Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
iphone 12

ஐபோன் 12 வயர்லெஸ் சார்ஜிங்,கனன் பவர் ஜூம் மற்றும் பிஜிஹெச்1

  • October 15, 2020
  • 334 views
Total
16
Shares
16
0
0

ஐபோன் 12 என்ற பெயரைக் கண்டவுடனே ஓடி ஓடி வந்திருக்கும் தொழில்நுட்ப வாசகர்களை இந்த வார தொழில்நுட்ப புதிப்பிப்புக்களை வாசிக்க அன்புடன் வரவேற்கின்றோம். ஒவ்வொரு வாரமும் தனிச் செய்திகளாக வெளிவந்த எமது தொழில்நுட்ப தகவல்களில் இந்த வாரம் தொழில்நுட்ப உலகின் புதிய வெளியீடுகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம். இந்த வாரம் தொழில்நுட்ப செய்திகளில்,

கேனான் பவர்ஷாட் ஜூம்
Canon powershot zoom

ஐபோன் 12 வயர்லெஸ் சார்ஜிங்,கனன் பவர் ஜூம் மற்றும் பிஜிஹெச்1
source/PetaPixel

கேனான் நிறுவனம் பவர்ஷாட் ஜூம் என்ற தனது புதிய உற்பத்தியை அறிவித்துள்ளது. இது ஒரு அசாதாரண கேமரா, இது வழக்கமான புள்ளி மைய படப்பிடிப்பை விட வித்தியாசமாக டிஜிட்டல் மோனோகுலர் (இரு கண்களும் பயன்படுத்தக் கூடியது பைனாகுலர், ஒரு கண்ணால் பார்க்கக்கூடிய விம்பப் பெரிதாக்கி மோனோகுலர்) போன்றுள்ளது. நிறுவனம் சிறிது காலமாக இந்த யோசனையை வெளிப்படுத்தியபடி இருந்தது, அண்மையில் அதற்கான செயற்பாட்டை ஜப்பானில் மேற்கொண்டது. இப்போது அது அமெரிக்காவிற்கு வருகிறது.

பவர்ஷாட் ஜூம் என்பது ஒரு இலத்திரனியல் வ்யூஃபைண்டர் (தொலைவில் உள்ளவற்றைப் பார்க்க உதவும் கருவி) ஆகும். 1/3-இன்ச் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 800 மிமீ வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 100 மிமீ மற்றும் 400 மிமீ உடைய இரண்டு மாறக்கூடிய சமமான குவிய நீளம் கொண்ட ஒரு சிறிய சாதனம் ஆகும். லென்ஸ் f / 5.6-6.3, எனவே இது குறைந்த ஒளி பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது அல்ல . புகைப்படத்தின் தரம் பொதுவாக இந்த உற்பத்தியின் முக்கிய கவனம் இல்லை.

பறவைக் கண்காணிப்பு மற்றும் மலையேறுதல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை அனுபவிக்கும் நபர்களுக்காக இந்த தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி உண்மையில் முன்னேறினால் ஒலிம்பிக் விளையாட்டு போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள துணைப் பொருளாக இருக்கலாம்.இந்த கேமரா யூ.எஸ்.பி-சி மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. படங்களையும் வீடியோவையும் மைக்ரோ எஸ்.டி கார்டில் சேமிக்கிறது. மேலும் வைஃபை மற்றும் புளூடூத் வழியாக படங்களை ஸ்மார்ட்போனுக்கு மாற்றலாம்.

பவர்ஷாட் ஜூம் அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவில் $ 299.99 (INR 22029.02)க்கு விற்பனைக்கு வரும்.

ஆப்பிள் ஐபோன் 12ன் புதிய வயர்லெஸ் சார்ஜிங்
Apple iPhone 12 wireless charging

ஐபோன் 12 வயர்லெஸ் சார்ஜிங்,கனன் பவர் ஜூம் மற்றும் பிஜிஹெச்1
magsafe : source/GSMarena

ஆப்பிளின் புதிய ஐபோன் 12 வெளியீகள் புதுப்பித்த Qi தரநிலைக்கு ஏற்ப 15W வேகமான வயர்லெஸ் சார்ஜிங் வேகத்தை அணுககூடியவகையில் உள்ளன. ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டியுள்ளது: நீங்கள் ஆப்பிளின் புதிய MagSafe பிராண்ட் சார்ஜர் அல்லது ஒரு MagSafe – இணக்கமான ஒரு மூன்றாம் தரப்பு துணை தயாரிப்பை வாங்க வேண்டியிருக்கும். .

