சிறு வயதில் இருந்தே மனதில் பல கனவுகளை சுமந்து வாழ்ந்தவர் பாடசாலையில் அடிமுட்டாள் மாணவன் தனது ஆரம்ப பள்ளி பரீட்சையில் இருமுறை தோற்றவர் நடுநிலைப்பள்ளி பரீட்சையில் அது மூன்று முறையானது.
ஜாக்மா ஒல்லியாகவும் குள்ளமாகவும் ஒரு பலவீனமான தோற்றம் கொண்டவர் ஆனால் இவரது மனதின் பலமோ மிக அதிகம் தன் எதிரே இருப்பவன் எத்தனை பலமானவனாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை அவனை எதிர்த்து நின்று போராடும் தைரியம் கொண்டவர் இப்பழக்கமே பிற்காலத்தில் இவரை ஒரு தன்னிகரற்ற வெற்றியாளனாக மாற்றியது.
ஜாக்மாவின் எட்டு வயதில் இவர் வாழ்ந்து கொண்டிருந்த நகரம் ஒரு சுற்றுலாத் தலமாக பிரபல்யமானது மேற்கத்திய நாடுகளிலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்தார்கள். அவர்களது மொழியும் கலாச்சாரமும் ஜாக்கினை வெகுவாக கவர்ந்து விடவே அவற்றை கற்றுக் கொள்ளும் நோக்கில் தனது எட்டு வயதிலேயே இலவச சுற்றுலா வழிகாட்டியாக மாறினார் ஜாக்.
இப்படியே காலம் கடந்து கொண்டிருந்தது ஜாக்மாவின் பாடசாலை கல்வியும் முடிந்தது. தனது மேற்படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடர வேண்டும் என்பது ஜாக்கின் மிகப் பெரும் கனவு அதற்கான விண்ணப்பத்தை ஹார்வர்ட்கு அனுப்பினார் ஜாக் அது நிராகரிக்கப்பட்டது. மீண்டும் விண்ணப்பித்தார் மீண்டும் நிராகரிக்கப்பட்டது இவ்வாறு 10 முறை விண்ணப்பித்தும் அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டன.
ஜாக்மாவினை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை அதன்பின் சீனாவிலுள்ள பிரபல பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் அவற்றில் எந்தப் பல்கலைக்கழகமும் இவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியில்லை என்ற நிலையில் தனது நகரத்திலிருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படிப்பதற்காக சேர்ந்தார் ஜாக் அங்கு சேர்ந்ததும் இதற்கு மேல் தனது வாழ்வில் எவ்வித இன்னல்களும் இருக்காது என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். ஆனால் அதன் உண்மையான சோதனைக்காலம் இதன்பின்பே ஆரம்பமானது.
மூன்று வருட பட்டப்படிப்பு முடிந்ததும் வேலை தேட ஆரம்பித்தார் ஜாக். எவரும் இவரை கண்டுக் கொள்ளவில்லை. வருடக்கணக்கில் முயற்சித்தார் இருந்தும் நிராகரிப்புகள் தான் எஞ்சின பல வருடங்களாக வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் பசியை தனது சம்பாத்தியத்தில் அடைத்து விடலாம் என்ற ஜாக்கின் கனவும் மண்ணாகிப் போனது. சரி படிபிற்கான வேலை கிடைக்கவில்லை ஏதாவது கிடைத்த வேலையை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார் பெரிய நிறுவனங்கள் சிறு வியாபாரங்கள் என தனது நகரம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கும் வேலை தேடி சென்றார்.
அனைவருமே நிராகரித்து துரத்தினார்கள் அப்போது இவரது நகரத்தில் KFC நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் வேலை செய்ய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தார்கள். ஜாக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் நிச்சயம் இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு நேர்காணலுக்குச் சென்றார். அங்கு வேலைக்காக வந்த 24 பேரில் ஜாக்மா தவிர்ந்த மிகுதி 23 பேருக்கும் வேலை வழங்கப்பட்டது. உனது உருவம் இந்த வேலைக்கு சரிவராது நீ வேறு வேலையை பார்த்துக்கொள் எனக் கூறி அவரை திருப்பி அனுப்பினார்கள் இருந்தும் ஜாக் ஓய்ந்துவிடவில்லை.
தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார் அப்போது போலீசில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதில் ஜாக்கும் அவரது நான்கு நண்பர்களும் கலந்து கொண்டார்கள். ஜாக் தவிர்ந்த மிகுதி 4 பேருக்கும் வேலை வழங்கப்பட்டது. நீ குள்ளமாகவும் நலிந்த தோற்றம் உடையவனாகவும் இருகின்றாய் இந்த வேலையில் உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது என இவரை திருப்பி அனுப்பினார்கள். மீண்டும் ஒரு நாள் தனது உறவினர் ஒருவருடன் ஒரு ஓட்டலில் சர்வர் வேலை கேட்டு சென்றார் இவரது உறவினருக்கு வேலை வழங்கி விட்டு ஜாக்மாவினை நிராகரித்து விட்டனர். இந்த முறை இவர் விரக்தியின் உச்சத்தில் இருந்தார் தன்னை ஏன் நிராகரிக்கிறீர்கள் என ஓட்டல் உரிமையாளர்களிடம் வினவினார் அதற்கு அவர்கள் இந்த உருவத்தை எல்லாம் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள் முன்னால் நிறுத்த முடியுமா கேள்வி கேட்காமல் இங்கிருந்து வெளியேறு என்று துரத்தி விட்டனர் இப்படி 30க்கும் மேற்பட்ட இடங்களில் வேலை கேட்டு சென்றார்.ஆனால் அனைத்து இடங்களிலும் வெறும் அவமானங்கள் தான் எஞ்சியது.
மனம் உடைந்து போகிறார் ஜாக் மூன்று வருடங்களாக முயற்சித்தும் ஒரு சர்வர் வேலை கூட கிடைக்கவில்லையே என்பதை எண்ணி நொந்து போனார் இனி யாரிடமும் வேலை கேட்டு செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார். அப்போது ஜாக்மா கல்வி கற்ற கல்லூரியில் பகுதிநேர ஆங்கில ஆசிரியருக்கான வெற்றிடம் தோன்றியது. ஜாக் வேலை இல்லாமல் அல்லல்படுவதை அறிந்த அந்த நிர்வாகம் அந்த வேலையே வழங்க முன்வந்தது. ஆனால் அதில் சம்பளமோ மாதம் 12 டாலர்கள் மட்டுமே. நிச்சயம் இந்த பணம் இவருக்கு போதாது தான் இருந்தும் வேலை தேடி அவமானப்படுவதற்காக பதிலாக இந்த வேலையை கௌரவமாக செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். சில வருடங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்த ஜாக்மா நட்பினையும் சம்பாதித்துக் கொண்டார்.
அந்தக் காலகட்டத்திலேயே சீனா கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்தைய நாடுகளுடன் வணிக ரீதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எனவே அப்போது சீனாவில் இருந்து பல தொழில் அதிபர்கள் அரசு அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது இந்த வெற்றிடத்தை இலாவகமாக பிடித்துக் கொண்ட ஜாக்மா சீன அரசின் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக இணைந்து கொண்டார். 1995 இல் ஒரு அரச கரும வேலைக்காக அமெரிக்கா சென்றார் ஜாக். அக்காலக் கட்டமே அமெரிக்காவில் இணையம் பிரபல்யம் ஆகி கொண்டிருந்தது. அமெரிக்கா சென்ற ஜாக்கின் கண்களில் பட்டது எல்லாம் கணணியும் இணையமும் தான் மிக விரைவில் இவை இரண்டும் இவ்வுலகையே ஆக்கிரமிக்க இருக்கின்றன என்பதை அக்கணமே அவர் உணர்ந்து கொண்டார் எனவே தானும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வணிகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் உடனடியாக சீனா எல்லோ பேஜஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். எந்த வருமானமும் சம்பாதிக்க முடியாமல் அது ஓரிரு வருடங்களிலேயே மூடப்பட்டது. அதன் பின்னர் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்தார். தொழில்நுட்பம் என்றாலே என்னவென்று அறியாத சீனாவில் ஒரு மென்பொருள் நிறுவனம் எங்கிருந்து பணம் சம்பாதிப்பது அதுவும் ஒரு சில மாதங்களிலேயே இழுத்து மூடப்பட்டது.
இரண்டரை வருட முயற்சியின் பின் சீனாவில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தொழில்நுட்பத்தை இங்கே கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டார். எனவே சீன அரசுடன் இணைந்து இணையத்தை சீனாவில் பிரபலமாக்க வேண்டும் என முடிவெடுத்தார் தனது திட்டத்தை சீன அரசுக்கு பரிந்துரைத்தார் அவர்கள் அதை பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ஒன்றரை வருட போராட்டத்தின் பின்னர் இத்திட்டம் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்தார் ஜாக்.
