Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
தலை

தலைச்சுற்றல் பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள இயலுமா?

  • October 30, 2021
  • 235 views
Total
1
Shares
1
0
0
Coronavirus Vaccine Side Effects: Are fainting and dizziness common  side-effects of vaccination? What should you do?
image source

இன்றைய திகதியில் எம்மில் பெரும்பாலானவர்கள் கொரோனாத் தொற்று பாதிப்பு என்ற உலகளாவிய அச்சுறுத்தலுக்கு பிறகு தங்களின் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கொரோனாத் தொற்றிற்கு பிறகு தங்களின் வாழ்க்கை நடைமுறையையே மாற்றி அமைத்துக் கொள்வதிலும் அக்கறைக் காட்டி வருகிறார்கள். ஏனெனில் கொரோனாத் தொற்றிற்கு ஏராளமான பக்கவிளைவுகளுக்கு முகங் கொடுத்து வருகிறார்கள். அதில் ஒன்று தலைச்சுற்றல்.

இந்நிலையில் தலைச்சுற்றல் எனும் பாதிப்பு குறித்தும் இதனை வராமல் தற்காத்துக் கொள்ள இயலுமா? என்பது குறித்தும் இதற்குரிய சிகிச்சை குறித்தும் அறிந்துகொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் வினோத் கண்ணா விளக்கம் தருகிறார்.

தலைசுற்றல் வருவதன் காரணம் என்ன?

9 Reasons Why You Feel Lightheaded—And When To Be Concerned - Geelong  Medical & Health Group
image source

தலைசுற்றல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. எமது உடலில் இரத்த சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தின் சமச்சீரற்ற தன்மையால் தலைசுற்றல் ஏற்படலாம்.

  • மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி காரணமாகவும் தலைச்சுற்றல் ஏற்படும்
  • காலை உணவைத் தவிர்த்தாலோ ஆறு மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தாலோ தலைச்சுற்றல் ஏற்படும்.
  • எட்டு மணித்தியாலத்திற்கு மேலான நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் போதும் தலைச்சுற்றல் ஏற்படக்கூடும்.
  • மேலும் வேறு சிலருக்கு காரணங்கள் இல்லாமல் கூட தலைசுற்றல் ஏற்படக்கூடும்.
  • சிலர் கண்ணைத் திறந்தால் இந்த உலகமே சுற்றுவது போல் இருக்கிறது என்பார்கள்.
  • வேறு சிலர் தலையை மேல்நோக்கி அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றுகிறது என்பார்கள்.
  • வேறு சிலர் தரையை நோக்கி குனிந்து பார்க்கும் பொழுது தலைப்பகுதி முழுவதும் சுற்றுகிறது என்பார்கள்.
  • சிலர் கண்ணை திறந்து பார்க்கவே பயமாக இருக்கிறது வாந்தி குமட்டல் உணர்வும் இருக்கிறது என்பார்கள்.

இத்தகைய பாதிப்புகள் எம்மை அச்சுறுத்தக் கூடியவை இருப்பினும் இத்தகைய பாதிப்பு எந்த தருணங்களில் எத்தகைய வகையில் எவ்வளவு கால அவகாசத்திற்கு ஏற்படுகிறது? என்பதை துல்லியமாக அவதானித்து மருத்துவரிடம் எடுத்துரைத்தால் அவர்கள் இதற்கான முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

ஒவ்வொரு வகையினதான காரணங்களுக்கு வெவ்வேறு வகையினதான தலைச்சுற்றல் பாதிப்பு ஏற்படும். பச்சிளம் குழந்தைகளை தவிர்த்து ஆண்,பெண் என அனைவருக்கும் இத்தகைய பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம்.

ஆனால் தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு முழு முதற் காரணம் எம்முடைய காதுகள் தான். காதுகள் கேட்கும் திறனுக்கான பணியை மட்டும் மேற்கொள்ளாமல் எம்முடைய உடல் சமநிலையில் இருப்பதற்கான பணியையும் மேற்கொள்கிறது குறிப்பாக காதின் உட்பகுதியில் அமைந்திருக்கும்.ஃவெஸ்டிஃபுல் (Vestibule) என்ற பகுதியில் உள்ள நரம்புகள் தான், நாம் எங்கு நிற்கிறோம்? எப்படி நிற்கிறோம்? தலையை திருப்புகிறோம் உள்ளிட்ட பல செயல்களை நரம்பு வழியாக மூளைப்பகுதிக்கு சமிக்ஞையாக அனுப்புகிறது.