ஆப்பிள் தனது புதிய ஐபோன் 12 ஸ்மார்ட்போன் வரிசையை செவ்வாயன்று அறிவித்ததன் மூலம் ஐபோனுக்கான MagSafe பிராண்டிங்கை மீண்டும் அறிமுகப்படுத்தியது. மேலும் நிறுவனம் இப்போது ஒரு புதிய அம்சத்தை கூறுகிறது. அதில் “ஒவ்வொரு முறையும் வேகமாக வயர்லெஸ் சார்ஜிங்கிற்காக சரியாக காந்தங்கள் தங்களை இணைத்துக்கொள்கின்றன ” என அதன் தயாரிப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளன. ஆனால் ஆப்பிள் வெளிப்படையாகக் குறிப்பிடாதது என்னவென்றால், ஐபோன் 12க்கு அதன் தனியுரிம MagSafe பிராண்டு மட்டுமே அந்த வேகத்தில் சார்ஜ் செய்யுமெனவும், அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவான Qi சார்ஜிங் தரத்தைப் பயன்படுத்தும் சார்ஜர்கள் அவ்வளவு வேகமாக செயற்படுமென உறுதி அளிக்காது எனவும் தெரிகிறது.

புதிய ஐபோன் 12 வரிசைக்கான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது MagSafe சார்ஜிங்கிற்கு 15W மற்றும் நிலையான Qi வயர்லெஸ் சார்ஜிங்கிற்கு 7.5W ஆகியவற்றை குறித்துக் காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டில் ஐபோன் 8 முதல் ஒவ்வொரு ஐபோனும் Qi திறந்த தரத்திற்கு ஏற்ப வயர்லெஸ் சார்ஜிங் செய்யும் திறன் கொண்டது, ஆனால் ஐபோன் ஒருபோதும் 15W வரை சார்ஜ் வேகத்தைத் தொட முடியவில்லை.

ஐபோன் 12
magsafe : source/BGR

இது ஏன் என்று தெரியவில்லை. தொழில்நுட்ப வரம்பு உள்ளதா ? அல்லது இதை அனுமதிக்கும் MagSafe சார்ஜர்களில் தனித்துவமான ஏதாவது இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஐபோன் 12 வரிசையில் வேகமான வயர்லெஸ் சார்ஜிங்கை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சார்ஜரை வாங்க வேண்டும். ஆனால் மாக்ஸேஃப் அல்லாத மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்க முடியாது.

இப்போது கிடைக்கக்கூடிய ஒரே வழி ஆப்பிள் அதன் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யும் $39 மாக்ஸேஃப் சார்ஜர் மட்டுமே.

பெல்கின் மற்றும் கிரிஃபின் (இலத்திரனியல் விற்பனை நிறுவனங்கள்) ஆகியோருக்கு மாக்ஸேஃப் சார்ஜர்கள் இருக்கும். ஆனால் வேறு எந்த மூன்றாம் தரப்பு துணை தயாரிப்பாளரும் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற, அதன் MFi உரிமத் திட்டத்தின் மூலம் – இணைய வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. எந்தவொரு நிறுவனமும் கோட்பாட்டு அடிப்படியில் ஐபோன் 12 க்கு ஒரு காந்த Qi சார்ஜரை உருவாக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் நிறுவனம் வேகமான சார்ஜிங் வேகம் மற்றும் உபகரணங்களை அங்கீகரிப்பதற்கான NFC அடையாள அமைப்பு ஆகியவற்றை அணுக விரும்பினால், அது ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

ஆப்பிள், MagSafe மற்றும் இந்த வேகமான வயர்லெஸ் சார்ஜிங் தெரிவின் மீது வன்பொருள் கட்டுப்பாட்டை பராமரிப்பதை இந்த விஷயம் உறுதிசெய்கிறது. அதே நேரத்தில் நிறுவனம் MagSafe தயாரிப்புகளில் லாபத்தைக் குறைக்கும் என்றும் தெரிகிறது.

பானாசோனிக் லுமிக்ஸ் பிஜிஹெச் 1
Panasonic Lumix BGH1

ஐபோன் 12 வயர்லெஸ் சார்ஜிங்,கனன் பவர் ஜூம் மற்றும் பிஜிஹெச்1
source/theverge

பானாசோனிக் நிறுவனம் லுமிக்ஸ் பிஜிஹெச் 1 ஐ அறிவித்துள்ளது. இதனை நிறுவனம் “பெட்டி பாணியிலான கண்ணாடியில்லாத சினிமா மற்றும் நேரடி நிகழ்வுகளுக்கான கேமரா” என்று விவரிக்கிறது. இது நான்கில் மூன்று மைக்ரோ சென்சார் மற்றும் ஒரு சிறிய சதுரமுகி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கேமராவின் பக்கங்களில் ஒன்று லென்ஸ் இணைப்பில் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

