முன்பே நிறுவப்பட்ட ஆப் ஸ்டோருக்கு (pre-installed App Store) வெளியே,
ஆண்ட்ராய்டு செயலிகளை சைட்-லோட் செய்யும் விருப்பத்தோடு(Android
Apps sideload) அல்லது APK கோப்பு வழியாக ஆன்ட்ராய்டு ஆப்ஸை
நிறுவும் திறனை Xiaomi சோதனை செய்து வருகிறது.
ப்யூர் மோட் (Pure Mode) எனப்படும் இந்த option ஆனது MIUI க்கு
அறிமுகப்படுத்தப்பட்டால், அதை இயக்கிய மொபைல் போன் பயனர்கள்
apk கோப்பு வழியாக ஆப்ஸை நிறுவும் திறனை இழப்பார்கள்.
சியோமி தனது மொபைல் போன் பயனர்களின் பாதுகாப்பிற்காக இந்த
நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Xiaomi பயனர்களால் நிறுவப்பட்ட சுமார் 40% apk கோப்புகள் பாதுகாப்பு
சோதனையில் தோல்வியடைவதாகவும், சுமார் 10% பாதுகாப்பற்ற
நிரல்கள் மொபைல் போன்களில் நிறுவப்படக்கூடாது என்றும் சியோமி
நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அம்சம் இன்னும் பீட்டா பயனர்களால் சோதிக்கப்படுகிறது, ஆனால்
சராசரி பயனருக்கு வெளியீட்டு தேதி பற்றி இன்னும் எந்த தகவலும்
இல்லை.
2025 க்குள் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஐ கைவிடவுள்ளது