இந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது இந்தப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லும் இரத்த நாள பகுதியில் அடைப்பு அல்லது கட்டி ஏற்பட்டாலோ தலைச்சுற்றல் ஏற்படும்.

வேறு சிலருக்கு காதில் ஏற்படும் தொற்றின் காரணமாகவும் தலைச்சுற்றல்
ஏற்படும். எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணமாக காதுப் பகுதி
பாதிக்கப்பட்டாலும் தலைச்சுற்றல் ஏற்படும். இதனை மருத்துவ மொழியில்
Benign Paroxysmal Positional vertigo என்றும் குறிப்பிடுவர்.

இதனை எப்படிஉறுதிப்படுத்துவார்கள்?

6 common reasons you feel lightheaded | TheHealthSite.com
image source

மருத்துவர்கள் நோயாளியிடம் கிளினிக்கல் டயாக்னைஸ் எனப்படும் பாதிப்பு குறித்த விவரங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலம்
பாதிப்பின் தன்மையை கண்டறிவார்கள்.

மேலும் VEMP எனப்படும் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதன் போது காதில் உள்ள நரம்புகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். மிக சிலருக்கே எம்.ஆர். ஐ ஸ்கேன் என்ற பரிசோதனை மூலம் பாதிப்பினை கண்டறிவார்கள்.

சிகிச்சைகள் என்ன?

முதலில் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருந்து மற்றும் மாத்திரைகள்
மூலம் முழுமையான நிவாரணம் வழங்குவார்கள். தலைச்சுற்றல் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய பாதிப்பு என்பதால்,ஒருபோதும் சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு முறையும் மருத்துவரின் ஆலோசனையுடன் தான் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் இதனை புறக்கணித்தால் மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம், காது கேளாமை,இதய பாதிப்பு, பார்வைத் திறன் பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.

மீண்டும் மீண்டும் தலைச்சுற்றல் ஏற்பட்டால், மருந்து, மாத்திரைகளுடன்,
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக பயிற்சிகளை தொடர்ச்சியாக
மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு அதிலிருந்து நம்மை முழுமையாக
பாதுகாத்துக் கொள்ள இயலும்.

தசைகளை வலிமைப்படுத்துவதற்காக பயிற்சிகளை மேற்கொள்வதைப்போல் எம்முடைய உடல் சமநிலையில் இருப்பதற்கான பயிற்சியிலும் கவனம் செலுத்த
வேண்டும்.

இதற்கு தற்போது அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் லேசர் தெரபி உள்ளிட்ட பிஸியல் தெரபி பாணியிலான சிகிச்சை முறை
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

எம்முடைய உடல் சமநிலையில் இருப்பதற்கு காது, கண்கள், எம்முடைய
பாதங்களில் உள்ள நரம்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. மூன்று உறுப்புகளும் ஒருங்கிணைந்து முழுமையான திறனுடன் பணியாற்றுவதற்கான உடற் பயிற்சியினை பிரத்யேக இயன்முறை
மருத்துவர்கள் மூலம் தெரிந்துகொண்டு,தொடர்ச்சியாக செய்து வந்தால் தலைச்சுற்றல் என்னும் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக் கொள்ள
இயலும்.

விளக்கம் : Dr.S.வினோத் கண்ணா M.D D.M மூளை நரம்பியல் நிபுணர்

நாற்காலிகளில் நீண்ட நேரம் அமர்பவர்களுக்கு 6 அறிவுரைகள்

wall image

Post Views: 235
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இயக்குனராக

இயக்குனராக திரும்பியிருக்கும் நடிகை ரேவதி..!

  • October 30, 2021
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 70

  • October 31, 2021
View Post
You May Also Like
உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
View Post

உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!

உடல்
View Post

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!
View Post

இரவில் பயமின்றி சாப்பிட சில உணவுகள்..!

தலைகீழ் சிகிச்சை மூலம்  கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!
View Post

தலைகீழ் சிகிச்சை மூலம் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

தூக்க
View Post

தூக்கமின்மையும் மதுப்பழக்கமும் ஒன்றுதான்..!

குங்குமப்பூ
View Post

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

தண்ணீர்
View Post

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!

முதுகு
View Post

முதுகு வழியை விரட்ட நூதன வழி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.