பி.ஜி.எச் 1 ஆனது பல்பயன்பாடு, விரிவாக்கம் மற்றும் நிறுவல் எளிமைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் பிற சிக்கலான அமைப்புகளை உள்ளடக்கிய பல கேமரா சூழ்நிலைகளில் இதைப் பயன்படுத்த பானாசோனிக் திட்டமிட்டுள்ளது. கேமராவில் ஈதர்நெட் மூலம் சக்தி வழங்கல் உள்ளது. அதாவது அதை ஒரு வலையமைப்புடன் இணைக்கும் அதே கேபிள் மூலம் இயக்க முடியும். மேலும் அவற்றில் 12 இனை மல்டிகம் செயலியோடு வரும் லுமிக்ஸ் டெதர் மூலம் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தலாம்.

  • இதன் சென்சார் 10.2 மெகாபிக்சல்கள் ஆகும்.
  • இது 4 கே வீடியோ பதிவுக்கு கேமராவை மேம்படுத்தும்.
  • கேமரா 4:2:0 10-bit C4K/4K 60p or 4:2:2 10-bit All-I C4k/4K 30pயில் காட்சிகளை பதிவு செய்யக் கூடியது
  • ஒளிபரப்ப ஹைப்ரிட் லாக் காமாவில்/ Hybrid Log Gamma(எச்எல்ஜி) வை பயன்படுத்தி ஒளிபரப்பத் தயாரான நிலையில் HDR முறையில் பதிவு செய்யவும் முடியும்.
  • இரட்டை UHS-II எஸ்டி கார்டு வசதி
  • யூ.எஸ்.பி-சி 3.1, எச்.டி.எம்.ஐ தரவுமாற்றம் (4K 4:2:2 10-bit C4K/4K 60p வரை), 3G-SDI, 3.5 மிமீ உள்ளீடு/வெளியீடு செருகி, வைஃபை, புளூடூத் மற்றும் ஈத்தர்நெட், எஸ்.டி.ஐ அல்லது யூ.எஸ்.பி-சி வழியாக அனமார்பிக் காட்சிகளை வெளியிடும் திறன்.
  • யூ.எஸ்.பி மூலம் கேமரா கட்டுப்பாட்டு கருவிகளை பயன்படுத்த மக்களை அனுமதிக்க பானாசோனிக் ஒரு இலவச SDK ஐயும் வெளியிடுகிறது.

லுமிக்ஸ் பிஜிஹெச் 1 இந்த டிசம்பரில் $ 1,999.99 க்கு வெளிவருகிறது.

தொடர்ச்சியாக இதுபோன்ற தொழில்நுட்ப தகவல்களை பெற்றுக் கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடரவும்

Facebook 4K Likes

வேறு புதிய தகவல்களை அறிய எமது தொழில்நுட்ப தகவல்கள் பக்கத்துக்கு செல்லவும்

தொழில்நுட்ப தகவல்கள் பக்கத்துக்கு செல்ல

தகவல் உதவி : TheVerge

Post Views: 334
Total
16
Shares
Share 16
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
பராமரி

வீட்டை பராமரிக்கும் போது நீங்கள் விடும் 8 சிறிய தவறுகள்

  • October 14, 2020
View Post
Next Article
நோயெதிர்ப்பு

வைரஸை எதிர்க்க நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் 10 உணவுகள்

  • October 15, 2020
View Post
You May Also Like
வாட்ஸ்அப் அரட்டையர்கள் குழுவை நிரந்தரமாக மியூட் செய்யலாம்
View Post

வாட்ஸ்அப் அரட்டையர்கள் குழுவை நிரந்தரமாக மியூட் செய்யலாம்

இந்த ஸ்மார்ட் கழுத்து நெக்லஸ் உங்கள் உணவைக் கவனிக்கும்!!
View Post

இந்த ஸ்மார்ட் கழுத்து நெக்லஸ் உங்கள் உணவைக் கவனிக்கும்!!

சிறந்த 10 மொபைல் ஸ்மார்ட் போன்கள் - 2020
View Post

சிறந்த 10 மொபைல் ஸ்மார்ட் போன்கள் – 2020

Call of Duty: Mobile | விளையாட்டும் மில்லியன்களும்
View Post

Call of Duty: Mobile | விளையாட்டும் மில்லியன்களும்

அசிசன்ஸ்  கிரீட் இன் வரலாறு!
View Post

அசிசன்ஸ் கிரீட் இன் வரலாறு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.