மதுப்பழக்கம் எத்தனை தீங்கானது என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே
தெரியும். அதே அளவுக்கான தீங்கினை சமீப காலமாக அதிகரித்துவரும் தூக்கமின்மையும் உண்டாக்கி வருகிறது.என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்,
தூக்கமின்மைக் கோளாறு உடல் மற்றும் மன ரீதியாக என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்.
அதில் தான் இந்த பகீர் உண்மை தெரியவந்துள்ளது.மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்புக்கு சமமான அளவிலேயே தூக்கக் குறைவாலும் பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்த ஆய்வில் மருத்துவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
மேலும் இதன் மூலம் தூக்கப் பற்றாக்குறை அதிகம் உள்ளோர் விழித்திருக்கும் போது, மூளையின் சில பகுதிகள் மட்டும் தூக்கத்தில் ஆழ்ந்துவிட மற்ற பகுதிகள் விழித்திருக்கும் முரன் பாடான நிலையும் மூளையில் நிகழ்வதாக
கண்டறிந்துள்ளனர்.
அதனால், குடிகாரர்கள் மட்டுமே ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதாக
நினைக்க வேண்டாம். தொடர்ச்சியாக தூக்கம் தொலைக்கும் ஒவ்வொருவருமே
அதற்கு இணையான சீர்கேட்டைத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரவேண்டும். எனவே, ஒழுங்காக தூங்குங்க மக்களே..