கொரோனா வைரஸ்
சமீப காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு அந்த வைரஸ் இருக்கும் தொடர்புகளை ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது.ஒருவர் இருமும் போதும் தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது..
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக கை கழுவுவதை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந் நிலையில் காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பது தொடர்பாக சில அறிவியல் ஆதாரங்கள் வெளி வந்துள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்அரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். காற்றில் சில மணி நேரங்களாக உலாவும் மிகச்சிறிய பொருட்களில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நாம் சுவாசிக்கும் போது காற்று வழியாக வைரஸ் பரவுவது சாத்தியமாகிறது.
பெரும் பரப்பில் இந்த மிகச் சிறு துளிகள் பரவக்கூடும் காற்று வழியாக பரவும் தொற்று நோய்களுக்கு காசநோய் மற்றும் நிமோனியா ஆகியவை உதாரணங்கள் கூட்டம் அதிகமுள்ள மற்றும் முற்றிலும் மூடப்பட்டதாக உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்று வெளியிடப்பட்ட ஆதாரத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்று கொண்டுள்ளது. செயற்கை முறையில் காற்றில் தூவப்பட்ட கொரோனா வைரஸால் குறைந்தது 3 மணி நேரம் காற்றில் உயிருடன் வாழ முடிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பரிசோதனைக் கூடங்களில் நடக்கும் ஆய்வின் முடிவுகளுக்கும் இயல்பான நடப்பு சூழலில் நடக்கும் செயல்களுக்கும் மாற்றங்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதி விரைவில் பரவும் வைரஸாக அறியப்படும் கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே உள்ள ஒரு நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவரால் அவர் கலந்து கொண்ட நிகழ்வில் அவருடன் பாடிய குறைந்தது 45 பேருக்கு இந்த தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு பழகியவர்கள் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்து உள்ளார்கள்.
இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதத்தில் சீனாவில் நடந்துள்ளது. அங்கு உள்ள உணவு விடுதியில் உணவு அருந்திய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலமாக அவர் உணவருந்திய சமயத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒன்பது பேருக்கும் இந்த தொற்று பரவியுள்ளது அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ஆறு மீட்டர் இடைவெளியில் இருந்தார். என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். எந்த ஒரு தொற்று பரவும் விதத்தை வைத்து தான் அந்த தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஒருவர் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வெதுவெதுப்பான நீரில் இருபது வினாடிகளுக்கு கை கழுவுவதை சமூக இடைவெளியை பேணுதல் உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டால் இந்த வழிமுறைகளை கொண்டு மட்டும் கட்டுப்படுத்த இயலாது. காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் புதிய ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய வழிகாட்டுதலில் உலக சுகாதார நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. இது உறுதி செய்யப்பட்டால் முககவசம் பயன்படுத்துதல் பரந்த அளவில் செயல்படுத்தலாம். அதே போன்று உணவு விடுதிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இடங்களில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப் படுத்தப்படலாம் மேலும் குளிர்சாதன வசதி பொருந்திய இடங்களிலும் மிக கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்த படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது..
இது போன்ற சுவாரசியமான சுகாதார தகவல்களை அறிய இங்கே செல்லவும்
Wall image source:https://www.usatoday.com/in-depth/news/2020/04/03/coronavirus-protection-how-masks-might-stop-spread-through-coughs/5086553002/