இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
பன்னீர் என்பது பாலினால் உருவாக்கப்படுகின்ற ஒரு வகை உணவாகும். அதனை பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் டிக்கா என பல வகைகளில் வட இந்திய பாணியில் சமைத்து உண்ணலாம். சோறு சமைக்கும் பொழுதும் கூட பிரைட்ரைஸ்லோ அல்லது பிரியாணியில் கூட சிறிய துண்டுகளாக பொருத்திவிட்டு சேர்த்துக் கொள்ளலாம். அவர் என பல வகைகளில் முதலாவதாக நான் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நன்கு நறுக்கிய தக்காளிகள், செத்தல் மிளகாய் 2, கஜு வாசனைக்கு ஏதேனும் ஒரு இலை, சிறிது மஞ்சள்தூள், சிறிதளவு மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு அவிய விடவும். நன்கு 15 நிமிடங்கள் அதன் பின்னர் இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
தற்பொழுது அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணையை சேர்க்கவும். இப்பொழுது அதற்கு விலை பட்டர் ஒரு 200 கிராம் அளவில் சேர்க்கவும். பட்டர் நன்கு உருகியதும் அதற்குள்ளே இந்த பேஸ்ட் இனை ஊற்றி இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒன்றாக சேர விடவும்.
தற்பொழுது நன்கு வெட்டப்பட்டு உப்பில் ஊற வைக்கப்பட்ட பன்னீர் துண்டுகளை இதற்குள்ளே சேர்த்து கிளறி சற்று நேரம் விடவும். இறுதியாக அதற்குள்ளே சற்று சீனியும் அத்தோடு கிரீம் இருப்பின் க்ரீம் அல்லது தேங்காய் பால் சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி.
image source:https://vegecravings.com/paneer-butter-masala-recipe/