கடந்த வாரம் உண்மையான சித்தர்கள் யார் , அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறானது என்பது சந்தேகங்களை தீர்த்து வைக்கும் கட்டுரைக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்த வாரம் போலி சாமியார்களை இனங்காண்வது எப்படி என்பது தொடர்பாக சித்தர்கள் விட்டுச் சென்றுள்ள குறிப்புக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
இந்தக் கட்டுரையும் இலங்கை சித்தர் பீடத்தைச் சேர்ந்த யோகி காகபுஜண்டர் கோபிநாத் அவர்களால் பகிரப்பட்டு அவரது அனுமதியுடன் வெளியிடப்படுவதாகும்.
யார் யார் போலி சாமியார்கள் ?
போலி சாமியார்களை இனங்காட்டி கொடுக்க சித்தர் காக புஜண்டரின் குறிப்புகள் கண்டிப்பாக உதவும்.
முதல் கூற்று:
குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்
கொடியமுறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே
அறியாமற் பிரமத்தைப் பாரா மற்றான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
வெறும்பி லுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாச மாகவுந்தான் தண்டு மேந்திப்
பார்தனிலே குறட்டிடு நடப்பான் பாரே.
இரண்டாம் கூற்று:
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி;
பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்;
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்;
பொருள்
மேலே உள்ள வரிகளின் சுருக்கப் பொருளை பார்க்கலாம் ;
அவர்களுக்கு வேதம் எல்லாம் தெரிந்திருந்தும், பிரம்மத்தின் மேல் அவர்கள் மனம் லயம் கொள்ளாது.
அவர்கள் சித்தர்கள் போன்ற பல பெரியோர்களை இகழ்வாய் பேசியிருப்பார்கள்.
அவர்கள் சொன்னதை மறைத்தோ, இல்லை அவர்கள் சொன்னதை பொய் என்றோ கூறியிருப்பார்கள்.
காவி தரித்த வேடதாரிகளாய் இருப்பார்கள் (பொய் சந்நியாசிகள்). கையில் தண்டோடு, அனைத்தும் அறிந்த மேதாவி போல் நடந்து கொள்வார்கள்.
மேலும் அவர்கள் முன்னதே கூறியதைப் போல ஆத்ம சத்சங்கத்திற்கும், ஆத்ம விஷேசங்களுக்கும், பொய் சொல்லி, காசும் வாங்கிக் கொண்டு, பிரம்மத்தை (அகப் பார்வையில் பர வெளி தரிசனம்) காட்டி இருக்கவும் மாட்டார்கள்.
இவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள். பார்த்து பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையை பலருடனும் பகிர்ந்து கொண்டு ஏமாற்றுக்காரர்களிடமிருந்து உங்களையும் இந்த சமூகத்தையும் காப்பாற்றும் பணியை செய்யுங்கள்.
கடந்த வாரம் உண்மையான சித்தர்கள் யார் என்பது பற்றி நாம் வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில துளிகள் உங்களுக்காக,
சித்தர்கள் பல்வேறு சக்திகளைக் கொண்டவர்கள்.
- படைத்தல், காத்தல், அழித்தல் , மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செய்பவர்கள்.
- இறவா நிலை பெற்று ஒளி உடலுடன் வாழ்பவர்கள்.
- சிலர் துரிய தியான நிலையில் இருப்பவர்கள்.
- சமூக சீர்திருத்தவாதிகள், அறிவியலார், இறைவனோடு ஒன்ற அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் சொன்னவர்கள் .
- இது சித்தர்கள் செய்த யோகம் சித்தர் யோகம் மற்றும் சிவயோகம் (இது வாசி யோகத்தின் உயர் நிலை)
- சித்த மருத்துவம் என்ற மருத்துவ முறை நிறுவியவர்கள்
இந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்க கீழே அழுத்தவும்
உண்மையான சித்தர்கள் யார் ? சித்தர்வாழ்வு பற்றிய கேள்வி பதில்
தகவல் உதவி : யோகி காகபுஜண்டர் – கோபிநாத்இலங்கை சித்தர் பீடம்