இணையம் ஜாக்மாவிற்கு அறிமுகம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் சீனாவில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அதை பிரபலமாக்க முடியவில்லை இனி யாரையும் நம்பாமல் நாமே நேரடியாக களத்தில் இறங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
தனது நண்பர்கள் மாணவர்கள் தன்னை போல வாழ்வில் எந்த அங்கீகாரமும் கிடைக்காத அந்த அங்கீகாரத்திற்காக ஏங்கி கொண்டிருந்த 17 பேரை தேர்ந்தெடுத்தார். அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து அலிபாபா பற்றிய முழு திட்டத்தையும் கோரினார். இம்முயற்சியில் உள்ள ஆபத்துக்களையும் தெளிவுபடுத்தினார். தங்களது வாழ்வாதாரத்திற்கான ஒரு நிரந்தர வேலையில்லாமல் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்த அவர்களுக்கு ஜாக்மாவின் திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனவே அவர்களிடம் இருந்த சேமிப்புகள் அனைத்தையும் கொண்டுவந்து ஜாக்கிடம் கொடுத்தார்கள். அதன் மூலம் 12 ஆயிரம் டாலர்கள் சேர்ந்தன. அப்பணத்தை முதலீடாகக் கொண்டு 1999 ல் அலிபாபா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
சீனாவில் உள்ள சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களை தங்களின் இணையதளத்தில் வரிசைப் படுத்தி அவற்றை மேற்கத்தைய நாடுகளில் உள்ள வியாபாரிகளுக்கும் விற்கும் வேலையே அலிபாபா செய்து வந்தது. இந்த சேவைக்காக அவர்கள் யாரிடமிருந்தும் எந்த கட்டணமும் பெற்றுக்கொள்ளவில்லை மூன்று வருடங்களில் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவர்களிடமிருந்து சேமிப்பை மற்றும் கொண்டே நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். மூன்று வருடங்கள் கடந்தன அலிபாபா நிறுவனமும் சிறிது பிரபல்யமானது.
அதேபோல ஜாக்கி இடம் இருந்த சேமிப்புக்களும் முழுமையாக தீர்ந்தது தங்களது நிறுவனத்திற்காக வங்கியில் கடன் கேட்டு சென்றார்கள். ஆனால் இவர்களை மேனேஜர் அறைக்குள் கூட விடவில்லை பல செல்வந்தர்களிடம் அலிபாபாவின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்தார்கள். இலாபமே சம்பாதிக்காத இந்த நிறுவனத்தை எங்கள் தலையில் கட்டுகின்றாயா என கூறி துரத்தி விட்டார்கள் ஜாக்மாவை போலவே அன்று அலிபாபாவும் யாரிடமும் எந்த அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ளாமல் இருந்தது.
நிறுவனத்தை நடத்தி செல்ல பணம் இல்லை அலிபாபாவை மூடி விடும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஜாக். மிகக் கடுமையான சோதனைககளின் பின்பே மிகச்சிறந்த ஒரு வெற்றி துளிர்விடும் யார் எல்லா சோதனைகளையும் கடந்து பொறுமையோடு போராடுகின்றார்களோ நிச்சயம் அவர் ஒருநாள் தனது போராட்டத்திற்கான பயனைக் கண்டு கொள்வார் அந்த நாளும் ஜாக்மாவுக்கு வந்தது.
இருண்டு போயிருந்த அவரது கனவுகளுக்கு வெளிச்சமாக வந்தது கோல்டுமேன் எனும் நிறுவனம் அலிபாபாவில் அவர்களில் 5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தார்கள் அது துவண்டு போயிருந்த ஜாக்மாவை களத்தில் இறக்கி விட்டது அப் பணத்தை வைத்து அலிபாபா நிறுவனத்தை அசுர வேகத்தில் வளர்க்க ஆரம்பித்தார் ஜாக் ஒரே வருடத்தில் அலிபாபா பற்றிய தகவல்கள் சீனா முழுவதும் பரவ ஆரம்பித்தன
ஜாக்மா என்ற சொல் முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு வரைவிலக்கணம் ஆக மாறியது வாழ்வில் ஒரு சிறு பின்னடைவுக்கு மனம் தளர்ந்து விடும் மனிதர்களில் மத்தியில் வெறும் தோல்விகளே வாழ்க்கையாக கொண்ட ஜாக்மாவினால் அத் தோல்விகளையும் தோற்கடித்து இன்று ஒரு வெற்றிக்கு வரைவிலக்கனமாக மாற முடிந்தது.
இது போன்ற மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.
Wall image source:http://worldkings.org/news/world-almanac-event-academy/worldkings-old-events-april-04-2018-jack-ma-founded-alibaba-group-in-1999