இந்தியா உபகண்டமானது ஒரு தனி நாளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான கொவிட் -19 நோயாளர்களுக்கான எண்ணிக்கையில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. உலகின் மூன்றாவது அதிக தொற்றாளர்களைக் கொண்ட நாடான இந்தியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை 78,761 புதிய தொற்றாளர்களை வெறும் 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்தது. இதன் மூலம் கடந்த ஜூலை 17 அன்று அமெரிக்கா பதிவு செய்த எண்ணிக்கையை கடந்துள்ளது .
இந்த தொற்று இந்தியாவின் பின்தங்கிய பிரதேசங்களில் பெரிய பிரச்சனையாகவேயுள்ளது.
image source
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகளாவிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 25 மில்லியனைக் கடந்துள்ளது . 843,000 பேர் இதுவரை இறந்துள்ளனர். அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது, அமெரிக்கா இதுவரை ஆறு மில்லியன் தொற்றுநோயாளர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் திடீர் அதிகரிப்பின் பின்னணி என்ன ?
இருதய வைத்தியர், மனோஜ் குமார், Reuters பத்திரிக்கையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது: “இதுவே உலகின் தனிநாள் நோயாளர் அதிகரிப்பின் அதிக அளவாகும் – இதற்கான காரணம் அதிகளவான பரவல் பின்தங்கிய பிரதேசங்களில் இன்னும் இடம்பெறுவதால் தான் ” எனத் தெரிவித்தார்.
இந்திய நாடானது ஆரம்பத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் ஊடாக கோவிட் -19 தொடர்பான கட்டுப்பாடுகளில் சிறப்பாகவே இருந்து வந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து வந்த காலத்தில் நோய்த்தொற்று பெரு நகரங்களான மும்பை மற்றும் டெல்லி ஆகிய பெருநகரங்களைத் தாக்கி அதன் பின் சிறிய நகரங்களுள் ஊடுருவ ஆரம்பித்தது.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் கடந்து, அரசும் கட்டுப்பாட்டுத் தளர்வுகளை அறிவித்துள்ளது.
முகமூடி மற்றும் சமூக தொலைதூர நடவடிக்கைகளுடன், அடுத்த மாதம் முதல் கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் 100 பேர் வரை கூடிய கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெரிய நகரங்களில் நிலத்தடி புகையிரத வலையமைப்புக்கள் மீண்டும் திறக்கத் தொடங்குகிறது .
புற இரத்தநாள மற்றும் அக இரத்தநாள விஞ்ஞானத்தின் மெடந்தா பிரிவின் தலைவர் டாக்டர் ராஜீவ் பரேக் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில் : “எண்கள் குறையத் தொடங்கியதும், அவ்வளவும்தான் , நாங்கள் இந்தப் போரை வென்றுவிட்டோம் என்று மக்கள் நினைத்தார்கள். எல்லோரும் ஒரு முகமூடி கூட அணியாமல் , சிறிதும் சமூக இடைவெளி பேணாமல், வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
“இது நாங்கள் நடக்க அனுமதித்திருக்கக் கூடாத ஒரு தவறு .”
குறைவான அறிக்கையிடல் மற்றும் வரையறுக்கப்பட்ட சோதனை என்பவை முக்கிய கவலையாக மாறி இருக்கின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் இறப்புகளின் எண்ணிக்கை 63,000 என்பது மெக்ஸிகோ எண்ணிக்கையுடன் சமமாக உள்ளது. உலகில் அதிகம் தொற்றுடைய அமெரிக்க நாட்டின் மத்திய அமெரிக்க தேசத்தில் தொற்றாளர் எண்ணிக்கை இந்தியாவின் 3.5 மில்லியனுடன் ஒப்பிடும்போது 591,000 மட்டுமே.
தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் இருந்து இறப்பவர்களின் எண்ணிக்கையை இந்திய அரசு, பட்டியலில் இணைக்கிறது, ஆனால் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கையை இணைப்பதில்லை.
சோதனையின்போது, வெல்கம் டிரஸ்ட் / டிபிடி இந்தியா கூட்டணியின் தலைவரான வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல், ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ்ஸிடம் கூறியதன்படி:
“இந்திய நாட்டில் ஒரு மில்லியனுக்கு 30,000 என்ற அளவில் சோதனை செய்கின்ற அளவு (சோதனை வீதம்) முதல் 10 [வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட] நாடுகளில் இரண்டாவது மிகக் குறைவான அளவாக உள்ளது.”
இந்திய அரசாங்கம் இது தொடர்பாக என்ன சொல்கிறது ?
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி உரையை சமீபத்திய மைல்கல்லைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் வழங்கினார்.
குடிமக்களுக்கு விதிகளை கடைபிடிக்கவும், கொரோனா வைரஸைத் தோற்கடிக்க ஒற்றுமையாக இருக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
“ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம், நாங்கள் கொரோனா வைரஸை முற்றிலும் ஒன்றாக தோற்கடிப்போம்” என்று திரு மோடி கூறினார்.
“இரண்டு மீட்டர் பாதுகாப்பான தூரத்தை வைத்திருத்தல் மற்றும் முகமூடிகளை அணிவது என்ற தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றுவதன்மூலம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கும்போது மட்டுமே கொரோனாவை தோற்கடிக்க முடியும்.”
இந்த கொரோனா காலத்தில் நாம் மீண்டு விட்டோம் என்று பெருமூச்சு விடும்போதெல்லாம் நமக்கு எதிராக ஏதேனும் ஒரு செய்தி வந்து விடுகிறது. ஆனால் அதனை அறியாமல் நாம் நமது பாதுகாப்புக்களைத் தகர்த்து வெளியே செல்கிறோம். இந்த வேளையில் உங்களிடம் சரியான தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்க நாங்கள் முனைப்பாக உள்ளோம் .
புதிதாக வரும் எந்த ஒரு கொவிட் -19 பற்றிய தகவலையும் அறிந்துகொள்ள எமது கொவிட் -19 பக்கத்தை பார்வையிடுங்கள்.
தகவல் உதவி : பிபிசி செய்திகள்
Wall Image Source