நீ யாரையும் நம்பி வாழாதே உன் வேலையை நீ செய் என்பது தான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த கடினமான பாடம்.
துரோகம்,வஞ்சம்,ஏமாற்றம்,அழுகை,வலி ,சங்கடம் இவைகளை தவிர்ப்பதற்கு இப்படிப்பட்ட கடினமான பாடங்களை கற்று தான் ஆகவேண்டும்.
வாழ்வில் நாம் கற்றுக்கொண்ட பாடம் மிகவும் அதிகம்
வாழ்க்கை நொடிக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது. உன் வாழ்க்கையை குறை கூறும் யாராலும் உன் வாழ்க்கையை ஒரு நொடி கூட வாழ இயலாது.
எனவே அடுத்தவர் வாழ்வை நீயும் குறை கூறாதே.உணர்ச்சி வேகத்தில் முடிவும் எடுக்காதே. இரண்டையும் நினைத்து ஒரு நாள் நிச்சயம் வருந்துவாய்.
சின்னச் சின்ன சந்தோஷங்களை அப்போதே அனுபவித்து விடு பின்னாளில் நீ தேடினாலும் அது கிடைப்பது அரிது.
யாரைப் பற்றியும் புறம் பேசாதே உன்னைப் பற்றியும் பேச சிலர் இருப்பார்கள்.
கடன் கிடைக்கிறதே என வாங்கும் முன் பலமுறை யோசித்துக் கொள் கடன் வாங்கும் போது இருக்கும் வேகம் கொடுப்பதிலும் இருக்கவேண்டும்.
வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமித்துக்கொள்.உன் சம்பளத்தை விட சேமிப்பு உன்னை காத்திடும். கையில் பணம் இருக்கும் போது ஆடிடாதே ஆடினால் அசதியில் ஒருநாள் தள்ளாடி விடுவாய்.
எளிமையாய் வாழ்ந்திடப் பழகிக் கொள் ஏனெனில் நீ எதையும் இங்கு வரும்போது கொண்டு வரவில்லை.போகும் போது எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை.
உனக்கு ஒன்று நிகழவில்லை என எப்போதும் வருத்தம் கொள்ளாதே அதைவிட சிறப்பான ஒன்று உனக்காக காத்திருக்கும்.
கோபத்தை காட்டிடக் கூட காலம் தாழ்த்து ஆனால் அன்பை காட்டிட நொடிப் பொழுதையும் தாமதிக்காதே
உனக்கு எளிதாக கிடைக்கும் ஒன்று உன்னைப் போன்ற ஒருவனுக்கு பல போராட்டங்களுக்கு பின்னே கிடைக்கும். எனவே கிடைப்பவற்றை மதித்துப் பழகு எவ்வளவு குழப்பம் வந்தாலும் கலங்கிடாதே குழப்பங்கள் வருவதே தெளிவடையத் தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்.
ஏனெனில் மூச்சுக்கூட முயன்றால் மட்டுமே வரும் யாரையும் குறைத்து எடை போடாதே வாழ்வில் நீ முழுமையாக எதையும் கற்று முடிக்கவில்லை வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிடு.
ஏனெனில் உன் இன்பத்தையும் துன்பத்தையும் உன்னைத் தவிர யாராலும் அனுபவிக்க இயலாது இதுபோல இன்னும் பலவற்றை வாழ்க்கை நொடிக்கு நொடி கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்…
உங்களை தூண்டி விட்டு, குறைத்துப் பேசி நிலைப்பவர்களிடம் இருந்து விலக 5 வழிகள்