இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! ஒரு அலுவலகத்தில் உள்ள பல கம்ப்யூட்டர்கள் தொடர் இணைப்பின் மூலம் இணைக்கப்படுவது இன்டர்நெட் என்று அழைக்கப்படும். பல இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் செயற்கைக் கோள் மூலம் இணைக்கப்படுவது இணையத்தளம்.
இணையத்தளம் இயங்கும் முறை
அதாவது இன்டர்நெட் என அழைக்கப்படும். ஒரு சிலந்தியின் வலை போல் உலகின் பல பாகங்களை இணைப்பதால் இணையதளத்தை வெப்சைட் என்று அழைக்கிறார்கள். பல கணிப் பொறிகளை ஒரு தலைமை கணிப்பொறியுடன் இணைத்து அதிலிருந்து தகவல்கள் செயற்கை கோளுக்கு செல்கின்றன. செயற்கை கோளில் இருந்து வேறொரு தலைமை கணிப்பொறிக்கு செல்லும் தகவலானது அதனுடன் இணைக்கப்பட்ட மற்ற கணினிகளுக்கு தகவல்களை அனுப்புகிறது.
இந்த சேவையினை முகாமைத்துவப் படுத்துவது அந்த நாட்டினுடைய அரசாங்கத்தின் தொழில்நுட்ப பிரிவாகும்.தகவலானது பரிமாறப் படுவதற்கு இணையத்திலே இருக்கின்ற வெளியின்அளவினை தான் நாங்கள் டேட்டா என்று சொல்கிறோம். அதாவது ஒரு புகைப்படத்தின் உடைய அளவு 8 கிலோ பைட்டுகள் என்றால் அது உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் 8 கிலோ பைட்டுகள் அளவுடைய ஒரு புகைப்படமாக மிகப்பெரிய சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் தொலைபேசி கட்டணம் செலுத்தி பெற்றுக் கொண்ட டேட்டா அளவின் மூலம் 8 கிலோ பைட்களை அந்தச் சேவருக்கு நீங்கள் அளித்து அதன் மூலம் 8 கிலோ பைட்கள் அளவுடைய அந்த புகைப்படத்தை உங்களுடைய செல்லிடத் தொலைபேசியிலோ அல்லது கணினியிலோ பெற்றுக் கொள்ளலாம். இதுவும் கிட்டத்தட்ட பணம் கொடுத்து வாங்குவதை போன்ற ஒரு செயல் தான்.
இணையதளத்தில் உடைய வேகமானது இந்த தரவுகளை செய்மதி பரிமாற்றி மீண்டும் உங்களுக்கு கொடுப்பதற்கு தேவையான அளவு தொலைபேசி கோபுரங்களை அருகாமையில் அல்லது அதிக அளவாக நிறுவுவதில் தங்கியுள்ளது என்பதாலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகமாக போட்டியிட்டுக் கொள்கின்றன. இப்பேரவை தொழில்நுட்பச் சிக்கல்கள் நிறைந்த இந்த இணையத்தை நமது கரங்களில் எளிமையாக கொடுத்திருப்பது ஆக்கபூர்வமான செயல்களைசெய்வதற்கு. அதனை நாம் தவறாக பயன்படுத்துவது இந்த உலகத்துக்கு நாம் செய்யும் ஒரு துரோகமான செயலாகும்.
இந்த இணையத்தின் வேகத்தை அதிகரிக்க உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனம் எடுத்த முயற்சி பற்றி இங்கே காணலாம்.
image source:https://www.youtube.com/watch?v=ewrBalT_eBM